“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்
“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உங்கள் உயிரை
குருவாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் உயிரை “குருவாக
மதித்து… ஈசனாக மதித்து…” வாழ்தல்
வேண்டும்.
ஆலயங்களில் ஈசனுக்கு எப்படி அடிபணிகின்றோமோ இதைப்போல
1.நம் உயிருக்குத் தீமை
என்றோ தீமையான சொல் என்றோ இவையெல்லாம் நாம் நுகர்ந்தால்
2.நம் உயிரிலே பட்டு உயிரான ஈசனுக்குத் தீமையின் உணர்ச்சிகளை ஊட்டப்படும் பொழுது
3.ஈசனுக்கே தவறு செய்கின்றோம் என்ற
பொருளாகின்றது.
அதே சமயத்தில் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உயிரே
குருவாக இருக்கின்றது. ஆகவே குருவுக்கு
இன்னலோ சலிப்போ சங்கடமோ ஏற்படும் நிலைகளை நாம் செய்தல் ஆகாது.
ஆகவே நமது உயிரை
ஈசனாகவும் குருவாகவும் மதித்து நடத்தல் வேண்டும்.
சஞ்சலத்தையோ சங்கடத்தையோ கோபத்தையோ குரோதத்தையோ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.உயிரான ஈசனை
அசுத்தப்படுத்துகிறோம் என்று பொருள்.
2.உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் உயிர் உருவாக இருப்பதனால் “குருவுக்குத் துரோகம் செய்கிறோம்” என்று பொருள்.
ஏனென்றால் இதே உயிர் தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து ஒவ்வொரு
சரீரத்திலும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து
நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுகளை
அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றி… உடல்களை மாற்றி… குணங்களை மாற்றி… மனிதனாகும் பொழுது இவையெல்லாம் தீமை
என்று நினைத்துத் தீமையை அகற்றக் கூடிய வல்லமை பெற்றது “ஆறாவது அறிவு…”
நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை
மலமாக மாற்றிடும் உணர்வினை உயிர் தான் உருவாக்கியது.
நஞ்சினை மலமாக மாற்றப்படும் பொழுது நஞ்சு என்ற நிலையோ தீமை என்ற நிலையோ நாம்
நுகர்ந்தறிந்தால் அந்தத் தீமைகள் உயிரான ஈசனுக்குப்
படும்பொழுது அந்த நஞ்சினையும் அந்த உணர்வுக்கொப்ப அது
உருவாக்கிவிடும்.
1.ஆகவே ஈசனாக மதிக்கத் தெரிந்த நாம் தீமை
என்ற உணர்வுகளை நுகராது
2.அவ்வப்பொழுது மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து
மனத்தூய்மை செய்து கொள்ள வேண்டும்.