1.உள் மனதை அடக்கும் தன்மை முதலில் வந்துவிட்டால்
2.வெளி மனதும் அடங்கிவிடும்.
3.உள் மனதை அடக்கிவிட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை காண்பாய்.
4.வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியின் ஆகர்ஷண சக்தியையே வென்றிடலாம்.
5.தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்.
6.“நீ வேறு... அவன் வேறு அல்ல...!” என்ற நிலையை நீ பெற்றிடு. நான் சொல்லும்
பாடம் இதுவே தான்,
நம் மனமே தெய்வமாக்கும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான்
தெய்வம் என்பதில்லாமல் மனதையே தெய்வமாக்கிக் கொள்ளுங்கள்.
1.உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கருளும் பாக்கியம் வரும்.
2.தியான நிலையின் மூலமாகப் பெறும் அருள் மணங்களை உன் மனதில் உருவாக்கு.
3.சுவாச நிலை என்பதன் உட்பொருளே இது தான்.
4.உன் மனதை வாசனையாகப் பெற்றுவிட்டால் கோடி இன்பம் இதுவே தான்…!
5.நுகரும் தன்மையில் இருந்திடப்பா…! மலரும் கழிவும் வேறல்ல...! என்னும் நிலை
தெரிந்திடும்.
கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. மணம் என்னும் வாசனையைப் பெற்றுவிட்டால்
எல்லா நிலையும் மாறிவிடும்.
யோகியாகச் சென்று தான் இதை அடைய வேண்டும் என்ற நிலை இல்லை. இப்பொழுது வாழும் நிலையிலேயே மெய்ப் பொருளை உணர முடியும்.