ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2024

துருவ தியானம்

துருவ தியானம்


தியானம் இருப்பர் அனைவரும் காலையில் நான்கிலிருந்து ஆறரைக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோம் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் ரத்த நாளங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள ஜீவ அணுக்களில் அதைப் பெறச் செய்யும் போது ஏற்கனவே நமக்குள் சங்கடமான சலிப்பான வெறுப்பான வேதனையான பகைமையான எத்தனையோ வகையான கொடிய நோய்களை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நம் சுவாசத்தின் வழி உள்ளே செல்லாதபடி” அந்தத் தீமையான உணர்வுகளை தடுத்துக் கொள்ள முடிகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இவ்வாறு வலுப்படுத்தும் போது
1.காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிப்படும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகள் ஒடுங்கி சூரியனின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்றுவிடும்.
3.சூரியன் அதைக் கவர்ந்து தன் அருகில் கொண்டு சென்று அந்தத் தீமையானணர்வுகளை அங்கே கருக்கி விடுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு நம் மூதாதையர்களான முன்னோர்களின் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்தால்… உடலில் பெற்ற நஞ்சால் ஏற்பட்ட நோயை உருவாக்கும் நிலைகளை அங்கே கரைக்கச் செய்து விடுகின்றது.
 
உயிருடன் ஒன்றிய நல்ல உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் சக்தியைக்வர்ந்து என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடையச் செய்கின்றது.
 
அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற உணவினை அடிக்கடி எண்ணினோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்
2.சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும் நம் உடலில் அவை எளிதில் பெறப்பட்டு
3.பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது போன்ற தீமைகள் வராது தடுக்க முடிகின்றது.
 
அருள் மகரிஷிகள் உணர்வினை நமக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடையும் முழுமை அடைய இது உதவும்.
 
ஆகவே ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தை அனுதினமும் செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில் பாக்கி எந்த நேரம் வேண்டுமென்றாலும் துரு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலில் ரத்தத்தில் கலக்கச் செய்து தீமைகள் வராதபடி தடுக்கலாம்.
 
சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ சங்கடமோ கோபமோ வேதனையோ, பயமோ இது போன்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கி நம் ஆன்மாவை வலுப்படுத்தி
1.பயத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் போக்கி சிந்தித்துச் செயல்படும் மன வலிமை பெற்று
2.பொருறிந்து செயல்படும் திறன் பெற்று வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளலாம்.
3.மன பலத்துடன் வாழலாம் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்.
 
இவ்வாறு செய்து வந்தால் தொழிலையும் சீராகப் பார்க்க முடியும் உடலையும் குடும்பத்தையும் பண்புடன் பார்த்துக் கொள்ள முடியும்.
 
வாழ்க்கையில் நிம்மதியும் இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலையும் இன்னொரு உடல் பெறாத நிலையும் அடைய முடியும்.