ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2023

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

“மனம் தான் நம்முடைய பகைவன்…!”

காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?

பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்... காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?

பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?

மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?

ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.

சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.

சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.

சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.

தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?

மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்... அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”

இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு...” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”

நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”

இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.

இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்... தன் பகை நீக்கும்…”

பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.

1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்... புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை... உட்பொருளை... அகத்தின் அருட் சிந்தனையை... பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.

அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்... தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்...? என உணர்ந்திருப்பாய்.

1.”உட்பொருள்...” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்

சித்து... சடம்... இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

November 29, 2023

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.

நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைள் பட்டு… பல அவஸ்தைப்பட்டுகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.

கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”

சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.

அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்துவிடுகிறது.

தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.

பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்

காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?

பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.

ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?

விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.

கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.

ஏன்… எதனால்…?

உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.

எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.

உணவு உட்கொள்ளும் பொழுது ஈதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது

இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.

ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.

கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.

இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.

நான் கொடுத்தேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?

ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.பத்து ரூபாய் கொடுத்தாலும் 100 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.

இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”

ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).

மனிதனுடைய விதியும்… ஞானியரின் விதியும்…!

 

பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி... காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை... மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.

உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.

மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.

பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி...
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக...
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.

ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.

இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.

சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.

இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?

தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்...!
2.”பார்வையின் கூர்மை... அது இரையை நாடுகின்ற நாட்டம்…”

மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை... “போ...!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்... இல்லை...!
2.”ஆத்ம பலம் நாடும்... சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி...”

 

November 28, 2023

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

பஞ்ச பூதங்களின் இயக்கமும்… நாம் தீர்க்க வேண்டிய ஞானப் பசியும்

உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.

இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்... அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.

மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்... சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.

ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்...
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்... “மனதினை அடக்க இயலவில்லை என்று…”

பிறர் தர்ம செய்கையால் ஞானத்தின் வழியில் நிற்போர் மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்... “அவர்களின் செயல்கள்...” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.

ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்

1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.

இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.

1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.

மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,

ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.

1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை... அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.

மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!

ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.

தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!

1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.

உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு...! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.

November 27, 2023

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று... பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே... மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று... அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்... (தனக்குத் தானே - உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்... (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட... (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை... விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா...! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்

November 26, 2023

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்...”

“முதல் பண்ணவனிடத்தில்” நற்றேன் பருகிடல் வேண்டும்

நரலாகும் (மண்ணிலே விளையும்) பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.

November 25, 2023

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?

1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.

எரியடி தண்டம்

இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.

ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?

உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.

காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.

இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!

மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.

இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!

கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.

இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!

மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.

கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.

மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.

அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.

கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.

அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!

இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?

அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.

சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.

உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.

இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?

பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?

காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.

ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.

November 24, 2023

நற்குணங்களின் வலுக் கொண்டு தீயகுணங்களை விழுங்க வேண்டும்

நதி ஜீவ நதி - புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் - சிறு துளி பெருவெள்ளம்.

சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.

ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!

ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.

மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”

மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.

மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய்ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.

1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.

ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”

உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.

மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட... மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.

1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.

ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட...
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”

நோயை நீக்குவதற்கு யாம் கொடுப்பது “வாக்குகள் தான்…” மருந்து அல்ல…!

அடிக்கடி யாம் (ஞானகுரு) வற்புறுத்துவதெல்லாம் நாம் தேட வேண்டிய அழியாச் சொத்து “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத்தான்…”

அதை எடுத்துக் கொண்டால் எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதை மாற்றும் தன்மை உண்டு

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அந்தந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்கி அது செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ நம் உடல் ஒரு அரங்கம்… உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயங்குகின்றது
2.ஆகவே நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால்
3.அந்த உணர்ச்சிகள் அரங்கநாதனாக மாறி தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியையும் நாம் பெறுகின்றோம்

பல முறை உங்களுக்கு இதைச் சொல்லி உள்ளேன்.

நீங்கள் எம்மை எண்ண வேண்டிய முறையே… இந்த உபதேசத்தை மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அதன் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எனக்கு உடல் நலம் ஆக வேண்டும் என்று “மனதில் எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது…”

இந்த உணர்வுகள் உங்கள் உயிரான அரங்கத்தில் பட்டு அது நாதங்களாக உடல் முழுவதும் பரவுகின்றது. ஏங்கிப் பெறும் பொழுது அந்த சக்திகள் உங்களுக்குள் அதிகமாகப் பெருகுகின்றது.

இந்த உணர்வு வளர நிச்சயம் உங்கள் நோய்கள் அகலும்

ஆனால் எம்மை எண்ணும் பொழுது “இப்படி இருக்கின்றதே… வேதனையாக இருக்கின்றதே…” என்று இப்படித்தான் சில பேர் எண்ணுகின்றார்கள்.

ரொம்ப நாளாக இந்த நோய் இருக்கின்றது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டால் எந்த வாக்கு உங்களுக்குள் பதிவாகும்…? இப்படிக் கேட்பதையே ஒரு பழக்கமாகவும் வைத்திருக்கின்றனர்.

ஏனென்றால் உங்கள் தீமைகள் அகல வேண்டும் நீங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தான் நான் உங்களுக்கு அந்த வாக்கினைக் கொடுக்கின்றேன்.

