ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 24, 2024

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”


இன்றுள்ள நம் பூமியின் தன்மையிலும் நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் தன்மையிலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளிலும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் மாறிக் கொண்டே உள்ள நிலையில்
1.நம் பூமியின் தன்மையில் சமீபத்தில் நடந்த இச் சூரிய கிரகண நிலையிலிருந்து
2.நம் பூமிக்குக் கிடைக்கப் பெறும் சூரியனின் ஒளி அலையில் சிறுகச் சிறுக மாற்றத் தன்மையின் நிலையினால்
3.நம் பூமி ஈர்த்தெடுத்த அமிலத்தன்மையில் மாற்றம் கொண்டு
4.பூமிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் இம் மாறுகொண்ட நிலையினால் சில மாற்ற நிலைகள் சிறுகச் சிறுக ஏற்படும்.
 
நம் உடலிலுள்ள காந்த அமில சக்தி நாமெடுக்கும் சுவாசத்தின் ஈர்ப்பில் நம் செவி வழியில் மோதுண்டு அமிலமாய் அக்காந்த ஈர்ப்பு நிலை உடல் முழுவதற்கும் பரவிய நிலையில் சிறுகச் சிறுக உடல் தன்மையும் அனைத்து ஜீவ ஆத்மாக்களுக்கும் மாற்றம் கொள்ளும் நாள் இக் குறுகிய கால வட்டத்திற்குள்ளே மிகச் சமீப எதிர்காலத்தில் இந்நிலையின் தொடரெல்லாம் நடந்திடும்.
 
எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்தி ஒரு நிலை கொண்ட ஜெப நிலையில் நம் எண்ணம் முழுவதும் படரும் நிலை நாம் ஏற்படுத்திக் கொண்டால்
1.அவ்வொளியுடன் ஐக்கியப்பட்டுள்ள சப்தரிஷிகளின் ஒளியின் ஈர்ப்பு சக்தியில் நம் ஒரு நிலைகொண்ட எண்ண நிலையும் மோதுண்டு
2.அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் வட்டத்திற்குள் நம் எண்ணச் சக்தி ஐக்கியப்பட்டு நாம் இருக்குங்கால்
3.அவர்களே நம்மைப் பார்த்துக் கொள்வார்கள்.
 
காற்றிலுள்ள விஷத்தன்மையும் நம்மைச் சார்ந்தவர்களின் மாறு கொண்ட எண்ண நிலையும் நம் ஆத்மாவை வந்து மோதி விலகித்தான் செல்லுமே ஒழிய
1.நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள அம்மகான்களின் வட்ட சக்தியில் (ஒளி சக்தி)
2.நம்மை அவர்களே ஐக்கியப்படுத்திக் கொண்டு வழி நடத்திடுவர்.
 
இப்பாட நிலையை உணர்ந்து கொண்டு எண்ணத்தை ஜெபப்படுத்திய ஆத்மாக்களுக்கு இதன் தொடர் நிலையின் வழி நிலை புரிந்திடும்.
 
ஒவ்வொரு மகானும் தான் பெற்ற அந் நல் அமுதை ஆசைப்பட்டுத்
1.தன் வட்டத்திற்குள் பல ஆத்மாக்களை நல்லுணர்வாக்கிட இன்றளவும் அவர்களின் செயல்நிலை செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
2.அவ்வட்டத்தின் ஈர்ப்பில் நம் நிலை செல்லும் வழி முறையை நாமேதான் பெறல் வேண்டும் என்பதனை உணர்ந்தீரா…?
 
இன்று வாழும் இவ்வாழ்க்கை தான் நம் காலம் என்பதை மறந்துவிடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் நல் சொத்தை அடையும் பக்குவத்திற்காக நாம் பெற்ற சந்தர்ப்பக் காலம் தான் இது.
 
இக்குறுகிய காலத்தை தர்க்கவாதத்திலும் பிடிவாத நெறியிலும் ஆண்டவன் உண்டு இல்லை…” என்ற ஆராய்ச்சி நிலையெல்லாம் அறிந்திடாமல் நம் முன்னோர்கள் உணர்த்திய நெறியில் உள்ள உன்னத சக்தியை ஈர்த்து நம் சக்தியை நாம் உணரல் வேண்டும்.
 
ஒவ்வொரு மனித ஆத்மாவுக்குள்ளும் அவரவர் சேமித்து வைத்தது இவ்வுடலில் உயிரணுவாய் உதித்த காலத்திலேயே சேமித்தது. அதன் தொடரில் வழி வந்த சக்தி நிலையெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உண்டு.
 
ஒன்றைப்போல் ஒன்றில்லைஆனால் அனைவருக்கும் சக்தியுண்டு. அதை வெளிப்படுத்திட
1.நம்மிடம் உள்ள பல தீய சக்திகளை நமக்கே அடிமைப்படும் நிலைப்படுத்தி
2.நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களும் நம் நிலையில் செயல்படும் நிலையில்
3.நாம் எடுக்கும் எண்ண சுவாசம் இருந்திடல் வேண்டும்.
 
நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டால் பிறரின் நிலையைக் கண்டு நம் எண்ணத்தில் கலக்கம் தோன்றாது. பிற எதிர்ப்பிற்கும் புகழுக்கும் சமமான நிலை கொள்ளும் பக்குவம் கொண்டு அவ்வாண்டவனின் மந்திரமுடன் ஐக்கியபட்டு அவ்வட்டத்தில் நாம் உள்ள பொழுது நம்மைச் சுற்றியுள்ள நிலையையும் நம்மைக் காக்கும் அவ்வாண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்…
 
அதற்காக நம் எண்ணத்தை நாம் மாற்றலாகாது. அனைத்தையும் சமமாக்கிஅனைத்தையும் என்பது
1.நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி அவனிடம் விட்டு விடுவோம்
2.”அவ்வாண்டவனே பார்த்துக் கொள்வான் என்ற ஒரு நிலை கொண்ட சம நிலை நாம் பெறல் வேண்டும்.