தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்
சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வு தான் இன்று நம்மை
மனிதனாக உருவாக்கியது.
1.மனிதனான பின் தீமை என்று உணர்ந்த பின் அதை
நீக்க
2.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் உருவாக்கினால் இது வலுப்பெற
3.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது “அதை எரிபொருளாக” மாற்றியமைத்துவிடும்.
இன்று விறகை எரித்த பின் அது கருகி விடுகின்றது. எண்ணெய்
ஊற்றி நெருப்பினை வைத்த பின் ஒளியைத்
தருகின்றது, எண்ணெய் தீர்ந்தால் இதுவும் தீர்ந்து
விடுகின்றது.
இதைப் போலத் தான்
1.நம் உடலில் உள்ள
உணர்வுகளை எரிபொருளாக மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சக்தி பெறக்கூடிய தகுதி பெற்றது இந்த ஆறாவது அறிவு.
இப்படி ஒளியாக மாற்றும் தன்மை பெற்ற
1.அந்தத் துருவ
நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உங்களை நுகரச்
செய்வதற்கும்
2.அதைக் கவரச்
செய்வதற்கும் இந்த உண்மையின் உணர்வைப் பதிவாக்குகின்றேன்.
உங்களை ஒருவர் திட்டி விட்டார் என்றால் அதைப் பதிவாக்கி விட்டால் “என்னை இப்படித்
திட்டினானே…” என்று எண்ணினால் அப்போது உங்களுக்குக்
கோபம் வருகின்றது.
அந்த கோபமான நிலைகள் வரப்படும் பொழுது… பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தால் மிளகாயை ஜாஸ்தி போட்டு
அதைச் சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள்.
ஆண்கள் இதே மாதிரி திட்டியவனின்
நினைவு வந்தால் அங்கே கணக்கு சீராக எழுத மாட்டார்கள். ஒரு இயந்திரத்தை
இயக்கினாலும் அதைச் சீராக இயக்குவதற்கு மாறாக அந்த உணர்வின் தன்மை தவறு செய்யும் நிலைக்கு இயக்கி
விடுவார்கள். இதைப் போல “பதிவான அந்த உணர்வுகள்” அங்கே அதை இயக்கி விடுகின்றது.
நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது நமது குரு அருளை உங்களுக்குள் பதியச் செய்து
1.துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தின் சக்தியை
அது துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்ற உண்மையினை
உணர்ந்து
2.அதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது “ஊழ்வினை” என்ற வித்தாகப்
பதிவாகின்றது.
ஒரு கோபிப்போன் உணர்வை உற்று
நோக்கினால் அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.
மீண்டும் அந்தக் கோபிப்போனை நினைக்கும்
பொழுது அது நமக்குள் இரத்தக் கொதிப்பாக
மாறுகின்றது… உடலிலே கடும் நோயாக மாறுகின்றது.
இதைப் போல இவை அனைத்தையும் நீக்கியவன் அகஸ்தியன் துருவனாகி
துருவ மகரிஷி ஆனது. அந்த உணர்வினை நுகர்ந்தால் தீமை என்ற நிலைகளை மாற்றி அமைக்கும்
சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.