அந்த அடிப்படையில் நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குள் அது சரியான முறையில் வேலை செய்யும். நோய் நீங்க வேண்டும் என்றால் நான் உங்களுக்கு மருந்து சொல்வதற்கு வரவில்லை.

1.சொல்லின் வாக்காலே உங்களுக்கு அந்த நோய் போகும் உடல் நலம் பெறுவீர்கள் என்று தான் கொடுக்கின்றேன்.
2.உங்களுக்குள் பதிவாகி அதை மீண்டும் எண்ணினால் அதுதான் நல்லதாக வேலை செய்யும்.

மருந்து கொடுத்து அல்ல…!

1.மருந்துக்கு முன்னாடியே இந்த வாக்கு உள்ளே சென்று வேலை செய்யும்.
2.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! என்பது போல் யாம் கொடுக்கும் வாக்கை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வு அந்த நோயைத் தீர்க்கும் வலிமையாக உங்களுக்குள் கூடுகின்றது.

அந்த வலிமை கொண்டு நீங்கள் எத்தகைய தீமையையும் நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் யாம் சொல்கின்றோம்.

கோவிலுக்குச் சென்று சாமிடம் வரம் கேட்பது போல் தான் எம்மிடமும் கேட்கும் பழக்க வழக்கங்கள் வந்து விடுகிறது. இதையெல்லாம் முழுவதுமாக மாற்றிப் பழகிடல் வேண்டும்.

எம்மிடம் கேட்க வேண்டிய முறையே நோயிலிருந்து விடுபட வேண்டும் அதற்குண்டான அருள் சக்தி வேண்டும் அதற்குண்டான உபாயங்கள் வேண்டும்… என் பையன் நல்லவனாக வேண்டும் என்று தான்…!

அதன்படி நடக்கும் என்று வாக்கினைக் கொடுத்துப் பதிவு செய்தால் உடனடியாக அது நல்லதாகும்.

ஆகவே எதுவாக இருந்தாலும் அது நல்லதாக வேண்டும் நலம் பெறக்கூடிய சக்தியாக வரவேண்டும் அந்த அருள் வழியை நாம் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அதன்படியே நடக்கும். நீங்கள் எண்ணியபடி அது நல்லதாக அமையும்.
1.நான் பதிவு செய்தால்… உங்கள் எண்ணம் அதனுடன் இணைந்து
2.அந்த உணர்வினை இயக்கி உங்களுக்கு நிச்சயம் நல்லதாகும்.

பல முறை இதைச் சொல்கின்றேன். யாரும் இதை அதிகம் சட்டை பண்ணுவது இல்லை.

ஏனென்றால் நீங்கள் எண்ணுவது எதுவோ உங்கள் உயிர் அதைத் தான் இயக்குகின்றது. இந்த உணர்வுகள் தான் உடலில் படர்கின்றது. அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை நான் சொல்கின்றேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் பெரும் பகுதியானவர்கள் எண்ணுகின்றார்கள். ஆகவே “அருள் வழியில் வாழ்க்கை நடத்துவோம்…” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அருள் வழியில் வாழக் கற்றுக் கொள்தல் வேண்டும்.

எத்தனையோ செல்வங்களை நாம் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அது வருவதில்லை. இந்த உடலுக்குப் பின் என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடைவதே முழுமை…!

1.இந்த உயிர் தோன்றி எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்து மனிதனான பின்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோடி உணர்வுகளையும் வெல்லும் சக்தி இந்த மனிதனுக்குத் தான் வருகின்றது.
3.அதை வென்று விட்டால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

அதற்கு நாம் தயாராக வேண்டும்.

இதன் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் நமக்கு எண்ண வலு கிடைக்கின்றது. சிந்தித்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… அருள் ஒளியைப் பெருக்கச் செய்கின்றது அருள் வாழ்க்கை வாழச் செய்கின்றது நம் பார்வையில் சர்வ தோஷங்களும் போக்கப்படுகின்றது பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் சக்தியும் வருகிறது.

ஆகவே இதைச் சீராக வளர்த்துக் கொள்ளுங்கள்
1.அருள் வழியில் வாழ்வோம்
2.அருள் வழியில் அனைவரையும் வாழச் செய்வோம்.

November 23, 2023

குருதேவரின் விளையாட்டு…! என்று எண்ணலாமா…?

மனிதன் என்றே பெயர் பெரும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குல சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”

1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும் என்று ஏற்கனவே படிப்படியாக்க் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.

இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு...! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.

தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்... தாயும் தேடுகிறது...! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம் தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?

மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.

தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.

ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை எமது விளையாட்டு என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)

நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான் உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா. மறு சமைப்பை பற்றி வினா எழுப்புகின்றாய்

ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).

கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.

கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.

பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.

1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் தன் சுவாசத்தைக் கொண்டு தன்னைத்தான் காத்துக் கொள்ளும்.

அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

அக்கினி குண்டத்தின் தத்துவம் என்ன…?

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஞானிகள் ஆலயத்திலே உருவத்தைக் காட்டி அருவ நிலைகள் நாம் உணர்ந்து இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்று தெளிவாகக் கூறியதை நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

ஆலயப் பண்புகளை மறந்து தன் சுயநலத்தைக் கொண்டு நடந்து கொள்கிறோம்…! யாராவது நமக்குத் தொல்லை கொடுத்தால்
1.உடனே அவன் குடும்பம் நாசமாக வேண்டும்
2.அவன் குடும்பம் பிள்ளை குட்டி எல்லாம் சாக வேண்டும்
3.அவன் தொழில் எல்லாம் நாசமாக வேண்டும் என்று கருப்பணசாமி ஆலயத்திலோ மாரியம்மன் ஆலயத்திலோ
4.மண்ணை வாரித் தூற்றி எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் என்ற நிலையில் அவர்கள் நாசமாக வேண்டும் என்று தான் கும்பிடுகின்றோம்…

ஆக ஆலயத்திற்குச் சென்று நாம் எதை வளர்க்கின்றோம்…?

