பன்னிரெண்டு முக்கிய குணங்கள் இருந்தாலும் “அதிலே நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்”
“பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச்
சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான்” மனித ஆத்மாக்களின்
வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி
பெற்றது.
அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட
சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது. இவை
எந்நிலையில்…?
நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தை விட
இக்காலத்திற்குக் கூடி உள்ளது. எந்நிலை கொண்டு இது கூடிற்று…?
பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம்.
1.இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும்
சக்திகளும்… தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.
2.அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே
இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
3.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும்
குணாதிசயங்களைத்தான் இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.
இந்நிலையில் தான் எல்லா ஆத்மாக்களுமே உள்ளனவா…? என்ற வினாவும் எழும்பலாம்.
ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக்
கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குணநிலையைக் கொண்ட அமில
சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.
அதிலிருந்து தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட
அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ அதன் தொடரில் தான்
அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவு நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.
ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத்திறனும் குறைந்த அறிவும்
படைக்கப்படவில்லை.
அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்திற்கு
முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழகிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றில்தான் அன்பு, பாசம், ஆசை, ஆனந்தம்,
பக்தி இப்படி ஒவ்வொரு குணநிலையும் சலிப்பு, கோபம்,
குரோதம், காமம், வெறி,
வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது.
எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து
வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன், பண்பானவன்,
நாணயஸ்தன், பக்திமான், தர்மவான்
என்றும்,
2.சங்கடம் கொண்டவன், கோபக்காரன்,
குரோதக்காரன், நயவஞ்சகன், வெறி உணர்வு கொண்டவன், காமுகன் என்றும் நாமகரணம்
3.பிறரினால் பெறப்படவில்லை… அவ்வுடலின் வீரிய
அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.
இம்மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர்
ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.
மனிதனாய் உள்ள நிலையிலேயே நாம் இது நாள் வரை எக்குண
அமிலத்தை எந்த ஒன்று அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும்… நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான
அமிலத்தில் உள்ள… ஆறு தீய குணங்களுக்கு எந்நிலையில் அதிகமாய்
நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்…
1.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம்
உணர்ந்து ஜெபம் என்ற இப்பன்னிரண்டு குணங்களையும் நாம் ஈர்க்க
2.நமக்குத் துணை வந்த நமக்கு மேல் நம்
ஆத்மாண்டவனை…
3.ஆத்மாண்டவன் என்பது நம் உயிராத்மாவைத் தான்
அவ்வாத்மாவை
4.அவ்வாத்மாவுக்குள் உள்ள ஈசனின் சக்தியைக்
கொண்டு நமக்குகந்த நல்ல குணங்களையுடைய
5.மறு பாதியில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும்
பக்குவம் பெறல் வேண்டும்.