ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2024

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்


அன்று மெய்ஞானி தெளிவான நிலைகளில் சகலத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான். அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
1.அதைத்தான் என் குரு வழி துணை கொண்டு நுகர்கின்றேன்
2.அந்த உணர்வின் இயக்கத்தை என் உணர்வால் அறிகின்றேன்
3.உணர்வின் இயக்கத்தை எனக்குள் இயக்குவதைக் காணுகின்றேன்.
4.அந்த உணர்வினைச் செவி வழி உங்கள் உணர்வுகளை உந்தப்படும் பொழுது கண் வழி உங்களை நுகரச் செய்கின்றேன்.
 
பேரண்டத்தின் உண்மையை உணர்ந்து இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலைகளை
1.உயிரால் நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளைந்து அதை நுகரப்படும் பொழுது
2.அருள் ஞானத்தின் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் பெறுவீர்கள் பெற முடியும் என்பதனைத் தான்
3.எமது குருநாதர் எனக்கு ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை இன்று உங்களுக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
 
அகண்ட அண்டத்தில் பெருகி வருவதை ஒருக்கிணைந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமென்றால் மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்துஇனிப் பிறவியில்லா நிலை அடைய இது பேருதவியாக இருக்கும்.
 
உங்களிலே இது விளைந்து அதை நான் கண்டு மகிழ்ந்தால் எனக்குள் பேரின்பம் வளர்கின்றது. நீங்களும் இந்த உணர்வின் தன்மையைப் பிறர் செய்யும்படி இந்த உணர்வுகளை ட்டி அங்கே இது விளைந்து அதை நீங்கள் கண்டு பெருமைப்பட்டால் நன்றாக இருக்கும்
 
ஆகவே உயிர் எப்படி ஒளியானதோ தைப் போல
1.27 நட்சத்திரங்களின் உணர்வை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் நீங்கள் பெற வேண்டும்.
 
அந்த உணர்வுகளை அகஸ்தியன் அறிந்த அறிவையும் குருநாதர் கண்ட உணர்வும் எம்மைப் பெறச் செய்த இந்த உணர்வுகள் அறிந்த உணர்வுகள் எமக்குள் பெற்றதை உணர்வலைகளாக மாற்றப்படும் பொழுது ஒலி எழுப்பும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது.
 
1.உயிருடன் இந்த உணர்வுகள் பட்டபின் உங்கள் கண்ணிலே பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வலைகள் இங்கே இருப்பதை இழுக்கின்றது.
3.அவன் வளர்ந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வு பெற்ற அவனின் ஆற்றலை நீங்கள் எளிதாகப் பெற்று
4.விஞ்ஞான அறிவில் வரும் இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வு நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன் வளர்த்துக் கொள்ளுங்கள்.