இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால்
பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம்
கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.
பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின்
ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
1.எந்தச் சுவையின் உணவு முறையில்
மனிதன் உண்டு வாழ்கின்றானோ
2.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப்
பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.
மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின்
உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு... இறப்பு...! என்ற இயற்கையின்
கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே
தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான்
என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக்
கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்... எங்கே
செல்ல வேண்டும்... ஏன்... எதற்காக.. எப்படி...? என்று அறியும் நிலை இல்லை.
ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத
தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்...!”
மனித உயிரின் ஜீவித உடலின் உயிர்
அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத்
தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின்
கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.
(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம்
உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது.
அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ
அதற்கு ஒப்பத்தான் நம்முடைய் எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)
இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின்
அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும்
பெறும் தகுதியும் உண்டு.
ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின்
கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்...!” என்ற முறைப்படுத்திச்
செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின்
தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.
உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.