
“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்
நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை
உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி…
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி
இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.
இதைப் போன்று இயற்கை நியதிகள்
வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப
வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும்
உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும்
போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் படர வேண்டும்
என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.
என் உடலில் உள்ள இரத்த
நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… என் உடலில்
இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள்
அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
என்று எண்ணுங்கள்.
கண்ணின் நினைவு எவரை
உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற
வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய
உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.
ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில்
கிடைக்கும்.
உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் இலேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால்… உடனே முடியுமா…?
அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.
ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை
வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.
இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை
இயக்குகின்றார்கள். அதிலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…?
என்று உடனே அதை சரி செய்வதற்காக “மாற்று அழுத்தங்களை” அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம்
வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக்
காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,
நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால்
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு
சீராக வரவில்லை என்றால் உடனே
அழுத்தத்தை மாற்றி… வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.
கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம்
எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை
உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி
இப்படிச் செய்கின்றான்.
இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள்
நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த
அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.
நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.
அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின்
உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான்.
அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும்
அறிந்தான் அகஸ்தியன்.
அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச்
சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக்
கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது
பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை
எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது
உங்களிடம் சொல்கிறேன்.
இந்த உணர்வினை நீங்கள்
பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம்… உங்களுக்குள் வரும் இருளை மாற்றி
அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.
இவ்வாறு எதை நீங்கள்
மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது
ஊட்டுகின்றது.