ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2024

உறுப்புகள் தியானம்

உறுப்புகள் தியானம்


சிறுகுடல் பெருங்குடல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடல் முழுவதும் ர்ந்து சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது சிறுகுடலும் பெருங்குடலும் வீரியமடைகின்றது.
 
குடல்களில் வரக்கூடிய உபாதைகளோ ஆகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையோ இது போன்ற குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நாம் தியானித்தால்
1.நமது குடலில் வளர்ச்சி அடைந்த அணுக்களை வீரியமடையச் செய்து
2.சாப்பிடும் ஆகாரத்தை நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
 
இப்பொழுது சிறுகுடல் பெருங்குடல் உற்சாகமடைவதை உணரலாம்.
 
கணையங்கள்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
சாப்பிடும் ஆகாரத்தை ஆவியாக மாற்றி அமிலமாக மாற்றும் அந்தக் கணயங்கள் ஒவ்வொரு விதமான நிலைகளாகப் பிரித்துச் சீராக்குகின்றது.
 
சர்க்கரை ஆலைகளில் “கெமிக்கலைப் போட்டு அழுக்குகளைப் பிரித்து நல்லதாக மாற்றிக் கொண்டு வருவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பிரித்து மூன்று விதமான நிலையில் அது மாற்றுகின்றது.
1.கணையங்களை உருவாக்கி அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் வலுவை ஏற்றப்படும் பொழுது
2.சத்துகளைச் சமமாகப் பிரித்து நல்ல உணர்வை ட்டும் நற் சக்தியாக மாற்றுகின்றது. 
 
கல்லீரல் மண்ணீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
பெரிய கல்களையும் அடுத்து சிறு கல்களையும் அடுத்து மணல்களையும் போட்டு அதன் மூலம் அழுக்குத் தண்ணீரை வடிகட்டினோம் என்றால் அழுக்குகள் அங்கே பிரிக்கப்பட்டு நல்ல நீராக அது மாறுகிறது.
 
அதைப் போன்று கல்லீரலை மண்ணீரலும் அமிலமாக மாற்றுவதைப் பரிசுத்தப்படுத்தி நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
 
நுரையீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
ஒரு இன்ஜினுக்குள் பெட்ரோல் சென்ற பின் அதை ஆவியாக மாற்றி இன்ஜினை அது எப்படி இயக்குகின்றதோ அதைப் போல்
1.அமிலமாக மாற்றியதை நுரையீரலுக்குள் சென்ற பின் வாய்வாக மாறி அதன் உணர்வு கொண்டு
2.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் இதன் துணை கொண்டு இயக்கும் சக்தி பெறுகின்றது நமது நுரையீரல்.
 
வெளியிலிருந்து காற்றை இழுப்பதும் நம் உடலுக்குள் தீமைகளைக் கழிப்பதும்
1.அருள் உணர்வைப் பெறச் செய்வதும் அனைத்துமே இந்த நுரையீரல் தான்.
2.ஆகவே தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தியை நுரையீரலை உருவாக்கி அணுக்களை நாம் பெறச் செய்தல் வேண்டும்.
 
ஆனால் வேதனை என்ற உணர்வின் நுகர நேர்ந்தால் சளி போன்ற நிலைகளும் ஆஸ்துமா போன்ற நிலைகளும் டிபி போன்ற நிலைகளும் கேன்சர் போன்ற நோய்களும் உருவாகக் காரணமாகி விடுகின்றது.
 
இதைப் போன்ற தீமைகளை நீக்க நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ங்கினால்
1.உடல் முழுவதுக்கும் நல்ல சுவாசத்தை அனுப்பி
2.நல்ல அணுக்களை இயக்கி நமக்குள் நல்ல உணர்வை உருவாக்கும்.
 
வேதனையான உணர்வை உடலில் சேர்த்தால் இந்த உடல் முழுவதும் படர்ந்து எல்லாமே சோர்வடைந்துவிடும்… உறுப்புகளும் சோர்வடைந்துவிடும்.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்ட அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியினை உங்கள் நுரையீரலை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று ங்கிப் பெறச் செய்யுங்கள்… வலிமை பெறச் செய்யுங்கள்.
 
கிட்னி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே வீரியமடையச் செய்தால்
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகளைப் பிரித்து நமது இரத்தத்தைச் சுத்தமாக்கும்.
 
அவ்வாறு சுத்தமாக்கும் அந்தக் கிட்னிக்கும் சிறுநீரகத்தை உருவாக்கி அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை அங்கே செலுத்தி அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்களை வீரியமடையச் செய்யுங்கள்.
 
அது வலிமை பெற்றால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகள் வராதபடி தடுக்க இது உதவும்.
 
இருதயம்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் ர்ந்து இருதயத்தை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்தால் சிந்திக்கும் வலிமையும் வரக்கூடிய தீமைகளை அகற்றிடும் வலிமையும் பெறக்கூடிய தகுதி நாம் பெறுகின்றோம்.
2.உடல் முழுவதற்கும் அந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்தி நம் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கும் அந்த அருள் சக்தி பெறுகின்றது.
 
சிந்திக்கும் ஆற்றலும்… தீமைகளை அகற்றும் வலிமையும் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறக்கூடிய சக்தி நம் இருதயம் பெறுகின்றது.