நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ
நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித்
தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
2.இப்பொழுது கண்ணில் அந்த ஈர்க்கும் சக்தி அதிகரிக்கின்றது.
கண்ணின் நினைவினைப் புருவ
மத்திக்குக் கொண்டு வாருங்கள். புருவ
மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர்
வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அந்தச் சக்தி பெற வேண்டும்
என்று ஆசையுடன் ஏங்கி இருங்கள்
இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது
1.உயிரைத் தாண்டி உங்கள் உடலுக்குள் தீமையை
இயக்கும் உணர்வுகள் உள் புகாது தடுக்கப்படுகின்றது.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை நிலை நிறுத்தப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தி
அதிகரிக்கும்
3.உங்கள் உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு
ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
4.தீமையான அணுக்கள் உடலில் வளராது தடுக்கப்படுகிறது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியாநியுங்கள்.
உங்கள் புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தியும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உயிரிலே மோதும் பொழுது “ஒரு வெளிச்சம்” உருவாகும்.
உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இரத்த நாளங்களில் கலந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் உடலுக்குள் தீய வினைகளை விளைய வைக்கும் அந்த அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற
வேண்டும் என்று நினைவைச் செலுத்தப்படும் பொழுது
அந்தத் தீய அணுக்களும் அடிபணிந்து நல்ல அணுக்களாக மாறும் திறன்
பெறுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து
அதில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்
என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது இரத்த
நாளங்களில் உள்ள அந்த அணுக்கள் உற்சாகமடையும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலந்து உடல்
முழுவதும் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் செலுத்துங்கள்.
அந்த சக்தி அங்கே பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கித் தியானியுங்கள். உங்கள் உடல் உறுப்புகள்
அனைத்தும் இப்போது உற்சாகமடையும்.
1.இத்தகைய வலுவை நாம் அடிக்கடி ஏற்படுத்தி
இது ஒரு பழக்கத்திற்கு கொண்டு வந்தால்
2.தீமைகள் வரும்பொழுது எல்லாம் உடனுக்குடன்
அதை மாற்றிக் கொள்ள முடியும்
3.தீமையிலிருந்து விடுபட முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்