குரு பலம்
குருநாதர் காட்டிய வழியில்… காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும்
செல்லும் போது அங்கே நான் போகும் காரியங்களுக்குப் பயமில்லாதபடி குருநாதர் எத்தனையோ பாதுகாப்பு நிலைகளைச் செய்து கொடுப்பார்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒலிகளை
வைத்திருப்பார்.
2/ஏதாவது பயப்படும் நிலைகள் வந்தால் அந்த
ஒலிகள் எழும்பும்… சப்தங்கள் வரும்.
3.அப்பொழுது குருநாதருடைய நினைவு வரும்…
எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.
இதைப் போல் உங்களுக்கும் சரி… என்னிடம் பழகி இருக்கின்றீர்கள் அல்லவா. ஏதாவது ஒரு சிரமம் இருந்தால் முன்னாடி இந்த உணர்ச்சிகள் வரும்.
பஸ்ஸில் ஏறினால் விபத்தோ வேறு
நிலைகளுக்குச் செல்லும் போது ஏதாவது சிக்கல் வந்தால்
1.இந்தத் தியானத்தைச் சீராகக் கடைபிடிப்பவர்களுக்கு
ஒரு எச்சரிக்கை வரும்.
2.அந்த நேரத்தில் நீங்கள் பார்த்துச் சிந்தித்துச் செயல்பட்டால் ஆபத்துக்களிலிருந்து தப்பலாம்.
ஒரு காரியத்திற்குச்
செல்கிறீர்கள். அதிலே ஏதோ நஷ்டம் ஆகிறது என்றால் அந்த
இடத்திலே மனதில் ஒரு விதமான படபடப்பு வரும்.
1.கொஞ்ச நேரம் அதை நிறுத்திவிட்டு ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டு
2/அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தி எடுத்துக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
3.சிந்தனை சீராகும் வழிகாட்டக்கூடிய
நிலைகளுக்கு இது வரும்.
நான் செய்கிறேன் என்றால் நான் அல்ல…! குருநாதரின் உணர்வுகளை நான் எடுத்தேன்… அதை வளர்த்தேன்…! அதன் வழி
தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்தது.
1.குருநாதர் எனக்குள் பதித்த அந்த ஞான வித்தை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் மறவாது எண்ணினீர்கள் என்றால்
3.காற்றிலிருந்து
இழுத்து உங்கள் தீமைகளை போக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக
வரும்.
அதை நான் செய்கிறேன்
என்றால் நான் எப்படிச் செய்ய முடியும்…? அருளைப் பெருக்குகின்றேன் அந்த வழியைத்தான் நான்
உங்களுக்குக் காட்டுகின்றேன்.
இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.