பிறிதொருவன் தவறு செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தால்… அந்த உணர்வுகள் மாறி அவன் செய்யும் தவறையே நமக்குள் செய்யும் நிலை வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

ஒரு உடலிலே நோய் அதிகமாக இருந்தால் பாசத்துடன் அவனை நுகரப்படும் பொழுது அதே நோய் நமக்குள் வந்து நம்முடைய நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

அது தான் மாரியம்மாள்…! (அடுத்தவர் உணர்வு மாறி நமக்குள் வருவது).

ஆனால் மாரியம்மனை வணங்கி வரும் பொழுது ஆகாதவர்கள் இருந்தால் என்ன செய்கிறோம்…? அவர் குடும்பத்தைக் கெடுப்பதற்காக உனக்கு ஆட்டைக் கொண்டு வந்து வெட்டிப் பலி கொடுக்கின்றேன்…! என்று ஆலயப் பண்புகளை இப்படித்தான் கொண்டு வருகின்றோம்.

பிறிதொரு வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வு நமக்குள் மாறி (மாரி) அவன் உடலில் வந்த நோய்கள் நமக்குள்ளும் வருகின்றது.

இந்தத் தீமைகளை நீக்குவதற்கு நோயை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று பச்சையாகவே அங்கே காட்டுகின்றார்கள்… அக்கினி குண்டம் இறங்க வேண்டும் என்று…!

ஆனால் அக்கினி குண்டம் நாம் எப்படி இன்று இறங்குகிறோம்…?

1.தீ மிதித்தால் “தீ நம்மைச் சுடும்…!” என்று தெரிகின்றது ஆனாலும் மிதிக்கின்றோம்
2.ஏனென்றால் நேர்த்திக் கடனுக்காக நான் மிதித்துச் செல்கின்றேன் என்று செல்கின்றார்கள்
3.ஆனால் ஒருவனுடைய தீமை நம்மைக் கொல்கிறது என்று தெரிகின்றது
4.அந்தத் தீமையை நீக்கும் (சுட்டுப் பொசுக்கும்) நல்ல உணர்வுகளை எடுக்கின்றோமா என்றால் இல்லை.

நெருப்பைக் கொண்டு எப்படி மற்ற பொருளை வேக வைக்கின்றோமோ ஒன்றைக் கருக்குகின்றோமோ இதைப் போன்று நம் உயிரான நெருப்பிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள இணைத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் நுகர்ந்து
1.நம் உடலுக்குள்ளே அதைப் பரப்பினால் இது ஒரு குண்டம்.
2.தீமையை நீக்கிய அந்த அருள் உணர்வு நமக்குள் வந்தால் தீமைகளைப் பொசுக்கி விடுகின்றது.

பின்… யார் நமக்குத் தீமை செய்தார்களோ அவனுக்குச் சிந்தித்து செயல்படும் சக்தியும் பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் வரவேண்டும் என்றும் இத்தகைய எண்ணங்களை நாம் எண்ணினால் அவனுடைய தீய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

தீமை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலில் இரத்தத்தில் கலந்து தீமை என்ற உணர்வை மாற்றுகிறது.

நாம் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல உணர்வுகள் வரவேண்டும்… நல்லது செய்யும் எண்ணங்கள் வரவேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வு உயிரிலே பட்டு… அந்த உணர்ச்சிகள் நம் உடலில் நல்லதாக இயங்குகின்றது.

அதனால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உடல் ஒரு அரங்கம்.
1.பிறர் நல்லவராக வேண்டும்… தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று உணர்வுகளை நுகர்ந்து
2.உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் நாதங்களாக மாறி அதற்கொப்ப எண்ணம் சொல் செயல் நம்மிடமிருந்து வருகின்றது
3.இந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆளுகின்றது ஆண்டாள்…!

இப்படி இன்று நாம் வழக்கப்படுத்த வேண்டிய தெய்வீகப் பண்புகளைக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள். நாம் அதன்படி நடக்க வேண்டுமல்லவா…!

November 22, 2023

பதட்டத்தையும் பயத்தையும் போக்கத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற நினைவை நம் உடலுக்குள் செலுத்தினால் தீமைகளை அடக்கி நமக்குள் சிந்திக்கும் ஆற்றலாக உருவாகின்றது.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து “நீ நன்றாகி விடுவாய்…” என்று இந்த உணர்வைச் சமைத்து இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு ஊக்கமூட்டும் உணர்ச்சிகளாக இது அமைகிறது. அதே சமயத்தில்
1.நோயை நீக்க அவன் உட்கொள்ளும் மருந்தைச் சீராகப் பயன்படுத்தும் நிலையும்
2.அந்த மருந்து உடலுக்குள் சென்று நன்கு வேலை செய்யும் தன்மையும் வருகிறது.

ஆனால்… இப்படி ஆகிவிட்டதே என்று அவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து… வேதனையும் பதட்டத்தையும் பட்டு… பயத்துடன் நாம் அந்த மருந்தினைக் கொடுத்தால்
1.இதே உணர்வுகள் இயக்கப்பட்டு
2.அந்த மருந்துக்கே வேலை இல்லை என்று ஆகி எதிர் நிலையாகிவிடும்.

