ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2024

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?


குருநாதர் எம்மைப் பல இன்னல்களைப் படச் செய்தார்… எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் உருவாகிறது…? என்று.
 
சில இடங்களில் மிருகங்கள் வருகிறது என்றால் நான் கையை நீட்டினால் போதும்… அவைகள் கீழே விழுந்து விடும். எனக்குச் சக்தி இருக்கிறது என்று நான் நினைக்க முடியுமா…?
 
ஒரு பாதையில் என்னைப் போகச் சொல்கின்றார் குருநாதர். யானை வருகின்றது பார்த்தவுடன் பயம் வருகின்றது யானை என்னைத் தாக்கிவிடும் என்று நினைக்கின்றேன்.
 
யானையை நீ தோஸ்து (நண்பன்) பண்ணுடா என்று குருநாதர் சொல்கின்றார். தோஸ்த் பண்ணுவது என்றால் எப்படி…? என்று குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.
 
ஆனால் யானையை பார்த்ததும் பயம் தான் வருகின்றது. ங்கே நான் தோஸ்த் செய்வது…? காதை விடைத்துவிட்டது என்றால் நிச்சயம் அடிக்கும்
 
ஏனென்றால் நான் வேட்டைக்குப் போய்ப் பழக்கப்பட்டவன். காதை மட்டும் யானை விடைத்து விட்டால் வ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் யானை விடாது.
 
பார்த்துக் கொண்டே இருக்கும்… நாம் நகர்ந்தோம் என்றால் ஓடி வந்து லபக்கு என்று நம்மைப் பிடித்துவிடும்.
 
இந்த மாதிரி நிலை இருந்ததால்… “யானை என்னை அடித்து விடும் என்ற பயம் தான் அப்பொழுது எனக்கு வந்தது. குருநாதரை நினைக்கின்றேன் சாமி…! என்று சொல்கின்றேன்.
 
முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று சொல்கின்றார்.
 
எங்கே சாமி என்றேன்…! சத்தம் போட்டால் அடித்து விடும். மனதில் தான் நான் நினைக்கின்றேன்.
 
தோஸ்து செய்டா… சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றார். நான் கொடுத்த சக்தியை வைத்து யானை உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை உன் உடலிலே ஏற்றுடா என்று சொல்கிறார்.
 
1.ஒருவன் நம்மைப் பயமுறுத்துகிறான் என்ற உணர்வு வந்தால் அந்த வாசனை நமக்குள் வரும்.
2.எதிரி என்ற நிலையில் நம்மைத் தாக்க வருகிறார் என்றால் பார்த்தவுடன் அந்தப் பயமுறுத்தக் கூடிய உணர்வு வரும்.
3.யார் பார்த்தாலும் அந்த பயம் நடுக்கம் வரும். அதைப் பற்றிக் கேட்டவரும் ஏன் பயப்படுகிறாய்…? என்று கேட்பார்கள்.
4.இதே மாதிரி யானையின் உணர்வை நீ நுகரு என்று சொல்கிறார் குருநாதர்.
 
அவர் சொன்ன முறைப்படி அதை எடுத்து எனக்குள் கொஞ்சம் ஏற்றிக்கொண்ட பின் காதை விடைப்பதை யானை விட்டு விட்டது.
 
ஏனென்றால் அந்த இடம் கொப்பங்கள் கட்டி யானைகளைப் பிடிக்கக்கூடிய இடம். முன்னாடி ஆண் யானை குச்சியை வைத்துத் தரையில் ஊன்றி அதைப் பார்த்துக் கொண்டே வருகின்றது பின்னாடி மற்ற யானைகள் வரிசையாக வருகின்றது. அந்த நேரத்தில் மனிதனைக் கண்டால் எப்படி இருக்கும்…?
 
ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி யானையின்த்தை நான் ஏற்றுக் கொண்டதால் அவைகள் பேசாமல் நகர்ந்து செல்லுகின்றது எல்லா யானைகளும்.
 
ஆனால் அதிலே ஒரு குட்டி யானை என்ன செய்கின்றது…?
 
அது சும்மா செல்லாதபடி என்னை வந்து உடலில் தட்டுகின்றது. உடனே திரும்பி மற்ற யானைகள் முறைத்துப் பார்க்கின்றன.
 
பயத்தால் நான் ஏதாவது கையையோ காலையோ நீட்டினேன் என்றால் போச்சு…! ஆனால் யானை அது என்னிடம் விளையாடுகின்றது... முட்டிப் பார்க்கின்றது. மற்ற யானைகள் கொஞ்ச நேரம் நின்று பார்க்கின்றது.
 
குருநாதர் அனுபவத்திற்கு இப்படிக் காட்டுகின்றார்.
 
1.ஈஸ்வரா என்று குருநாதரை நினைத்து அந்தக் குட்டி யானை விலகிச் செல்ல வேண்டும்
2.அதற்குண்டான புத்தி வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.
 
ஆனால் பயந்திருந்தேன் என்றால் நிச்சயம் யானை என்னை விரட்டிவிடும்.
 
இப்படித்தான் சந்தர்ப்பத்தில் என்னை அங்கே சிக்க வைத்தார். சக்தி கொடுத்தாலும் ஞானம் கொண்டு எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று காட்டுகின்றார்.
 
ஆனால் அடுத்தாற்போல் குருநாதர் “கெக்கெக்கே…” என்று சிரிக்கின்றார். ஒன்றுமே தெரியாதவன் என்று சொல்லுகின்றாய். என்னடா…? யானையெல்லாம் மடக்குகின்றாய்..! பயந்தேன்…! என்று சொன்னாய் ஆனால் இப்பொழுது யானையை மடக்குகின்றாயே…! என்றார்.
 
இந்த மாதிரி தையும் செய்யச் சொல்வார் எல்லா அனுபவத்தையும் கொடுக்கின்றார்.
 
ஆகவே குருநாதர் காட்டிய வழியில் நாம் தெளிந்த மனம் கொண்டு
1.ஒளியின் சரீரமாகப் பெற்ற அருள் ஞானிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் நுகர்ந்து
2.இருள் சூழா நிலைகளாக எப்பொழுது கொண்டு வருகின்றமோ அப்போது நாம் முழுமை அடைகின்றோம்.
3.நீங்கள் முழுமை அடைய அந்த அருளைப் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய உபதேசம்.