தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”
இவ்வுலகமே வேடிக்கையான உலகம்தான். உலகம் என்பது இவ்வுலகின்
ஜீவ ஆத்மாக்கள் தான். இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே
இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை
உணர்த்திட முடியும்.
சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ
அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று
மண்டலம்) அம் மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.
நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டுள்ள
அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும்
அதன் அமிலக் காற்று மண்டலமுண்டு.
நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொண்டுள்ள
கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமும் உண்டு. அனைத்திற்கும்
பொதுவான சூனிய மண்டலம் என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று… அதன் தன்மை
வேறு.
மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு.
இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப்பொருள்
வளர அதற்கு மூலப்பொருளாய் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப்பொருள்கள் வளர
முடியும்.
இவ் இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும்
சிங்கத்திற்கும், நாய், நரி, பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.
இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப் பொருளையே
செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையில் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின்
சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன்
ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியிலிருந்து எடுக்காமலும் பணம் தந்து
வாங்காமலும் செய்விக்க முடியும்.
தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள்
இப்பேராசையில் சிக்கிடாமல் தன் ஆத்மாவையே தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள
இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.
1.நம்முள்ளையே அனைத்துப் புதையலும் உள்ளன.
2.அழியாச் செல்வ புதையல் இச்சக்தியை உணர்ந்து நம் சக்தியை வளர விடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா.
தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ
நிலைப்படுத்தி செயல் கொண்டு “தியானமும், ஞானமும் நாம் பெறுவது நமது ஆத்மாவிற்குத்தான்…”
1.நம் எண்ணம் செயல் எல்லாமே நமக்குச் சாதகமாக
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
3.நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம்
4.மற்றவர்களுக்கு அந்நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந் 'நான்' என்ற நிலை வந்து விடுகிறது.
நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம்
என்ற நிலையில் நாம் இருந்தாலும்
1.நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன்
2.நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.