ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2020

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்

சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்...?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கி சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,நாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
 
அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.
 
1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்...
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்...
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
 
ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.
 
செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.
 
இது போன்ற நிலைகளில் விடுபட்டு இந்தப் பிறவி நிலை என்ற கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.
 
கீதை சொல்வது... நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்... அதுவாக ஒளியாகின்றோம்.
 
அது இல்லாது இவன் அப்படி... அவன் அப்படி... அவன் அப்படி... அவன் அப்படி...! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு... அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.
 
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து... நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
 
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.
 
அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகால துருவ தியான நேரமே...! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 
உங்கள் உடலில் உள்ள பல கோடி ஜீவ அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் தவறிவிடாதீர்கள்.
 
1.அருள் ஒளியைப் பரப்புங்கள்... அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்களையே சொல்லிப் பழகுங்கள்.... உங்கள் சொல்லைக் கேட்போரின் தீமைகள் அகலட்டும்.
 
ஆகவே... அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்... வளர்வோம்...!  நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.