1.இறை சக்தியைக் கண்டிடவே…
இறைவன் பூஜை செய்து விட்டால் இறைவன் அருள் கிட்டுமா…?
2.அந்த இறைவனின் எண்ணம்
மட்டுமே இருந்து…
3.அந்த இறைவனே வந்து நமக்கு
எல்லா அருளையும் அருள்வான்…! என்று
4.இறைவனையே எண்ணிப் பூஜித்தால்
இறைவன் அருள் கிடைக்குமா…?
ஒரு தாய் தன் குழந்தைக்குப்
பாலூட்டும் பருவம் முதல் எந்த எண்ணத்தை முதலில் பாய்ச்சுகின்றாளோ அந்த எண்ணம் அந்தக்
குழந்தைக்குச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.
ஒரு குழந்தை அது பிறந்தது
முதல் அந்த இல்லத்தில் உள்ளோரின் எண்ணத்தின் சுவாச நிலைகளை வளர்ந்து வரும் அந்தக் குழந்தைக்கும்
நாம் அளிக்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.வளரும் பருவத்திலேயே
நல் உணர்வை
2.நாம் அந்தக் குழந்தைக்கு
அளிப்பது தான்
3.இறை சக்தியை அதற்கு அளிக்கும்
நிலையப்பா…!
இறை சக்தி என்பதைப் பல
நாமம் கொண்டு அழைத்து வணங்குகிறோம். அப்படி வணங்கும் பொழுது நம்முள் உள்ள இறைச் சக்தியை
1.நாம் எந்த நிலை கொண்டு
நாம் அதன் தன்மையைப் பெற்றுள்ளோமோ
2.அதற்குகந்த சக்தித் தன்மை
தான்
3.நாம் அழைத்து வணங்கும்
இறை நாமத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றது.
இந்த மனித வாழ்க்கையில்
நம் எண்ணத்தில் பல கலக்கங்களைக் கொண்டு கோப தாப துவேஷ நிலைகளை எல்லாம் நம்மையே சுற்றிக்
கொண்டுள்ளது.
அந்த நிலையிலிருந்தெல்லாம்
நாம் நம்மைச் சாந்தப்படுத்திச் சமநிலைப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் நிலை கொண்டு
1.நாம் அடைந்த இத் தீய
நிலைகளை எல்லாம்
2.நம்மையே சுற்றிக் கொண்டுள்ளாமல்
இருக்கும் நிலைக்கு
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச்
சாந்த நிலை கொண்டு
4.நம் நிலையில் என்றும்
நாம் மாறுபடாமல்
5.சாந்தமான நிலையில் அன்பு
கொண்டு வாழ்ந்திடும் வாழ்க்கையே
6.அந்த இறை சக்தியை நாம்
பெற்ற வாழ்க்கையாகும்.
பூஜையும் பல நாமங்கள் கொண்டு
ஜெபிப்பதும் ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல.
மன அமைதிப்படுத்திட நம் மனதை அன்பு கொண்டு அந்த ஆண்டவனின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கும் பொழுது அந்த நாமத்தின் வழியினிலே “நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலை தான் அது”