ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2024

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்


உதாரணமாக நல்ல தண்ணீர் குழாய்கள் செல்லும் பாதைக்கு அருகில் சாக்கடைத் தண்ணீர் போகக்கூடிய குழாய்களும் இருந்தால் சந்தர்ப்பத்தால் அந்தக் குழாய்கள் துருப்பிடித்து ஓட்டையாகி விட்டால் நல்ல தண்ணீருக்குள் அந்தச் சாக்கடை தண்ணீரும் கலந்து தான் வரும்.
 
இதே போன்று நாம் ரோட்டிலோ மற்ற இடங்களுக்கோ செல்கிறோம் என்றால்
1.மற்றவர்கள் உணர்வுகளை நாம் கவர்ந்து தெரிந்து தான் செல்கிறோம்… அவரின் உணர்வை இழுத்துத் தான் உணரச் செய்கிறது.
2.நல்ல எண்ணத்தோடு நாம் வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது
 
நல்லதை நினைத்து அந்தக் காரியத்தை நடத்த வேண்டும் என்று தான் செல்கின்றோம். ஒருவன் தவறு செய்கின்றான் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நல்ல தண்ணீருக்குள் சாக்கடை நீர் கலந்தது போன்று ஆகிவிடுகிறது.
 
அப்பொழுது நம் காரியத்துக்குச் செல்லும் பொழுது
1.அவன் வெறுப்படைந்ததோ தீமை செய்ததோ கோபமாக இருந்ததோ நாம் வேடிக்கை பார்த்தது
2.நல்ல உணர்வுகளுடன் இது மோதிக் கலந்து விடுகின்றது.
 
இதன் வழி தான் நாம் நல்லதை எண்ணிப் போகின்றோம்.தனுடன் குறுக்கே இந்த உணர்வுகள் வந்து மோதி ஆன்மாவிலே கலந்தபின் ழுத்து உள்ளே கொண்டு போய் சேர்த்து விடுகிறது.
 
1.அவனுடைய கண்ணின் உணர்வும் நம்முடைய உணர்வுகளும் இழுக்கப்படும் பொழுது உயிரிலே படுகிறது
2.அந்த நல்ல காரியத்தைச் செய்வதை விடுத்து விட்டு இந்த உணர்வு குறுக்கே வந்தபின்
3.ஆபீசிலேயோ கடையிலே உட்கார்ந்து பின் இது கலந்தது முன்னாடி வந்து விடுகின்றது
4.அங்கே நம் நல்ல காரியங்களைத் தடை செய்யும் விதமாகி விடுகிறது.
 
அப்படி என்றால் அங்கே சென்று அமர்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
 
நாம் பார்த்த அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நினைத்து அதை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால்
1.இங்கே அடைத்து விட்டு… அதை மாற்றி அமைத்து… உள்ளுக்குள் நல்ல உணர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
2.இரத்தத்திலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் கலந்த பின் அந்த உணர்வுகளை நல்லதாக்கச் செய்கின்றது
 
இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தான் இதைக் கொடுக்கின்றேன் ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு… அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்டேன்
1.உங்களுக்குச் சக்தியும் கொடுக்கின்றேன்... அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.நீங்கள் முயற்சி எடுங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்
3.உங்கள் எண்ணம் நிச்சயமாக அதை நிறைவேற்றும்.
4.நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும் நல்ல சிந்தனைகளை உருவாக்கி நல்ல நிலை பெற முடியும்.
 
ஆகவே எங்கு சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உடல் முழுவதும் படரச் செய்து விட்டு என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் செயல்படுத்துங்கள்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லாவற்றிலும் இப்படிப் போட்டு
2.இரத்தத்திலே கலந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதைத்தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வது.
 
சந்தர்ப்பத்தில் தீமையைப் பார்த்தோம் உயிரிலே பட்டு மோதுகின்றது உயிர் உருவாக்குகின்றது. சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை. உடலில் இருந்து வருவது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
 
எத்தனையோ உடல்களைக் கடந்து இந்த உடலான சிவத்தை உருவாக்கியது உயிர். இதிலிருந்து வளர்ந்தது தான் கார்த்திகேயா.
 
ரோட்டில் போகும் போது வெறுப்பான காரியங்களைச் செய்வதைப் பார்த்தோம். உயிரிலே பட்ட பின் ஓ என்று பிரணவமாக்கி அவன் செய்த உணர்வை ரத்தத்தில் கலக்கச் செய்து விடுகின்றது.
 
நம் ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தி அருள் ஒளியின் உணர்வு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் கார்த்திகேயா…!
 
தீமை என்று வந்தபின் வலுவான உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே இடமறித்துத் தீமை உள்ளே போகாது தடைப்படுத்திவிட்டு அதை வெளியே தள்ளி விட்டு விடுகின்றோம்.
 
ரோட்டிலே பார்த்த அந்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாது அணுக்களாக உருவாகாதபடி இப்படி நாம் தடுத்துக் கொள்கின்றோம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
 
1.இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டே வர முடியும்
2.அருள் உணர்வுகள் நமக்குள் பெருகிக்கொண்டே வரும்
3.இப்படித்தான் நாம் அதை வளர்த்து உயர்ந்த நிலைக்கு நாம் கொண்டு வர முடியும்.