சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்
குருநாதர் எம்மை இமயமலை… சைனா பார்டர் வரையிலும் போகச் சொன்னார்…!
அன்று சக்தி கொடுத்தார்.
1.அதை வைத்து அந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்த வேண்டும்.
2.ஒருத்தரைக் கொல்லவோ
துன்புறுத்தவோ அதைப் பயன்படுத்தக்கூடாது
3.உன்னைக் காத்துக்
கொள்வதற்கு எந்த நிலையோ அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார்.
வெறும் கோவணத் துணியுடன் அங்கே இமயமலைக்குச் சென்றேன். ஒரு பாதையைக்
கடந்து செல்லும் பொழுது பனிபாறைகள் திடு… திடு… என்று
இடிந்து விழுகின்றது. பார்த்தவுடனே… நாம் எப்படித் திரும்பப் போகப்
போகின்றோம்…? என்று சிந்தனை வருகிறது.
அப்போது என் வீட்டின் நிலைகள் காட்சியாகத் தெரிகின்றது. என் கடைசிப் பையன் தண்டபாணி “நானா… நானா…” என்று சொல்லிக்
கொண்டு தெரு வாசல்படியில் அமர்ந்திருக்கின்றான்.
என் மீது அவனுக்கு ஏக்கம் அதிகமாகி இரத்த இரத்தமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் அங்கே சென்றவுடன் நாம் எப்படித் திரும்பச் செல்லப் போகின்றோம்…? பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள்…? என்று இங்கிருந்து
இது எல்லாம் சிந்தனை ஓடுகின்றது.
எல்லாம் காட்சியாகத்
தெரிகின்றது என்னுடைய மனைவியோ விறகுக் கடையில் “விறகே இல்லை” என்று தவித்துக் கொண்டிருக்கிறது.
என் பையனுக்கு இரத்த இரத்தமாகப் போகிறது என்று தெரிந்த உடனே… ஐயோ…! அவனை எப்படிக் காப்பாற்றுவது…?
என்ற இந்த நினைப்பு எனக்குள் வருகின்றது.
உடனே என் உடலுக்குள் “அடித்தது பாருங்கள்…!”
கிர்…ர்ர்ர்… என்று இருதயமே துடிக்க ஆரம்பிக்கின்றது. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் போல் தெரிகின்றது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி குருநாதர் ஒரு பாடலைப் பாடுவார்
மனமே இனி ஆகிலும்
மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் சுகமா
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
மின்னலைப் போல் இப்பொழுது நீ உடலை விட்டுப் போய் விட்டாய் என்றால் எதை நீ பார்க்கப் போகின்றாய்…? என்று கேட்கின்றார்.
நெற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ…?
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா…? நீ சிந்தித்துப் பார்…!
என்று சொல்கின்றார். நீ சென்று விட்டால் உன் பிள்ளையை எப்படிக் காக்கப் போகின்றாய்…?
1.நான் உனக்குச் சக்தி கொடுத்தேன்
2.இங்கிருந்து அவன் காக்கப்பட வேண்டும் என்று
எண்ணினால் காக்கலாம்.
தூரத்தில் இருக்கும் ஒருவனை இங்கிருந்து நீ
திட்டினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது. பிள்ளை மீது பாசமாக இருந்து அவனை எண்ணி வேதனைப்பட்டால்
அவனுக்கு நோய் தான் அதிகமாகும்.
அந்த நோயிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்றால் நீ என்ன
செய்ய வேண்டும்…? என்ற உபதேசத்தை தான் அந்த மாதிரி
நேரங்களில் எனக்கு குருநாதர் கொடுக்கின்றார்.
சக்தி வைத்திருந்தாலும்…
1.இவ்வளவு சிரமமான நேரத்தில் அவர் கொடுக்கும் உபதேசங்கள் நமக்குப்
பயனுள்ளதாக
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்டு… குருநாதர் கொடுத்து உதவுகின்றார்.
இப்படித்தான் அனுபவப்பட்டு
நான் வந்தேன். நீங்கள் அமர்ந்து ஆசுவாசமாக இதைக் கேட்கின்றீர்கள். உங்களுக்கு இது போன்ற சோதனைகளைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்…?
ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றால் “சாமி என்னைச் சோதிக்கின்றார்” என்று தான் சொல்வீர்கள். ஒரு சிலர்
என்ன செய்கிறார்கள்…?
வாழ்க்கையின் ஆசை
நிமித்தம் செல்லும் பொழுது… ஒரு பொருளை எண்ணுகிறார்கள்…
அது கிடைக்கவில்லை என்றால் என்றால் “சாமி
நிறைய என்னைச் சோதிக்கின்றார்” என்று
இப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.
ஏனென்றால் நான் இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குக் குருநாதர்
எத்தனையோ சோதனைகளை வைத்தார். அதன் வழி தான் ஒவ்வொன்றையும்
அறிந்து கொண்டேன்.
சரியான உணவு இல்லை…
வீடு வயல்கள் எல்லாம் சென்று விட்டது குழந்தைகள் அனைவரும்
அனாதையாக இருக்கின்றார்கள். எல்லா நிலங்களும் விற்று
விட்டாயிற்று. சரியான காரணம் இல்லாமலே சொத்துக்கள் அழிந்தது.
இவ்வளவு நிலை வந்த பிற்பாடு இப்படி எல்லாம் செய்யப்பட்ட
பிற்பாடு இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய நிலைகள் உண்டு.
1.ஆக அந்த குடும்பத்தில் எப்படி அறியாது
இயக்குகின்றது…?
2.அவர்களை மீட்டுவதற்கு என்ன வழி…? என்ற நிலையில் தான் அனுபவமே கொடுத்தார் குருநாதர்.
ஒவ்வொரு உயிரையும்
கடவுளாக நீ மதி அவர்கள் உடலைக் கோவிலாக
மதி சந்தர்ப்பத்தால் அவருக்குள் வரும் நிலையை…
1.ஈசனால் கட்டப்பட்ட அந்த ஆலயம் இடிந்திடாது இந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உணர்வின் தன்மை ஒளியாகப் பெருக்கும்
மார்க்கம் என்ன…?
2.அவர்களைக் காக்க
வேண்டும் என்றால் நீ எப்படிக் காக்கப்படுகின்றாய்…?
3.இந்த உடலுக்குப் பின்
நீ எப்படி ஒளியாகின்றாய்…?
4.அவர்களை ஒளியாக்கும் உணர்வை அந்த உபாயத்தைச்
சொன்னால் அது உனக்குள் வளர்கின்றது
5.அந்த உணர்வே உனக்குள் தெளிவாகின்றது
6.அதை வைத்து நீ அவர்களையும் காக்க முடியும்.
இப்படித்தான் குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார்.