
சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்
குருநாதரை விண்
செலுத்துவதற்கு அவருக்கு ஒரு துணை தேவைப்படுகின்றது.
1.நேரடியாக
எங்கும் போக முடியாது… உந்து விசை
வேண்டும்.
2.முகப்பை
எடுத்து எண்ணத்தைத் திசை மாறாது கொண்டு போக வேண்டும்.
திசை
மாறிவிட்டது என்றால் வான
வெளியில் மிதந்து விடும். அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோள்களின் ஈர்ப்பிற்குள் சென்று விடும்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது.
சந்திரன்
இருக்கிறது என்றால் அங்கே செல்லும். அங்கே வளர்ச்சியற்ற அணுவாக இருக்கும். மீண்டும் அங்கிருந்து கடந்து
செல்லும் திறன் இருக்காது. அங்கே அடைபட்டுப் போகும்.
இவ்வாறு எத்தனையோ வகைகளை குருநாதர் சொல்லித்தான்
இப்பொழுது அதைச் செயல்படுத்துகின்றோம்.
1.குரு
இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது.
2.குரு
காட்டிய வழியினைப் பதிவு செய்தால் தான் விண்ணுக்குச் செலுத்த முடியும்.
கிணற்றுத்
தவளை போன்று சுற்றிக் கொண்டு எடுப்பதென்றால் முடியாது.
20 வருட
அனுபவத்தைக் கொடுத்துத் தான் அதைப்
பெறச் செய்கின்றார். ஆகையினால் தான் உங்களுக்குள் அடிக்கடி இதைப் பதிவு செய்து நினைவுகளை ஒவ்வொன்றாகக் கொண்டு
வருகின்றோம்.
அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இந்த முறைப்படி தியானம் எடுக்க வேண்டும். ஆன்மா வெளியே சென்று விட்டால் ஒளியின் கருவை
உருவாக்க வேண்டும்.
காலை துருவ தியானத்தில்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்
மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வையும்
ஒன்றாக்க வேண்டும்.
1.அதை
உருவாக்கித் துருவ நட்சத்திரத்திலிருந்து
வெளிப்படும் உணர்வைப் பெற்றுச் சப்தரிஷி மண்டல ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்திற்குச் செல்ல முடியாது. அங்கே இருக்க முடியாது
3.அந்த
வட்டப்பாதையான சப்தரிஷி மண்டலத்தில்
தான் சேர முடியும்.
4.அதற்குண்டான
முகப்பை எடுத்து இணைத்துச் செலுத்திய பிற்பாடு தான் அங்கே சேரும்.
இராக்கெட்டைச் செய்கின்றார்கள் கம்ப்யூட்டரில் படங்களை எடுக்கின்றார்கள். அதைச் சேர்த்துக் கொண்டு முகப்பில் வைக்கின்றார்கள்.
விண்ணிலே
செலுத்தப்படும் பொழுது அந்த முகப்பைப் பார்த்து அதனின் ஈர்ப்புக்குத் தான் கொண்டு
போகும். கொஞ்சம் திசை மாறியது என்றால் வேறு எங்கே போகும்…! என்று சொல்ல முடியாது.
எந்த எந்தக்
கோள்களைப் படமாக எடுத்துப் பதிவு
செய்தார்களோ அதை இந்த முகப்பில் இணைக்க
வேண்டும். அந்த உணர்வின் துனை கொண்டு அங்கே செல்லும்.
இதைப் போன்று
தான்
1.உடலை
விட்டுப் பிரிந்து சென்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பாக
இணைக்கின்றோம்.
2.அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச் சேர முடியாது.
விலகிப்
போய்விட்டால் வேறு பக்கங்களுக்குச் சென்று விடும். கரணம்
தப்பினால் மரணம் என்பது போல பல வித்தியாசமான நிலைகள்
இருக்கின்றது.
குரு
செல்கிறார் என்றால் அது சரியான எல்லையை வைத்து அனுப்புவதற்கு எனக்குப் பயிற்சி கொடுத்தார். அங்கே செலுத்தும்படிச் செய்தார்.
1.அதை
எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று வரிசைப்படுத்தி எனக்குச் சொன்னார்.
2.அது
எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிற்பாடு தான் உடலை விட்டுப் பிரிகின்றார்.
3.சப்தரிஷி மண்டல உணர்வை
முகப்பில் எப்படி இணைக்க வேண்டும்…?
4.எவ்வாறு
விண் செலுத்த வேண்டும்…? என்று எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் அவர் உடலை விட்டுப் பிரிந்து அங்கே சேர்கின்றார்.
குருவை விண் செலுத்திய பிற்பாடு தான் அங்கிருந்து அதிக அளவில்
நான் சக்தியைப் பெற முடிந்தது.
உங்களுக்கும் இப்பொழுது வழிகாட்ட முடிகின்றது.