நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்
உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்…
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப்
படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக்
கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்…
நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள்
படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை…
நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து… நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வளரப்படும்
பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.
ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது
அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன்
செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.
அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ
எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை
செய்கின்றாய்.
ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன்
உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.
இந்த உணர்வினைச்
சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை
எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.
ஒவ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த
உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!
அந்த உணர்வின் தன்மை கண்கள்
வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே
கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படரப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில்
விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது
போகின்றான்.
கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும்
தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால்
எண்ணி… எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.
கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற
உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற
உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.
அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே
கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை
உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள்
உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும்
அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று
விடுகின்றது.
இந்த உடலின் ஆசைக்கு
வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது…
நீசமாகி விடுகின்றது.
உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது…
அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான
பின் அருகிலே நிற்க முடிவதில்லை.
இயற்கையின் உண்மை நிலைகள்
இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை
“உயிருடன் ஒன்றச் செய்தால்” இருளை
அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து
செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
ஆகவே… மனிதனாகப்
பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா
நிலை அடைவதே கடைசி நிலை.