ஒரு சிலர் பாருங்கள்… நோயான பின் பதட்டத்தோடு மருந்தினைக் கொடுப்பார்கள். இப்படி எத்தனை மருந்து கொடுத்தாலும் அந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியாது.

ஏனென்றால்… பாசத்தாலோ அல்லது நண்பர் என்ற நிலையிலோ பழகிய நிலைகள் கொண்டு இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று தியானிப்பார்கள்.
1.அவர்கள் உடலிலும் இத்தகைய தீமைகள் விளையும்
2.அதே சமயத்தில் அந்த நோயாளி உடலிலும் அதே உணர்வுகள் விளையும்.

இதுவும் தியானம்தான்…!

இதையெல்லாம் மாற்றிட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை என்ற நிலைகளை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர் உடலில் படர வேண்டும்
1.அவர் நோய்கள் நீங்க வேண்டும்
2.அவர் மன உறுதி பெற வேண்டும்
3.நல்ல உணர்வுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்
4.சிந்திக்கும் ஆற்றல் அவருக்குள் பெருக வேண்டும்
5.மன வலிமையுடன் வளரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் இந்த வலு நமக்குக் கிடைக்கின்றது.

அந்த உணர்வோடு அவரிடம் சொல்லி “சீக்கிரம் நலமாகி விடுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்…” என்ற உணர்வினை இங்கே சமைத்தால்… அந்த உணர்வின் சொல் அவர் செவிகளிலே பட்டு நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி… அவருடைய இரத்தங்களிலே கலந்து அவர் தீமையின் உணர்வை அடக்கி நல்ல உணர்ச்சிகளை அவருக்குள் ஊட்டும்.

உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் எடுத்த வேதனையை நமக்குள் எடுத்து உனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணினால் நமக்குள்ளும் அதே பயமும் பதட்டமும் வேதனையும் வருகின்றது.

திருப்பி இதையே வலுவாக்கிச் சொல்லப்படும் பொழுது நோயே வலிமை பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நீக்குவதற்குத் தான் ஆலயங்களிலே சிலைகளை வடித்து… அதன்படி நாம் எப்படி நல்ல குணங்களைச் சேர்க்க வேண்டும்…? தீமையிலிருந்து எவ்வாறு விடுபடுவது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்துள்ளார்கள்

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

அங்கே அபிஷேகங்களையும் ஆராதனையும் செய்துவிட்டு… இப்படி நோயுடன் இருக்கின்றார்களே… தெய்வமே…! கஷ்டமாக இருக்கின்றதே… நீ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! என்ற வேதனை கலந்த உணர்வைத்தான் நாம் எடுத்து வளர்த்து
1.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.விஷத்தைக் கலந்து பாலைக் கொடுத்தது போன்றாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனை (நஞ்சு) கலந்த பின் இப்படித்தான் ஆகும். ஆகவே கோவிலுக்குச் சென்றால் நான் எப்படிச் செயல்பட வேண்டும்…?

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்… வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும் என்ற உணர்வைத் தனக்குள் படைத்து… இந்தத் தெய்வீக பண்புகள் அவருக்குள் வளர வேண்டும்.. தீமைகளை அகற்றிடும் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அருள் வழி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நோயாளியை பார்த்து நாம் எண்ணினோமோ
1.அருள் உணர்வை எண்ணிச் சுவாசித்து இங்கே படைத்தால் நம் உயிருக்கு இது அபிஷேகம் ஆகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் நம் இரத்தங்கள் முழுவதும் கலக்கின்றது
3.தீமையை அகற்றிடும் நல்ல அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இந்த உணர்வின் சொல்லை வெளிப்படுத்தும் போது… எந்த ஆலயத்தில் நாம் இதை உற்றுப் பார்த்து எண்ணுகின்றோமோ அங்கே “நாம் தெய்வமாகின்றோம்…!”

அவ்வாறு நாம் தெய்வமாகி அவன் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரம்

 

“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”

1.சரீரமில்லா செயல் நிலை உடைய உயிரணுக்கள் (ஆவி ஆத்மாக்கள்) சரீர கதிச் சுழல் காந்த அமில ஈர்ப்பின் குணத்தின் வசம் அகப்பட்டு
2.தனது சுவாச அமில நிலைக்கொப்ப சரீர செயல் சமைப்பு முறை அமில குண சுவாச நிலையில் குணத்துடன் ஒன்றி
3.தனது சரீரமற்ற ஆவித்தன்மையின் வீரிய குண எண்ணத்தை செயல் நடத்திட
4.சரீரமுடைய காந்த அமில குண சுழற்சியில் அகப்பட்டுச் சுவாச கதி அலையில் உட்சென்று தான் செயல் கொண்டிட
5.தனக்கு என்று ஓர் வாய்ப்பு நிலை ஏற்படுத்தும் “நரம்பு மண்டல செயல் நிலைகளில் நகர்ந்து ஓடி…” அதே கதியில் செல்லும் அவைகள்
6.தங்கள் எண்ணத்திற்கொப்ப ஆங்குள்ள உயிரணுக்கள் செயலை விட மிக வீரியமான தம் குண எண்ண நிலை கொண்டு வெற்றி உலா வந்து
7.தன் எண்ணம் கொண்டு சரீர கதியையே மாற்றி அமைத்துத் தமது எண்ணத்தின் வலுவை வலுவாக்கி
8.அதன் செயல் கொண்டு செயலுறும் இயந்திரகதி சரீரமாக்கி
9.தனது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற பாங்கில் துர் ஆவிகள் புகுந்த உடலில் செயல்படும்.

