குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து
1.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குக் குருநாதர் எம்மை எத்தனையோ இம்சைப்படுத்தினார்.
2.ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப்படுத்தினார்.
3.எப்படி எப்படியெல்லாம் உணர்வுகள்
மாறுகின்றது… உருவாகின்றது
4.சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…?
5.அந்த உயிர் எத்தனை நிலைகளைக் கடந்து வந்தது…?
6.அப்படி உருவாக்கிய உயிரை யாரும் மதிக்கவில்லையே
உடலைத்தான் மதிக்கின்றார்கள்.
7.நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது
எது…?
8.இதை மக்களுக்கு நீ எடுத்துச் சொல் என்றார்
குருநாதர்.
ஆண்டவனுக்கு நீ சேவை
செய்கிறாய் என்றால் ஒவ்வொரு உடலையும் அந்த உயிர் ஆளுகின்றது அந்த
ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…?
அந்த உடல் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்…!
நான் சொல்வதை இந்த அருள் உபதேசங்களை நீங்கள்
நுகரப்படும் போது உங்கள் ஆண்டவனுக்கு இந்த உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.
கோவிலிலே பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால்… அந்த நல்ல தெய்வ குணத்திற்குப் பாலாபிஷேகம் செய்கின்றார்கள்
அது போல உங்கள் நல்ல குணத்தைக்
காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று எண்ண
வேண்டும்
ஆனால் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால் நடக்கின்றது…?
வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வீர்கள்… அப்போது வேதனை
தான் முன்னாடி இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்குப் பாலாபிஷேகம்
செய்தால் எப்படி இருக்கும்…? விஷத்தில் பாலை ஊற்றினால் அந்தப் பாலும் விஷமாகத்தான் மாறும்.
1.அது போல் நான் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.
2.நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
3.எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பயனற்றதாக
ஆக்கி விடாதீர்கள் என்று.
ஏனென்றால் குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழகுதல் வேண்டும்.
உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும் அவனை மதித்து
அந்த அருளைப் பெற்றால் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.
உடலிலே உபாதைகள் வந்து உறுப்புகள் கேட்டு… அதற்கு வேண்டிய ஆபரேஷனோ மற்றதை எல்லாம் செய்தாலும் கூட அடுத்து நாம் எங்கே செல்கின்றோம்…?
அந்த வேதனை என்ற விஷத்திற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது.
கார்த்திகேயா… தெரியச் செய்கிறது சேனாதிபதி பாதுகாக்கும் சக்தியையும் இந்த உயிர் கொடுத்தது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்று மனிதன் நாளை எடுத்துக் கொண்டால் நுகர்ந்த வேதனை உணர்வுக்கொப்ப
வேறொரு உருவை மாற்றி விடுகின்றது.
இது போன்று குருநாதர் பல நிலைகளையும் என்
உடலிலே பாய்ச்சி…
1.கெட்டதை நுகரப்படும்
பொழுது உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்று பல மணி
நேரம் காட்டினார்.
2.அவஸ்தைப்பட்டுத் தான்
அறிய முடிந்தது.
3.அதை மீண்டும் எப்படிச் சரி செய்து கொண்டு
வர வேண்டும் என்று அவர் சொன்ன நிலைகளைத் தெரிந்து
4.அதை நல்லதாக மாற்றி உங்களிடம் இப்பொழுது
சொல்கின்றேன்.
ஆகவே மகரிஷிகளின் அருல்
சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலம் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும்
சக்தி பெற வேண்டும் என்று
1.நீங்கள் எண்ணி எடுத்தால்
2.நான் சொல்லக்கூடிய வாக்கு நிச்சயம்
உங்களுக்குள் பயனுள்ளதாக வேலை செய்யும்.