மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்
சிலர் கடுமையான மூச்சுப் பயிற்சிகளை
மேற்கொள்வார்கள். அதன் வழியில் “சுவாசிக்கின்றேன்…” என்று உயர் அழுத்தத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்…?
1.சுவாசப் பையில் காற்று நிரப்பப்படுகிறது.
2.அங்கே வடிகட்டத் தவறும் உணர்வுகள் சுவாசப் பையில் சேர்ந்தால்
என்ன நடக்கும்…?
3.ஆதிலே அழுக்குகள் சேரும். நாளடைவில்… இருமல் வரும்.
அதே அழுத்தத்தின் உணர்வு கொண்டு அடுத்து
நரம்பு மண்டலங்களில் சரம் என்று சொல்வார்கள். உணர்வை அடக்கி
நரம்புகளில் பாய்ச்சுவார்கள் சரத்தைப் போட்டு உடலிலே
பழகியவர்களிடம் பார்த்தோம் என்றால் தம் கட்டி நரம்புகளில்
ஏற்றுவார்கள்… பார்த்தால் வீரியமாக இருக்கும்.
சரம் என்ற நிலையில் மற்றதை அறியப் பயன்படுத்துவார்கள் அதே சமயத்தில் என்ன செய்யும்…?
1.நரம்புகளில் எடுத்துப் பழகிய பின் கடைசியில்
2.நரம்பெல்லாம் வலிக்கின்றது… கை கால் வலிக்கின்றது குடைகின்றது என்று
சொல்வார்கள்.
இது எல்லாம் சரத்தைப் போட்டுத் தனக்குள் கற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுவார்கள். சில அசுர உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
அழுத்தத்தின் தன்மை ஆகி “வாய்வு” என்ற
நிலைகள் உருவாகும்.
வாய்வு என்ற நிலைகள்
உருவாக்கப்படும் பொழுது தன் எண்ணத்தின் அழுத்தம் வரும்பொழுது
ஏரோபிளேன் எப்படி உணர்வின் அழுத்தம் கொண்டு மற்றதுடன் மோதி
அதை எப்படி மேலே மிதக்கச் செய்கின்றதோ மிதப்பார்கள். இந்த உணர்வின் தன்மைக்குச்
சில ஆவியின் உணர்வுகள் அதற்கு உண்டு.
அந்த உணர்வின் தன்மை
அழுத்தமாகி அதைப் பெருக்கப்படும்
பொழுது
1.சம்மணம் கட்டி இருப்பார்கள்… அப்படியே மிதக்க
ஆரம்பிப்பார்கள்… இதை ஒரு பெரிய வித்தையாகக் காட்டுவார்கள்.
2.சில வேலைகளைச் செய்து
பெரிய அற்புதத்தைக் கண்டேன் என்றும்
அவர்கள் சொல்வார்கள். மேலே வரையும் மிதந்து காட்டுவார்கள்.
இத்தகைய ஆவியின் தன்மை பெறுவதற்கு ஒரு மந்திரம் உண்டு அந்த
மந்திரத்தை நுகர்ந்தால் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது தன் உடலில் இருந்து
வரக்கூடியதற்கும் இதற்கும் மாற்றமாகித்
“தூக்கி நிறுத்தும்…”
ஆஹா… மிதக்கின்றார்…
பறக்கின்றார்… என்ற நிலை வரும். இது போன்ற பல அற்புதங்களையும்
செய்யலாம்
இந்த உடலிலே இப்படிப் பல நிலைகள் செய்தாலும் நாம் எந்த உணர்வின் தன்மை
சேர்த்துக் கொண்டோமோ இதையெல்லாம் விளைய வைத்து வந்தபின் என்ன செய்யும்…?
ஆவியின் தன்மைய அடையச் செய்து மற்றொன்றுக்குள்
ஊடுருவி இதே தீமைகளைச் செய்யச்
செய்யும். அதே போன்று வரிசைப்படுத்திச்
செல்லும்.
மனிதனாகப் பிறந்த பின் உடலில் உள்ள உறுப்புகள் வைத்திய ரீதியிலும் சரி மற்ற எந்த நிலைகளிலும் இதைக் கண்டு கொண்டு பல நிலைகளை விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகின்றனர்.
மெய்ஞான அறிவால்… ஓர் தாவர இனம் விஷத்தை முறிக்கின்றது நல்ல உணர்வை ஊட்டுகின்றது என்று காண்கின்றனர்.
அதைக் கண்டுணர்ந்து கலவைகளாக மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய சில அணுக்களை மாற்றி இரத்தத்தில் கலந்த பின் உடலில்
இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல வீரியம் ஊட்டுகின்றது… நல்ம் பெறச் செய்கிறது.
அதனுடைய உணர்வுகள் மீண்டும் அதற்குள் சேர்த்து மாற்றிக்
கொண்டே இருக்கலாம்.
உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைக்
கண் கொண்டு உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு எலும்புக்குள்
ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.
வயலிலே களைகள் முளைத்தால்… நீக்கினால் மீண்டும் அந்தக் களைகள் வருகின்றது. இதைப் போன்று நமது வாழ்க்கையில்
தீமை என்று உணர்வை உற்றுப் பார்க்கும் பொழுது ஊழ்வினையாக
வித்தாகி விடுகிறது.
வித்தாக ஆன பின் அதன் உணர்ச்சியைத் தூண்டிச் சுவாசிக்க நேரும். அந்த உணர்ச்சிக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது.
1.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில்
கலக்கப்படுகிறது.
2.கலந்த பின் மீண்டும் அந்த அணுக்களுக்குள்
சேர்க்கப்பட்டு தீய விளைவுகள் விளைகின்றது.
இதை மாற்றுவதற்காக வைத்திய ரீதியிலே ஆங்கில
மருத்துவத்தில் இதற்கு இரண்டையும் கலவை ஆக்கி உணவு வழி மாத்திரைகளாகச் செலுத்துகின்றனர். இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்திலும் கலக்கச் செய்கின்றனர். நல்ல சத்துக்களை அணுக்களுக்குக் கிடைக்கச் செய்து மாற்றியமைக்கின்றனர்
அந்த மருந்து ஊசி மூலமாகச்
செலுத்தப்பட்டு இரத்தத்திலே கலந்த அளவிற்குத் தான் சிறிது நேரம் சரியாக இருக்கிறது. அது இல்லை
என்றால் மீண்டும் அதனுடைய வேலை அதிகமாகிவிடும்.
1.நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணலாம்… சில காலமான பின் அந்த விஷத் தன்மை வேறு ஒரு நோயாக
வருகின்றது.
2.பின் அந்த நோய்க்கு மீண்டும் மாற்றுக் கொடுத்து
இந்த உடல் இருக்கும் மாற்றிக் கொண்டே வர
வேண்டியது தான்…!
முழுமையாகத் தப்ப முடியாது.