மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்
ஒருவன் தவறு செய்கின்றான் என்று பார்க்கின்றோம். ஆனால் தவறை அவன் நமக்குச் செய்யவில்லை. பிறருக்குத்
தவறு செய்கின்றான் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது அந்தத் தவறின் உணர்ச்சிகள் நமக்குள் வந்து தவறு செய்கின்றான் என்பதை உணரச்
செய்தாலும் அந்தத் தவறின் உணர்ச்சிகளை ஊட்டினாலும் அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் அதே
உணர்ச்சிகளை ஊட்டித் தவறு செய்யும்
உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக நம் அணுக்களை மாற்றி
விடுகின்றது.
அப்பொழுது நாம் என்ன
செய்ய வேண்டும்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்கின்றோம் நாம் எப்படி வாழ வேண்டும்…?
1.ஒருவரை நாம் பார்க்கப்படும் பொழுது அவருடைய
தீமை நமக்குள் வந்தால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
2.தவறு என்ற அந்தச் சிறு
திரையை நாம் நீக்க வேண்டும்… திரையை நீக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
3.நம்முடைய ஆன்மாவில் அத்தகைய தீமைகள்
பட்டால் மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டால் “துடைத்த பின் தான்” முகம் தெரிகின்றது.
அழுக்குப் படும்போது நம்முடைய
மனது பிறருடைய மனதை அறிய முடியாதபடி நம்மை அறியாமலே வேதனைப்
படும் பொழுது என்ன செய்வது…? என்று அறியாதபடி அந்த வேதனைகள்
தூண்டப்பட்டு தீமையைத் துடைப்பதற்கு மாறாகக் கண்ணாடியை உடைக்கும் தன்மை வந்து விடுகின்றது.
கண்ணாடியை உடைத்து விட்டால் என்ன செய்யும்…? முகத்தைப் பார்க்க முடியுமா…? இதைப்
போன்ற நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கையில் சதா இது நடந்து கொண்டே
இருக்கின்றது.
இதை அவ்வப்பொழுது நாம் மாற்றிப் பழக வேண்டும் அல்லவா.
ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி இத்தகைய இருளை எல்லாம் வென்ற ஒரு நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை உடலுக்குள் சேர்த்து நம் ரத்தங்களிலே
கலக்கச் செய்து இருளை மாற்றிப் பழகுதல்
வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து
பழகுதல் வேண்டும்
ரோட்டிலே செல்லுகின்றோம்… உடையில் தூசி படுகின்றது… துணியைத்
துவைத்து விடுகின்றோம். ஏதோ ஒரு பொருளைத்
தொடுகின்றோம் அழுக்காகி விடுகின்றது… சாப்பிடுவதற்கு முன் நம் கையைக் கழுவிக் கொள்கின்றோம்.
ரோட்டிலே ஒருவன் வேதனைப்பட்டுக்
கொண்டிருக்கின்றான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்த பின் இரத்த்த்தில் அழுக்காகப்
படுகின்றது. அந்த வேதனையைத் துடைக்க வேண்டும் அல்லவா.
நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய உணர்வுகள் அந்த நல்ல குணங்களிலே சித்திரையாக அதை மாற்றி
விடுகின்றது.. சிறு திரையாக மூடுகின்றது.
அந்த வேதனை உணர்ச்சி
தான் முன்னணியில் வருகின்றது. ஆனால்
1.அதை நீக்க வேண்டும் என்று நிலைகள் தான் வரவேண்டும்.
2.அதை நீக்க வேண்டும் என்றால் வேதனைகளை
எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம்
3.அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து தீமைகளைப் பிரித்தல் வேண்டும்.