ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2024

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”


ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்டக் கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன. முந்தைய பாடத்தில் ஓம் என்ற நாதத்தின் நிலையைச் சிறிதளவு விளக்கியுள்ளேன்.
1.ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…?
2.அவ் ஓம் என்று ஒலி எப்படி ஒலிக்கின்றது…?
 
விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…? மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அம் மின் விசிறி சுழலுகின்றது.
 
சுழலும் நிலையில் காற்றை நாம் எவ் எண்ணில் வைத்து சுழல விடுகின்றோமோ (அதாவது எம் மீடியத்தில் அக் காந்த மின் அலையைப் பாய்ச்சுகின்றோமோ) அதன் தன்மை கொண்டு அது சுழல்வதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று அந்நிலையில் உள்ளதை உணர்கின்றோம்.
 
நம் பூமி சுழல சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து
1.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.
2.காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன
3.நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி
4.அதி காற்றாய் இப்பூமியைச் சுழலவிடும் அவ் ஓசைதான் ஓம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.
 
இவ் ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.
 
ஏனென்றால் நம் பூமி எதெதையெல்லாம் ஈர்த்து, உண்டு கழிக்கின்றதோ அச்சக்தியெல்லாம் நமக்கும் உண்டு. நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள். நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.
 
நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.
 
இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும் பூவையும் இக்காற்றே மோதிச் செல்கின்றது.
 
1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அவ் ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மம் வீசிடாது.
4.அம்‌ மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் நம் மணமே வீசுகின்றது.
 
இக்காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள நீர் தான் ஜீவசக்தி…
 
இக்காற்று நம் பூமியில் வீசிடும் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு. ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…
 
மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறுகொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில் அக் காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் நம் பூமியைக் காட்டிலும் அதிகம்.
 
ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத் தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.
 
சூரியன் வளர்ந்து கொண்டே சக்தியைப் பெற்றுக் கொண்டே சுழன்று ஓடிக்கொண்டே அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே இருந்திட்டாலும் நம் பூமியின் ஜீவசக்தி சூரியனுக்கில்லை…
 
அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி.
1.நம் பூமியின் ஆத்மாவிற்கே அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.
2.இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி நம் பூமிக்குகந்த நிலையை
3.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளத்தான் போகிறது இன்னும் சில காலங்களில்.
 
நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்கள் ஆக்கி தார் ரோடுகளாகவும் இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும் பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தி தாவரங்களின் இன வளர்ச்சியைக் காடுகளை எல்லாம் அழித்துப் பூமியின் பொக்கிஷங்களை எல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காக பாழ்படுத்தி விட்டோமே…!
 
நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது தன்னைத்தானே காத்துக் கொள்ளும். இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய் ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ அதைப்போல்
1.நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
2.எத்தருணத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில் தான் நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்றுள்ளது.
3.இதனை உணர்ந்து நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய கால கட்டத்திற்குள் சக்தி நிலை பெறும் பக்குவ நிலை எய்திடல் வேண்டும்…
 
நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு. நம் சக்தியையும் அச் சக்தியே காக்கும் பக்குவத்தை வழி முறையை நாம் உணரல் வேண்டும்.