ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2024

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்


மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.
 
பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…? சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச்சூரியனக்கும் தான்என்ற நிலை வந்துவிட்டால் கோடி கோடி கோடி ஆண்டாய் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.
 
1.மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும்.
2.அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
3.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும் சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.
 
அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப்பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குதான் தெரிந்திடும் அனைத்துமே.
 
அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு பல கோடி ஆண்டுகள் வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால் தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.
 
இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய் புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகி அச்சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான், நம் நிலை உயர்ந்திட முடியும்.
 
இதனை உணர்ந்தே
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கு என்ன ஏற்றத்தாழ்வு…?
3.ஆண்டவன் அளித்த கஷ்டம் என்று வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல்ஞானம் பெறும் நிலையை எய்திட நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
5.எப்படி எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
6.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினை முதல் பாடமாய்ப் பெறும் வழியினை உணர்த்திடுவேன்.
 
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாய் உணரல் வேண்டும்.
 
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.
 
அவ்வுயிர் அணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே, நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.
 
நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிரணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்,
 
1.நம் உடலில் உள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலம் ஆக்கி
2.பரமாத்மாவின் சொத்துதான் நாம் என்பதனை உணர்த்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்படுவதினால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.
 
ஒவ்வோர் உடலில் இருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்களுக்கு அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.
 
இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.
 
ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு சுவாசமுண்டு அமில சக்தியுமுண்டு மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால் இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்.
1.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில்
2.நம் உடலில் உள்ள உயிரணுக்களைத் தான் நம் வசப்படுத்திடல் வேண்டும்…
3.நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளப் பக்குவம் பெறல் வேண்டும்.