ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்
மெய் ஞானிகள் சொன்னதை இன்று இழந்தே தான் நாம் வாழுகின்றோம்.
ஆனால் அகஸ்தியன் உண்மையை வளர்த்து… மனித உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைந்திருக்கின்றான் துருவ
நட்சத்திரமாக.
1.அவன் வளர்த்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக்
கொண்டால் அவன் ஈர்ப்புக்குள் சென்று பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.
இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதிக்கு
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆனான்.
அவன் கண்டுணர்ந்த நிலைகள்…
எல்லா நட்சத்திரங்களின் இயல்புகளைத் தனக்குள் எடுத்து ஒளியாக
மாற்றுகின்றான்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்லும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்
1.இயற்கையின் உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து
கொண்டவன்.
2.அவன் தெரிந்து அவனுக்குள் உணர்ந்து உணர்வின் அலைகளைப் பெருக்கியதை நாமும் நுகரலாம்.
ஒரு செடியில் வளர்ந்த உணர்வின் தன்மை அதனின் கசப்பை நுகர்ந்தால்
ஓய் என்று வாந்தி வருகின்றது. ஒரு கோபக்காரன் உணர்வினை
நுகர்ந்தால் நமக்கும் அந்த உணர்ச்சியின் வீரியங்கள் வருகின்றது.
ஒரு வேதனைப்பட்ட மனித உடலில் இருந்து வெளி வரும் உணர்வைச்
சூரியன் கவர்ந்து கொண்டால் அதை நாம் நுகரப்படும் பொழுது நமக்கும் வேதனையான
உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
இதைப் போல் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அகஸ்தியன்…
1.தனக்குள் வளர்த்து கொண்ட உணர்வலைகளைப்
பரப்பப்படும் பொழுது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது
2.அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை
வென்றானோ அதைப்போல
3.நமக்குள் விஷத்தின் தன்மையை மாற்றிப்
பேரொளி ஆக முடியும்.
4.உயிர் எப்படி ஒளியானதோ ஒரு நட்சத்திரத்தின்
இயக்கமாக இயக்கியதோ அதைப் போல நாம் ஒளியாக முடியும்.
நம் உடலிலே பல விதமான நட்சத்திரங்களின் தன்மை கொண்டுதான்
அணுக்கள் ஆனது.
ஆனால் அதை ஒன்று சேர்த்து இணைத்து
1.27 நட்சத்திரங்களைத் தனக்குள் உணர்வாக்கி
2.27 நட்சத்திரத்தினையும் துருவ நட்சத்திரம்
எடுத்து இணைத்து ஒளியாக மாற்றிய அந்த உணர்வும்
2.பிரபஞ்சத்தில் பரவும் மற்ற உணர்வையும்
இணைத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.
ஆகவே… உயிரை ஒளியாக மாற்ற
முடியும் என்று மாற்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
அதனை நீங்கள் பெறும்படி தான் இங்கே உபதேசித்துக் கொண்டு
வருகின்றோம்.