ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2024

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்


காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.
 
1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…
 
குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.
 
இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.
 
இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமித்தைத் தான் ஈர்க்கும்.
 
மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும் செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.
 
இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.
 
இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.
 
நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.
 
இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.
 
இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும் நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.
 
இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும் பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும் பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.
 
ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.
 
1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.
 
இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.
 
சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.
 
இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் இச்சக்தி நிலையுண்டு என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.
 
இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.
 
இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.
 
1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.
 
இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?