ஆவிகளின் துர்க்கதி வினைச் செயலை நீக்கிட… மார்க்கம் காட்டிய அன்பு நிலை வெளிக்காட்டும் மாமகரிஷியின் தொடர்பு பெற்ற “தேவகுமாரன் இயேசுபிரான் அவர்கள்” துர் ஆவிகளை விரட்டிச் சொஸ்தப்படுத்தியது அறிய வேண்டிய சூட்சுமம்.

“பன்றிகள்” என்று துர்க்குணங்களைச் சுட்டி காட்டிய இயேசுபிரான் அந்தப் பன்றிகள் வாசம் செய்யும் இடம் சைத்தான் என்று மனித சரீரத்தைக் காட்டினார். ஏன்…?

துர்குண எண்ணமாகிய பன்றியின் குணங்கள் கொள்ளும் பொழுது… பன்றி கழிவை உண்டு அந்தக் கழிவின் தீய செயல் குண அமிலங்களைத் தனது சரீரத்திற்கு ஏற்றுக் கொண்டு அப்பன்றியியின் கழிவில் நல்ல நிலைகளை வெளித்தள்ளும் செயல் சரீர செயலிலும் நடைபெறுதல் போலவே (பன்றியின் மலம் துர்வாசனை வீசுவதில்லை)…
1.அதே பன்றி குணம் கொள்ளும் மனிதன் தன் ஈர்ப்பின் செயலுக்குத் துர் ஆவிகள் அவன் உடலில் ஏறி (சைத்தான்)
2.சரீரம் கிடைத்தவுடன் மனித சரீரத்திற்குள் அவை நுழைந்து
3.மனிதர்களை ஆட்டுவிக்கும் செயலாக… தன் இச்சைகளை அங்கே பூர்த்தி செய்து கொள்ளும் செயலுக்கு
4.எந்தச் சரீரத்தில் ஏறியதோ அங்கே பயமுறுத்தும் காரியார்த்தவாத செயல் நிலைப்படுத்தி
5.தங்கள் இஷ்டம்போல் அச்சரீர உயிர் ஆத்மாவையும் அடிமை கொண்டிட அதி ஆவேச செயல் நிலைப்படுத்தும் என்பதை
6.அந்த ஆவிகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் செயல் திறத்தால் அறியலாம்.

ஆனால் அந்தத் துர் ஆவிகளை இயேசு பிரான் கடலில் சென்று விழச் செய்து மாள வைத்தார் என்பதன் பொருள் என்ன…?

அத்துர் ஆவி ஆன்மாக்கள் மனிதச் சரீர செயலில் தன் தனது நடைமுறைகளுக்கொப்ப செயல் கொண்டிடும் விதம்… நாத குணங்கள் போக்கி… தான் செய்யுறும் குணநலன்படுத்தி ஆட்டுவிக்கும் செயலில்…
1.உயரிய சக்தி பெற்ற ஆத்ம ஞானிகள் அவைகளை நீக்கச் செய்திட்ட சூட்சுமப் பொருள் என்ன…?
2.அவைகளை விரட்டிட்ட செயல் சூட்சுமத்தை நாம் அறிந்திட வேண்டும்

“துர் ஆவிகள் பன்றிக்குள் நுழைந்து…
கூட்டம் கூட்டமாகக் கடலுக்குள் விழுந்து செத்தொழிந்தன…
நீங்கள் சுகம் அடைந்தீர்கள்
இனி மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்
தேவனின் ராஜ்ஜியம் சமீபத்தில்…!” என்று
ஏசுபிரான் போதனைப்படுத்தி வழிகாட்டிய அந்தச் செயல் முறையால் ஆவி ஆத்மா வசம் அகப்பட்டவன் எப்படிச் சுகம் அடைந்தான்…?

பன்றிக்குள் நுழைந்தன ஆவிகள் என்பது… எப்படி அவைகள் பன்றியின் செயல் நிலையில் ஒன்றி ஒடுங்கின…? என்பதை அத்துர் குணங்களின் வசம் உள்ள ஆவி ஆன்மாக்கள் அக்குணங்களையே ஆட்கொள்தல் என்பதே… “பன்றியின் உள் நுழைதல் என்று சூட்சுமம் காட்டி…” அவைகளைக் கடலுக்குள் தள்ளியதாகக் கூறும் விதம்… அத்துர் குணங்களாகிய பன்றிகள் மாய்க்கப்பட்டுக் கடலுக்குள் தானே விழுந்து விட்டன…! என்ற தத்துவ ஞான போதனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்…?

தங்கள் மனம் போல் வியாக்கியானப்படுத்தும் இந்த உலகம் அந்த உண்மையை அறிந்து கொண்டதா…? அதன் செயல் நிகழ்வு எப்படி நடைபெறுகின்றது…?

