ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2017

உண்மையான தியானமும் நாம் போக வேண்டிய மார்க்கமும்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் மனைவியும் எப்படி இருந்தாலும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.

எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்.

எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெறவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும்.

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

1.அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும்
2.முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும்.
3.அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி என்ற நிலையாகத்தான் வரும்.
4.ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது.

இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம்.
1.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
2.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
3.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
4.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
5.நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,
6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும்.
7.அவருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.