ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2017

ஜாதகம் ஜோதிடம் – கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் – “எல்லாம் மந்திர ஒலிகளே”

விஞ்ஞான அறிவு வருவதற்கு முன் மந்திர ஒலிகளே அதிகமாக இருந்தது. (இன்றும் உள்ளது).

மந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான் உணர்வின் எண்ணங்கள் எப்படி? என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் ஓதுவார்கள்.

அப்படித் திரும்பத் திரும்ப ஓதும் போது இந்த பூமியைப் பிளந்து (உணர்வலைகள்) அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் விளையவைத்து விளையவைத்து இந்த உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும்  இவையெல்லாம்

1.இவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ

2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு இங்கே இயக்குகின்றது.

3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது,

4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டது. தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.

5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

நீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்.

இவர்கள் சொன்னது மாதிரி

1.எதை எதையோ கூட்டிக் கழித்து

2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ

3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக வைத்து

4.அதனை மீண்டும் “விதியாக மாற்றி

அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா? கெட்ட நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா?

2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா?

3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா?

நமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். உடலிலிருந்து வெளிப்படும் கழிவுகளையும் உடனே கழிக்கின்றோம். இதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்கின்றோமா?

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

அதே மாதிரி எலி ஜோதிடம் கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து கரு எடுத்து அதற்குக் கொடுப்பார்கள்.

அந்தக் கருவைக் கொடுத்தவுடன் எலியோ கிளியோ இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான்? தன் விரலைக் காட்டி அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.

1.அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்.

2.விரலை அசைத்தவுடனே இங்கே பார்க்கும்.

3.பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு அடுத்த சீட்டை எடுக்கும்.

4.எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.

இதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.

(நாம் அவர்கள் கண்ணிலேயும் கை விரலிலேயும் இதைப் போல எத்தனையோ நிலைகளில் செய்வதை நாம் கவனிக்க மாட்டோம். அது நமக்குத் தெரியவும் செய்யாது)

இது எல்லாம் உலகம் முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா?

ஆக மொத்தம் நம்மை நாம் நம்பாமல் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம்.

அன்று அரசர்கள் காட்டிய வழியில் சரணாகதி என்ற தத்துவத்தில் “எல்லாம் அவன் செயல் என்று சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

நம் எண்ணத்தால் வந்த தீமைகளை நம் எண்ணத்தாலேயே எடுத்துப் போக்க முடியும். “அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் உண்டு என்று ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.


ஆகவே, உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். “உங்களால் முடியும்