இச்சரீர கதியில் என்பது துர்குணம் வாழும் ஆவி ஆத்மாக்களை ஞானக்கடலிலே விழச் செய்தான் தேவகுமாரன்.. ஞானக்கடல் எங்கிருந்து வந்தது…?
1.தன் சக்தியின் சக்தியை அவர்களுக்கு (ஆவிகளுக்கு) ஊட்டுவித்து
2.தன்னையே அவர்களிடம் ஒப்புவித்து… தானே அவர்களானான் என்பதே
3.அன்பால் வசப்படுத்தும் மனதினன் அவ் அன்பு நிலை எம் மக்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ
4.அதே நடைமுறைச் செயலில் நல்வினை ஆக்கும் செயலுக்குப் போதனைப்படுத்திய ஞானவான்
5.தன் மன நிலையுடன் அவர்களின் மன நிலையை ஒன்றச் செய்து
6.தன் வசமாக்கி… தெளிவுபடுத்தி… மனங்களின் அன்பை அருந்த “ஞான நிலை போதனை கொடுத்து…”
7.குரு காட்டிய வழி (உயிரான்மா அறிந்த சொல்) என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது
8.அவனுள் ஏற்படும் மாற்ற நிலையானது மனம் அன்பின் வசப்படும் தன்மையும்
9.அதனுள் சுரக்கும் ஞானக்கடல் நிலை என்பது ஞானத்தின் பரிமாணத்தைக் கூறும் சூட்சும செயல்படுத்தி
10.அந்தச் செயல் முறையின் நடைமுறையைக் காட்டினான் தேவகுமாரன் அன்று.

ஆகவே… ஞானத்தின் வசம் ஒப்புவிக்கப்படும் மனமானது… “அன்பின் வசம் உற்று…” நல்வினைப் பயன் ஏற்பட நற்குண வழிகாணும் செயல் நிலை வந்தது. (அன்பால் தான் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த முடியும்… நம் வசத்திற்குக் கொண்டு வர முடியும்)

எந்தெந்த நற்குண செயல் போதனைப்படுத்தப்படுகின்றதோ… அவைகளைத் தனக்குகந்த போதனையாக ஏற்று… அந்தப் போதனைகள் வழி மனம் செலுத்தப்பட முயற்சி என்ற நம்பிக்கை வேண்டும்.

அந்த முயற்சி தானே உருவாகும் செயலுக்கு முன்பு யார் போதனைப்படுத்துகின்றார்களோ “அவர்களின் காந்த வீரிய எண்ணச் சுழற்சி செயலில்…” மனம் நாட்டம் கொண்டிடல் வேண்டும்.

எண்ண வலுவின் செயல் கொண்டிடும் நிலையானது எந்த நிலையானாலும் அது பக்தியோ ஞானமோ அல்லது வேறு உபாய காரியச் செயல் முறையோ “அந்தத் துர் ஆவிகள் விலகும்…” என்பது அவைகள் குணங்களுடன் (துர்க்குணங்கள்) ஒன்றி வாழும் பொழுது… அக்குணங்களையே களைவிக்கும் மந்திர ஜெபம் என்ற சூட்சமப் பொருளானது… நாம் எடுக்கும் தியானத்தின் வழியில் தான்.

தியானத்தின் மூலம்… நற்குண வீரிய சொல் ஏற்கும் மன ஜெப நிலை வசம் உயரும் முறையாக அது மாறி தன் நற்குணத்தில் சுகம் பெறும் என்பது
1.அந்த ஆவி ஆத்மாக்களின் வீரிய குணம் நற்குண அதி வீரிய ஜெப குணம் ஞானத்தால் அடக்கப்பட்டு
2.அந்தத் துர்குணங்கள் மாய்க்கப்படுவதையே ஞானமாம் கடலில் பன்றிகள் விழும் பொழுது
3.அதனுள் வாசம் செய்த துர் ஆவிகளும் செத்தொழிந்தன (அதன் வீரியத்தை அடக்குதல்) என்கின்ற சூட்சுமம்.

மனநிலையை ஞானத்தால் உயர்த்திக் கொண்டால்… நற்குணத்தின் வீரியத்தால் சுகம் பெறலாம்…! என்பது தேவகுமாரன் காட்டிய அன்பின் தத்துவம்

November 21, 2023

உபதேசிகன்

ஜெபத்தின் சூட்சும ரகசியங்கள் என்ன…?

தன்னைத்தான் உணர்ந்து... தன்னைத்தான் நம்பி... தன்னுள் இறை குணத்தன்மைகளைத் தாய்மை குழந்தையைச் சுமப்பது போல சுமந்து கொண்டிட வேண்டும்.

உலகோதய நடைமுறை வாழ்க்கையில் தனக்கு எத்தகைய இன்னல்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும்… இறை குணத் தாய்மையைச் சுமந்து… அன்பு கொண்டு குழந்தை போல் நேசிக்கும் மனம் கொண்டவன்…
1.ஈசன் வேறல்ல… தான் வேறல்ல என்ற வகையில்
2.தோற்றத்தில் பணிவும் சொல்லில் கனிவும் கொண்டவனே “உபதேசிகனாக” வளர முடியும்

அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகம் உய்ய வேண்டும்… அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும்… என்ற முழுமையாக நிலை நிற்றல் போல… அன்பு கொண்ட குருவாகத் தன்னை வெளிப்படுத்தியவர் இயேசு.

