பேரருள் பேரொளி
மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை என்று
வரப்படும் பொழுது மனிதனையே சீர்குலையச்
செய்யும் உணர்வுகளாக அது வளர்ந்து விடுகின்றது இதிலிருந்து
நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.
ஆனால் அதிகமாக வளர்த்து விட்டால் உடலைப் விட்டு பிரிந்து சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அங்கேயும்
இந்த விஷத்தை உருவாக்கி… அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலைத் தான் உயிர் உருவாக்கி
விடும்… தப்பவே முடியாது.
1,இந்த உடலில் வேதனைகளை
வளர்த்து விட்டோம் என்றால்
2.இந்த உடலுக்குப் பின்
மீண்டும் நரக வேதனைப்படும் உடலைத்தான் நாம் பார்க்க முடியும்.
உயிரான ஈசன் எத்தனையோ கோடிச்
சரீரங்களைக் கடந்து மனிதனாக உருவாக்கி இருக்கின்றான்.
அத்தகைய நிலையில் பிறவியில்லா நிலையைத்தான் நாம் அடைதல் வேண்டும்.
1.ஆனால் மனிதன் தீயிலே குதித்தால் உயிர்
வேகுகின்றதா…? இல்லை.
2.இதே மாதிரி இந்தப்
பிரபஞ்சத்தில் எந்த விஷத்தின் தன்மையோ அது நம்மை ஆட்சி புரியாதபடி
தடுத்தல் வேண்டும்.
விஷத்தின் தாக்குதலால் தான்
வெப்பம் ஆகின்றது. ஆனால் வெப்பம் அதிகமான பின் விஷத்தைப்
பிரித்து விடுகிறது.
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும்
விஷத்தைத் தான் ஆதாரமாக வைத்து உடலை வளர்த்து வந்தது. பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உடலை
வளர்க்கின்றது. மாட்டு இனங்களோ விஷத்தின் வலிமை கொண்டு தான்
இயக்கத்தின் சக்தியாகி அதைக் கொண்டு தான் தன் உணவைக் கரைக்கின்றது.
இப்படி மனிதனாக வளர்ந்த நிலையில் பல விஷத்தன்மைகளை
மாற்றி மாற்றி மாற்றி மாற்றி… இந்த உடல் பெற்ற பின் உணவாக
உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் மலமாக
மாற்றிவிடுகிறது.
1.நஞ்சினை நீக்கிடும்
அருள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கின்றது
2.இந்த எண்ணத்தை நாம் சீராக்கவில்லை என்றால்
மீண்டும் விஷத் தன்மைகள் கூடிவிடும்.
3.கூடிவிட்டால் எத்தகைய
விஷத்தின் தன்மை கூடுகின்றதோ அதற்குத் தக்க மனிதனல்லாத உடலை உருவாக்கி விடும்.
மீண்டும் பிறவிக்
கடனுக்கே வருகின்றோம்
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும் என்பதற்குத்தான் பரமபதத்தை வைத்துக்
காட்டினார்கள் ஞானிகள்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்குள்
அருள் சக்தியைக் கூட்ட முடியும்.
வைகுண்ட ஏகாதசி என்று நம்மை நாம் எப்படிப் பரிசுத்தப்படுத்திக்
கொள்ள வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.
1.உலகில் உள்ள அனைவருக்கும் பேரொளி கிடைக்க
வேண்டும் பேரருள் கிடைக்க வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்
3.உலகில் உள்ள அனைவருக்கும் அது கிடைக்க
வேண்டும்
4.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
5.நான் பார்க்கும் குடும்பம் அனைத்திலும்
அந்த அருள் சக்தி படர வேண்டும்
6.எல்லோரும் பேரொளி ஆக
வேண்டும் என்று உணர்வினை எடுத்தால் பகைமைகளை நாம் மாற்றியமைக்கின்றோம்.
இவைகள் எல்லாம் நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆகவே இந்த உடலுக்குப் பின் முழுமையடைதல்
வேண்டும்.
மரத்தில் பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகின்றது. கனியாகி விட்டால் மூடி மறைத்து (விதையை) விடுகின்றது.
திறந்து விட்டால் வித்து தன் இனத்தை உருவாக்குகின்றது.
ஆக எப்படிக் கனியாகின்றதோ இதைப் போன்று
1.நமது உயிரின் தன்மையை இந்த உடலுக்குப் பின் வாழ்க்கையில் வந்த இருள் சூழும் தீமையான உணர்வுகளை மாற்றி விட்டு
2.”பேரொளி என்ற உணர்வாகும்” பௌர்ணமி போன்று
3.தீமைகளை நீக்கி உடலில் உள்ள அணுக்கள்
அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பேரொளி என்ற நிலை உருவாகி
4.பேரருள் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று
தான் நமது சாஸ்திரங்கள் காட்டியுள்ளது.
அந்த நிலையை ஒவ்வொருவரும் நாம் பெறுதல் வேண்டும்