“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்
என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என் தொழில் நலமாக
இருக்க வேண்டும் என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் கல்வியில் ஞானம்
பெற வேண்டும் என்று இந்த உணர்வுடனே எம்மிடம் ஆசி பெற
வேண்டும்.
1.அப்படி நீங்கள் ஆசி
வாங்கினால்
2.அவ்வழி நடக்கும் என்று நான் (ஞானகுரு) உணர்த்தும் போது அந்த அருள் வழி நிச்சயம் நடக்கும்.
அதை விடுத்து விட்டு “சாமி தான்
செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்.
1.ஞானகுரு சொன்ன கருத்துக்களை நாம்
பெற்றோமென்றால்
2.அந்த உணர்வுகள்
நமக்கு நல்வழி காட்டும் என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
“சாமி எல்லாமே செய்து தருவார்” என்று மற்ற சாமியார்கள் பூசாரிகள் செய்வது போன்று இந்தச் சாமியும் செய்து
செய்வார் என்று எண்ண வேண்டியதில்லை.
உங்களுக்குள் அருள் ஞான வித்தை ஊன்றுகின்றேன். அது உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
காரணம் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு ஆலயம். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம்
பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும்
அந்தப் புனிதம் பெற வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அதை விடுத்து விட்டு என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது
எதிர்த்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றான் தொழில் இப்படி
நசிந்து கொண்டே இருக்கின்றது குழந்தைகள் நன்றாகப் படிக்கவில்லையே என்று எண்ணினால்
1.என்னுடைய பிரார்த்தனையின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படி வந்து சேரும்…?
2.நீங்கள் எடுக்கும் உணர்வுகள் நான் பாய்ச்சும் உணர்வுகளை ரிமோட் செய்து குப்பைக்குப் போ என்று தள்ளிக் கொண்டே இருக்கும்.
ஆகவே யாம் கொடுக்கும்
வாக்குகளை நீங்கள் சரியான முறையில் (யாம் சொல்லும் முறைப்படி) நீங்கள் எடுத்துக் கொண்டால்.
1.ஒரு அதிசயத்தக்க அற்புதமான நிலைகளைக் காணலாம்
2.நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.
ஞானிகள் காட்டிய அருள் வழியில்… உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று
எண்ணி ஏங்கி உடலுக்குள் பகைமைகளை மாற்றி அருள் உணர்வுகளைப்
பெருக்கிக் கொள்ள முடியும்.
உடலுக்குள் எண்ணத்தால்
ஒன்று சேர்ந்து வாழும் கல்யாணராமா…! என்ற நிலையைத்தான் உங்களுக்குள் இப்பொழுது உபதேசித்து வருகின்றேன்.
இந்த உபதேசத்தின் உணர்வுகளைப்
பெற வேண்டும் என்று ஏங்கி இந்தச்
சுவாசம் எடுத்தாலே போதுமானது.
நண்பனாகப் பழகி பகைமை ஆகிவிட்டால் “துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று அமெரிக்காவில் இருப்பவனை எண்ணினாலும் இந்த உணர்வுகள் இயக்கி அங்கே புரையோடுகின்றது.
அதைப் போன்று
1.அந்த மகரிஷிகளின்
அருளைப் பெற வேண்டும் என்று தபோவன குருபீடத்தை எண்ணி நீங்கள் எடுத்தாலே போதுமானது.
2.எல்லோருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும்
என்று நீங்கள் வெளிப்படுத்திய மூச்சலைகள்
3.உங்களுக்குள் எளிதில் கவரப்பட்டு உங்கள்
சிரமங்களைப் போக்க முடியும்.
இது உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
நீங்கள் வெளிவிட்ட மூச்சலைகள் எதுவும் விரயமாவதில்லை. அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற
வேண்டும் என்று குரு பீடத்தில் நினைவைச் செலுத்தினால்
2.நீங்கள் ஒவ்வொருவரும் இட்ட மூச்சலைகள் அனைத்தும்
உங்களுக்குக் கிடைத்து பலருடைய உணர்வுகள் உறுதுணையாக வரும்
3.பகைமைகளை அகற்றச் செய்யும்… உங்களை நலம் பெறச் செய்யும்.
ஆகவே… நோயைப் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை அருளைப் பெற வேண்டும் இருளை நீக்க
வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ
வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
வாழ வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்தாலே போதுமானது. இதை
எல்லாம் நீங்கள் கடைப்பிடியுங்கள்.
இருந்த இடத்திலிருந்து நீங்கள் தபோவன குரு பீடத்தை எண்ணி உயர்ந்த சக்திகளைப் பெற முடியும். உங்கள் உடலிலே அந்த அருள் உணர்வுகள்
பாயும்.
ஏனென்றால் என்னுடைய பிரார்த்தனையே
1.நீங்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான
வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகரிஷிகளின் அருள்
வட்டத்தில் வாழ வேண்டும்
3.உங்கள் வாழ்க்கை நலமும் வளமும் பெற
வேண்டும் என்று தான் என்னுடைய ஆசைகள் எல்லாம்.
உங்கள் உயிர் கடவுள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றேன் இவ்வாறு நான்
பிரார்த்தனை செய்யும்பொழுது உங்கள் நினைவுகளை வேறு பக்கம் செலுத்திக் கதவைப் பூட்டிவிட்டால் என்ன செய்வது…?
1.உங்கள் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும்
என்று வருகின்றேன்
2.கதவை மூடிக் கொண்டால்
நான் என்ன செய்ய முடியும்…?
அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று
நீங்கள் விரும்பினால் அந்த உயர்ந்த நிலை நிச்சயம் ஏற்படும். அருளைப்
பெருக்கி இருளைப் போக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே
குருநாதர் காட்டிய அருள் வழியின் நோக்கங்கள்.
நாம் தேடி வைத்த எந்தச்
செல்வமும் நம்முடன் வருவதில்லை இந்த உடலும் நமக்குச்
சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்கப்பட
வேண்டியது
1.உயிருடன் ஒன்றி அந்த துருவ நட்சத்திரத்தின்
உணர்வை
2.அந்த அழியாச் சொத்தைச் சேர்த்து வாழ்வதே மனிதனின் கடைசி நிலை.
இதை நாம் அனைவரும் பெறுவோம்…
குரு அருள் உறுதுணையாக இருக்கும்.