1.உள்ளொன்றும் புறம் ஒன்றும் கொண்டு சாதாரண நடைமுறையில் தூசிக்கும் மாக்கள் போல்
2.தன் உணர்வில் தான் வலு கொண்டிட்ட எண்ணத்தை வெளிக்காட்டி
3.உயர்ஞானம் வலுக்கொள்ள வேண்டிய வளரும் ஞானப்பயிர்களின் ஊடே - சூட்சுமமாகப் பேதமையை ஏற்படுத்தி
4.தன்னையே எண்ணித் துதிக்கும் திருக்கூட்டங்களை ஏற்படுத்தி அந்த ஆத்மாக்களைத் தனக்கு அடிமை கொண்டு
5.தன் உயிராத்மா வலுக் கொள்ள வேண்டும் என்ற சுய தேவை காரணமாகத் தான் சக்தி ஈர்த்திட்டே
6.உங்களுக்கு அளித்திடுவேன் என்ற சொல் வாக்கினால் நம்பிக்கையை ஊட்டி
7.அவ்வாய் வார்த்தையே சதம் என்று நம்பி
8.பேரருள் சக்தி பெற்றிட வேண்டிய தன் உயிராத்மாவை எண்ணிடாத ஜீவர்களின் எண்ணங்களை வசப்படுத்தி
9.குரு என்ற பெயரில் உலவிடும் எத்தனையோ ஆத்மாக்கள் போல் அல்லாதபடி
10.உண்மையின் ஜெபத்தை ஊட்ட வந்த அன்பு மகான் இயேசு.

அந்த மகானின் போதனைகளைத் தியான வழியில் கைக் கொள்வோரைக் காண்பதுவும் அரிதாகிவிட்டது.

ஆணவத்தில் இருந்து பேச்சும் மூச்சும் என்று… பற்பல தத்துவ விளக்கங்கள் ஞானவான்கள் என்று கூறிக் கொள்வோர்… “உயர் நிலை பெற வேண்டிய ஜீவர்களைப் பாவிகள் என்று அழைத்து…” ஆவேச உணர்வுகளை ஊட்டும் வழியாகத் தேனிற்குள் மறைந்த கசப்பாக ஊட்டுபவர்கள்… உண்மையின் சாரத்தை உணர்ந்து கொண்டார்களா…?

சிலுவையைச் சுமந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும்… பின் உயிர்த்தெழுதலும் தான் கொண்ட அனுபவ அவஸ்தையே.

மனித ஆத்மாக்கள் பிறப்பு வளர்ப்பு சாக்காடு என்ற வகையாக உலகினுக்குப் பேருண்மைகளைப் போதனையாக்கிடவே தன்னையே ஆட்படுத்தி உரைத்ததில்…
1.உடல் என்ற சிலுவையில் ஆணவத்தன்மையால் ஆத்ம அறிவு அறையப்பட்ட பின்
2.மரித்தல் என்ற செயலுக்கு ஆணவமும் அகப்பட்டு மாய்ந்து
3.உயிர்த்தெழுதலாக மெய்யறிவும் தோன்றுதல் என்பதிலும்
4.”அறையப்படும் அவஸ்தை வேண்டுமோ…?” (மீண்டும் மீண்டும் உடல் பெறுதல்)

வினாவின் விடையைத் தெளிந்து கொள்…!

1.ஐந்து அப்பங்கள் என்பதே பஞ்சேந்திரியங்கள் செயல்படும் இந்த உடலப்பா…
2.இணை மீன்கள் இரண்டு என்பதே பஞ்சேந்திரியங்களில் செயல்படும் சுவாசமப்பா.

தன்னையே எண்ணி ஜெபித்திடலே சூட்சமம்….!

நானே அப்பமுமாக இருக்கின்றேன்... என்னைப் புசிப்பவனுக்கு எந்தவிதப் பசியும் இல்லை…! என்று உரைத்தவற்றில் தியானமே முதன்மையாக்கப்பட்டது.

உபதேசம் கொள்வோனிடம் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டை விளக்கிட வேண்டாமா…? அதுவும் உண்டு.

என்னையே காட்டிக் கொடுக்கும் சீடன் என்னிடத்திலிருந்து அப்பம் பெறுவாண் என்று காட்டிக் கொடுக்கும் அந்தச் சீடனுக்கு அப்பத்தையும் அளித்து… அந்தச் சீடன் கொண்டிட்ட எண்ணத்தையே சைத்தான் தன் செயலைத் தொடங்கி விட்டான் என்று கூறியதன் பொருள் என்ன…?

ஞானம் கொள்ள வந்தோர் பெற்றது அப்பம். ஞானம் கொண்ட சீடன் பெற்றதும் அப்பம்.
1.உபதேசம் ஒன்று தான்…
2.கொள்ள வேண்டியவன் கொண்டிட்ட “எண்ணத்தின் மாறுபாடு புரிந்ததா…?”

நீரில் மறைந்துள்ள காற்றைக் கொண்டு வாழும் மீனின் தன்மை போல் மனிதன் “தியான எண்ணத்தின் வழி… சுவாசத்தின் வழி…” ஈர்த்திடும் பக்குவம் கூறப்பட்டது.

ஒலி கொண்டு ஒளி பெறும் சூட்சுமமாகச் சப்த ஒலி நாதங்கள் செயல் கொண்டிடும் ஆத்மாவின்… உள் நிறைவாகச் சேமிப்பாகக் காட்டவே “ஏழு” கூடைகளுக்குள் நிரப்பப்பட்ட ஆகாரம்.

உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பதிவாக வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன். அந்தப் பதிவின் துணை கொண்டு உங்களை நான் (ஞானகுரு) பிரார்த்திக்கும் பொழுது உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும் உங்கள் உயிரான ஈசனுக்கு அமுதைக் கொடுப்பதும் அது அபிஷேகிக்கும் நிலையாகவும் அடைகின்றது.

அதை நீங்கள் சுவாசிக்கப்படும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று நல்ல உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் சந்தர்ப்பமாக இப்போது உருவாகின்றது.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து நான் தியானிக்கின்றேன்.
2.உங்களை எண்ணி நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அது உமிழ் நீராகி அருள் சக்தியாக மாறுகின்றது
3.அருமருந்தாக மாறுகின்றது. அருள் வழி வாழவும் முடிகின்றது.
4.உங்களால் நானும் நன்மை அடைகின்றேன்… என்னால் உங்களுக்கும் நன்மை ஏற்படுகிறது.

