
ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?
அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப்
போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது
களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால்… அந்தக் களைகளுக்குக் கிடைக்கும்
சக்திகளைக் குறைத்து விடுகின்றது.
ஆனால் அதே சமயத்தில் களைக்கு
வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும்
பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக்
கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.
பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது… ஆனால் அதிலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச்
சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை இரத்தத்திலே
கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.
பயிரைக் காக்க விஞ்ஞானத்தின்
மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான்.
ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.
இதே போல பருத்திச்
செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை
இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின்
தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.
அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின்
அதை ஆடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால்
அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி
உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது
எத்தகைய விஷமோ காற்றிலே அந்த விஷத்தின்
தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை இழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.
நம் சுவாசத்தின் வழி
உடலுக்குள் சென்று இரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில்
விஷத்தன்மையாக பரவுகின்றது.
சிலர் கருப்பு நீலம் இதைப்
போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள்
என்றால்
1.அவர்களுக்குக் கை
கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்…
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.
அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து
விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு
அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான
ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.
விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை
சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது
நம் உடலில் ஆடையாக அணிந்த
நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக
மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து உடலிலே
பெருகத் தொடங்குகின்றது.
அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள்
எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே
இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது
செயல்படுகின்றது.
கடந்த காலங்களில் அன்றைய
ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.
தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச்
செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே
கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில்
வருவதில்லை…”
ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து
சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.
இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால்
பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள்
கிடையாது.
கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.
1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல
அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம்
உடலில் உருவாகின்றது.
இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.
பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த
வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர அஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத்
தெரிந்து கொள்தல் வேண்டும்