ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2024

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?


கஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.
 
மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.
 
பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.
 
இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய வித்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால் விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.
 
இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.
 
விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.
 
உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!
 
எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து விபத்து ஆகின்றது.
 
உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.
 
இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.
 
அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.