உதாரணமாக தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து
ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யார் மீது அவர் பற்று கொண்டு
வாழ்ந்தாரோ அவர் தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டு ஆ...! என்று அதிர்ச்சி அடைந்தால்
போதும். அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
இப்படி இந்த உடலுக்குள் வந்த பின் அந்தப்
பேய் மனம் கொண்ட உணர்வுகளையே இந்த உடலுக்குள் தூண்டும். ஆனால் புகுந்த உடலில் எந்த
எரிச்சல் இல்லை என்றாலும் இது (புகுந்த ஆன்மா) “எரியுதே... எரியுதே...!” என்று எரிச்சலை
ஊட்டும்.
இந்த உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும்
மடியத் தொடங்கும்.
1.இத்தகைய நிலைகள் ஆன பின் தாங்காது
2.இதுவும் அதே வேலையைச் செய்யும்.
இதிலிருந்து நாம் எப்படி மீள்வது..?
ஆனால் பக்தியின் தன்மையில் நாம் இதற்கு
என்ன செய்கிறோம்...? கோவிலில் போய் அர்ச்சனை செய்தால் இந்தக் கஷ்டம் தீரும். அதற்கும்
முடியவில்லை என்றால் யாகத்தை வளர்த்துப் பாவத்தைப் போக்கிக் கொள்...! என்று சொல்கிறார்கள்.
யாகத்திலே அவர்கள் சொல்லும் மந்திரத்தைக்
கேட்டுப் பதிவாக்கிக் கொள்கிறோம்.
1.இன்ன மந்திரத்தையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் உனக்குத்
தொந்திரவு இல்லை
2.காளி உன்னைக் காப்பாற்றும்...! என்று
எந்தக் காளியை அவர் வணங்குகின்றாரோ இவ்வாறு சொல்வார்கள்.
உதாரணமாக புலியைக் கண்ட பின் மற்ற மிருகங்கள்
எல்லாம் அஞ்சத் தான் செய்யும். பொதுவாகக் கோப உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள்... அந்தக்
காளியை வணங்கத் தான் நேரும்.
அந்த மந்திரத்தைச் சொல்லியே வாழ்ந்து கடைசியில்
அந்த ஆன்மா வெளியிலே வந்தது என்றால் அதே மந்திரத்தைச் சொல்லும் போது “காளியை (ஆனால்
அது ஆவி) நான் வசியம் செய்துவிட்டேன்...!” என்பார்கள்.
இதற்குள் ஒரு உணர்வினைச் செலுத்தி கரு
மையாக்கி உடலிலே ஒரு இரட்சையாகப் (தாயத்து) போட்டுவிடுவார்கள்.
போட்ட பின் புலியைக் கண்டு எப்படி மற்ற
மிருகங்கள் அஞ்சி ஓடுகின்றதோ இதே போல் அந்த இரட்சையைத் தொட்ட பின் உடலில் இருக்கும்
அந்த ஆன்மா (முதலில் புகுந்தது) பயந்து ஓடும்.
பின் இதே உணர்வின் தன்மையைச் சில காலம்
சுவாசித்தால் போதும். தாயத்து கட்டி இருப்பவர்கள் பெரும்பகுதியானோர் உடலில் எல்லாம்
பார்க்கலாம். கை கால் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும்...! (தாயத்தில் இருக்கும்
பிறிதொரு ஆன்மாவின் இயக்கம்)
இந்த உணர்வுகள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
எதிர்நிலையாகி இடையூறு ஊட்டும்.
1.இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசித்தால்
அப்புறம் இன்னொருத்தரிடம் போய் தாயத்தைக் கட்டச் சொல்லும்.
2.இன்ன இடத்தில் போய்த் தாயத்தைக் கட்டினால்
நன்றாகும் என்று கேள்விப்பட்டவுடனே அங்கே போவோம்.
3.இப்படி ஒவ்வொரு மந்திரக்காரர்களிடம்
நாம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டியது தான்...!
நாம் இறந்த பின் என்ன நடக்கும்...? இதே
மந்திரத்தைச் சொல்லி நம் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான் “இன்னொரு மந்திரவாதி...”
முதல் மந்திரக்காரன் என்ன வேலை செய்தானோ
அதே வேலைக்கு நம்மை இவனும் பயன்படுத்துவான். யானை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி
ஆக வேண்டியது தான்...!
நாம் நினைக்கின்றோம் உடலில் இருக்கும்
பொழுது பல தொல்லைகள் என்று...! ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த நிலை ஆகின்றோம்...!
என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).
ஆனால் விஞ்ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்கள்.
ஒரு தாய் கருவுற்ற பத்து நாளிலேயே அந்தக் கருவில் வளரும் சிசுவை ஒரு காந்த ஊசி கொண்டு
(கதிர்கள் மூலமாக) இலேசாக எடுத்து மோதச் செய்கிறார்கள். அப்பொழுது அந்தச் சிசு வேதனையால்
துடி துடிக்கின்றது...!
இதை எல்லாம் நேரடியாகக் காட்டுகின்றார்
குருநாதர். ஏனென்றால் அன்றைய ஞானிகள் இதை எல்லாம் மிகவும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.
1.கருவுற்ற தாய் ஒன்றைக் கூர்மையாக உற்றுப்
பார்த்துப் பயந்து அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது
2.கருவில் வளரும் உயிருக்கும் இந்த உணர்வுகள்
பாய்ச்சப்பட்டு
3.தாய் பயப்படுவது போன்றே அந்தக் குழந்தையும்
பயப்படுகிறது.
நாம் துடிப்பதைப் போன்றே கருவில் இருக்கும்
குழந்தையும் துடிக்கின்றது. இதுகள் எல்லாம் கருவில் வளரும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக
அமைகின்றது.
இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமலே
இது போன்ற தீமைகள் வருகிறது. இதை எல்லாம் மாற்றி அமைத்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து
உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்... உடலுக்குப் பின் ஞானிகள் வாழும் எல்லையை
அடைய வேண்டும்...! என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன் (ஞானகுரு).