அகஸ்தியன் உணர்வை உனக்குள் நீ அணுவாக மாற்று…! என்று கூறினார் குருநாதர்
நம்மை மனிதனாக உருவாக்கியது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் கடவுள். நம்மை தெய்வமாகக் காத்தருளியது அம்மா அப்பா தான்
அவர்களே நமக்கு முதல் தெய்வம்…!
குருவாக இருந்து நமக்கு நல் வழி காட்டிய முதல் குரு தாய்
தந்தையர் தான். ஆகவே அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அகஸ்தியன் தாய்
கருவிலே நஞ்சினை வென்று இருளை அகற்றி
மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
2.அவன் உடலில் விளைந்த இருளை அகற்றி
மெய்ப்பொருள் காணும் அருள் சக்திகள் இங்கே உண்டு.
அதைப் பெறச் செய்யத்தான் என் குரு எனக்குள்
பதிவாக்கினார்.
காடு மேடெல்லாம் சென்றேன்.
1.அகஸ்தியன் சென்ற
இடத்திற்கெல்லாம் அலைந்து அந்த உணர்வினை நுகரச் செய்து அவன் அறிந்த அறிவை எனக்குள்ளும் அறியச்
செய்தார்.
2.அகஸ்தியன் உணர்வை நீ அணுவாக மாற்று…! என்று
கூறினார்.
காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… அந்த
உணர்வுகளை அறிந்தேன் அதை வளர்த்தேன்… ஆனால் இப்பொழுது
நீங்கள் இங்கிருந்து அதைப் பெறும்படி உங்களுக்குள் ஞான வித்தாக ஊன்றுகின்றேன்.
அகஸ்தியன் அருள் ஒளியைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் இருளை அகற்றி மெய்ப்பொருளைக்
கண்டுணர்ந்து வாழச் செய்யும்… “அப்படி வாழ்ந்திடும் அருள் உணர்வுகள் உங்களுக்குள்
விளைய வேண்டும்” என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.
அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினை உயிருடன் ஒன்றி… “அகஸ்தியன் பெற்று இருளை
அகற்றிய அந்த அருள் ஞானைம் என்னிலே விளைய வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவினைப் புருவ
மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவனைத்தையும் அகஸ்தியன் வாழ்ந்த
காலத்திற்குச் செலுத்தி
2.அகஸ்தியன் பெற்ற
அரும்பெரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானங்கள்.
அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது
நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய் உணர்வை அறிந்து… தனது
வாழ்க்கையில் மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
அகஸ்தியன் உடலிலிருந்து
வெளிப்பட்ட அந்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே பரவி உள்ளது…
அதை நாம் பெற வேண்டும். அகஸ்தியன் பெற்ற அவனில் விளைந்த அந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அவனின் வளர்ச்சியில் துருவனாகி அனைத்தையும் அறிந்து அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று
நோக்கி துருவத்திலிருந்து நம் பூமிக்கு வரும் அரும் பெரும்
சக்தியை அவன் நுகர்ந்து
3.அதன் உணர்வின் தன்மை தனக்குள் உணர்த்தித்
தனக்குள் வளர்த்துக் கொண்டதை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.