ஆகவே நாம் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எது இருந்தாலும்… இந்த உலகம் முழுமைக்குமே தீவிரவாதம் என்ற நிலைகளில் மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலையாக வந்துவிட்டது.

1.கருவில் இருக்கும் பிண்டங்களை அழித்து
2.அதையே உணவாக உட்கொள்ளும் நாகரீகம் உலகமெங்கும் பரவி விட்டது.

தாய்லாந்து அமெரிக்கா சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் கருச்சிதைவாக்கப்பட்டு கருசிதைவான அந்தக் குழந்தைகளை உணவாக எடுக்கப்படும் பொழுது “முதுமையானவன் இளமையாக முடியும்…” என்று விஞ்ஞான அறிவில் கூறப்பட்டு… தவறான வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படி நடந்து கொள்வோர் நாளை எங்கே செல்வார்கள்…?

நரமாமிசத்தை உட்கொள்ளும் அகோரிகள் இங்கே இந்தியாவில் இருக்கின்றார்கள் சுடுகாட்டில் வெந்து கொண்டிருக்கும் உடல்களை “அதைத் தள்ளி விட்டு எனக்குக் கொடு… என்பார்கள்.

அவருடைய தசைகளைத் தின்று சொர்க்கத்துக்கு அவனை அனுப்புகிறேன் என்று சொல்லும் அகோரி என்ற சாமியார்களும் உண்டு.

இதைப் போன்ற அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகைக் காக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து
2.உடலுக்குள் அருள் ஞான சக்திகளைப் பெருக்கி
3.உங்கள் மூச்சும் பேச்சும் உலக இருளை நீக்கிடும் சக்தியாக நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவனான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த அருள் சக்தியை நாம் பெற்று எந்நாட்டரையும் பெறச் செய்தால் அவர்கள் அறியாத நிலையில் இருந்து அவர்களும் மாறுபட்டு மனிதன் மனிதன் என்ற நிலைகள் உணர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன்.

November 20, 2023

தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.

அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.

வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!

அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.

இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.

1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.

தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.

சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.

எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”

“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).

உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.

தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.

அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?

அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.

1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நாளும் வளர்க்க
1.நாம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாதபடி…
2.அது வலுவாகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் இன்னொரு பிறவிக்கு வராதபடி
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் சென்று இந்த உடல் பெற்ற நஞ்சுகளை அங்கே கரைத்து
4.பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதற்கு நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களை விண் செலுத்தினால் அவருடைய தொடர் கொண்டு நாம் அந்த சக்தி எளிதில் பெற முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி தீய உணர்வுகளை நல்ல அணுக்களாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி ஊசி மூலம் மருந்தை ஏற்றி அதை இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்து நோய் உருவாக்கும் அணுக்களை மாற்றி அமைக்கின்றார்களோ அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி
2.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

உடலை உறுப்புகளை உருவாக்கி அணுக்களில் எல்லாம் காந்தம் உண்டு. இதை இணைத்து அங்கே பெருக்கச் செய்ய வேண்டும். உடலில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கும். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தள்ளி விடுங்கள். குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

நீங்கள் இடும் மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலே பரவி இந்தப் பூமியும் பரிசுத்தமாகும் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் தெளிவாக இது உதவும்.

ஆகவே இந்தத் தியானத்தை மேற்கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பரப்புங்கள்
1.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றிடுங்கள்
2.அருள் ஞானத்தின் உணர்வைக் குவியுங்கள்… எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள்
3.இந்த பூமியில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளை மாற்றி அமையுங்கள்.

அருள் உணர்வு கொண்டு சகோதர உணர்வை வளர்த்து ஒன்றுபட்டு வாழும் சக்தியைப் பெருக்குங்கள் இதை நாம் செய்தோமென்றால் சகோதர உணர்வுகள் வளரும். அருள் ஞானம் பெருகும்.
1.அருள் வாழ்க்கை வாழும் இந்தியாவாக… மகரிஷிகள் நாடாக மாற்றலாம்
2.இதை வைத்து உலகையே மாற்ற முடியும்.

ஏனென்றால் அணுவிசையால் இந்த உலகையே அழித்திடும் தன்மைகள் வரப்படும் பொழுது அந்த அணுக்கதிரியக்கங்கள் பரவாதபடி தடுத்து நிறுத்தும் சக்தி
1.இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பெறுவோம் என்றால்
2.உலகையும் நாம் காக்கும் திறன் பெற முடியும்… அணுகுண்டுகள் வெடிக்காதபடி நாம் செய்ய முடியும்.
3.விஷத்தன்மை பரவாதபடி கதிரியக்கங்கள் வெளிப்படாதபடி செய்ய முடியும்.

முழுமையாக இதை நம்புங்கள் உங்களுக்கு அந்தத் திறன் உண்டு உலக இருளைப் போக்குவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். விஞ்ஞானத்தின் செயலினால் வரும் தீமைகளில் இருந்து மக்களை விடுவிப்போம்.

ஆகவே… அருள் உணர்வுடன் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள் என்று பிராத்திக்கின்றேன்.

November 19, 2023

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.

அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி...!

மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”

அன்பு தானப்பா கடவுள்…!

சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.

தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.

வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.

1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்