உதாரணமாக கோப உணர்வின்
தன்மையை மீண்டும் மீண்டும் எண்ணி நாம் சுவாசித்தால் உடலுக்குள் அத்தகைய அணுக்கள்
உருவாகி தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.
இரத்தத்தில் முதலில் ஒரு அணுவாக
இருந்து அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது பல அணுக்களாகப் பெருகி விடுகின்றது.
இப்படி உருவாகி விட்டால் பல அணுக்களும் அந்தக் கார உணர்வை உணவாக உட்கொள்ளும் தன்மை
வரும். அப்பொழுது என்ன செய்யும்…?
1.இந்த மாதிரிக் கோபம்
வருவோரை எல்லாம் பாருங்கள். நரம்பெல்லாம் விடைத்துவிடும்.
2.அவர்கள் நரம்பை விடைக்க
வைக்கின்றார்களா…? இல்லை…!
3.ஆனால்… அந்த உணர்ச்சிகள்
இரத்த நாளங்களிலே அழுத்தம் அதிகமான பின் விடைக்கச் செய்கிறது.
கண்கள் எல்லாம்
சிவந்துவிடும். நெற்றியிலே பார்த்தோம் என்றால் கண்ணுக்கு வரும் ஓட்டங்களில் அதனுடைய
உணர்வுகள் வேகமாக இருப்பதைக் காணலாம்.
ஆனால் தவறு யார்
செய்தது…?
கோபப்படுவோரை வேடிக்கை
பார்த்தோம். அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாக விளைகிறது, அந்த உணர்வின் அணுக்கள்
பெருகப்படும் பொழுது அதனின் மலம் இரத்தத்தில் கலக்கின்றது.
இரத்தத்தில் கலந்து நம் உடல்
முழுவதும் சுற்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் வேகம் உணர்ச்சிகள் உச்சகட்டம் அடைகின்றது.
அதாவது ரேடியோக்களில்
ட்ரான்சாக்சன் என்று சொல்வார்கள்…! நம் உயிரிலே இந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
1.அது எந்த உணர்ச்சியோ அது
ட்ரான்சாக்சன்… இழுத்து இந்த உணர்வுகளை மூளை வரையும் சிந்திக்கச் செய்து
2.அந்த உணர்வின் அலைகள் உடல்
முழுவதும் பரவப்படும் பொழுது
3.நுண்ணிய நரம்புகளுக்குள்
இந்தக் கார உணர்ச்சிகளானால் அப்படியே பலூன் மாதிரி உப்பிவிடும்.
4.அப்பொழுது நம்மை அறியாதபடி
தலை கிண்… என்று இருக்கும்.
5.கண்களிலும் இதே போல்
இருக்கும்.
குழந்தை மீது பாசமாக
இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு சாமானை அந்தக் குழந்தை கீழே போட்டான்
என்றால் “அறிவு கெட்டதனமாகப் போடுகிறான் பார்…!” என்று உடனே இந்த வேகம் வரும்.
அதே போல் தன் மனைவியையே கூப்பிட்டு
ஒரு பொருளை எடுக்கச் சொன்னாலும் அவர்கள் அதை எடுக்கச் சென்றாலும் சரி…
1.சொன்னார்கள்… சரி மெதுவாக
எடுப்போம் என்று மனைவி கொஞ்சம் சாதாரண நிலைகளிலிருந்தால்
2.“நடப்பதைப் பார்…!” நான்
என்ன சொல்கிறேன்..? நீ எப்படி வேலை செய்கிறாய்…? என்று மனைவி மீது வெறுப்பான பேச்சு
வரும்.
அதே சமயத்தில் தொழில்
செய்யும் இடங்களில் நம்மிடம் வேலை செய்யும் பையனைக் கூப்பிட்டு வேலை சொல்கிறோம் என்று
வைத்துக் கொள்வோம்.
அவன் சரிங்க சார்…! என்று
கொஞ்சம் சாந்தமாகப் போனால் அவன் போகும் பொழுதே
1.நடையைப் பார்… இவன் போகும்
வேகத்தைப் பார்…! இவனெல்லாம் உருப்படுவானா..?
2.நான் சொல்கிறேன்… இவன்
எப்படி வேலை செய்கிறான்..? என்று
3.நம்மை அறியாமலே அவனை
இப்படி எல்லாம் திட்டுவோம்.
ஆக ஓ…ம் நமச்சிவாய..! சிவாய
நம ஓ…ம்…! நாம் திட்டிய உணர்வுகள் அவனிடம் இதைச் சொன்ன பின் அவன் காதிலேயும் இது
கேட்கிறது.
இதைக் கேட்ட பின்
அவனுக்குள்ளும் இதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன…? சார்… நம் மீது இப்படிக்
கோபிக்கிறாரே…? என்று அவனுக்குள்ளும் இதே கோபம் தூண்டும்.
அவன் போகும் பொழுதே இந்த
உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அந்த ஒரு ஃபைலை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம்
கொடுக்காதபடி வேறு ஒருவரிடம் கொண்டு கொடுத்து விடுவான்.
நான் கொடுத்து விட்டேன்
என்பான். ஆனால் நாம் சொன்னவரிடம் அது போய்ச் சேர்ந்திருக்காது.
அந்த நபரிடம் ஃபைல் வந்து
சேர்ந்ததா பார்த்து விட்டீர்களா…? கணக்கு பார்த்தாகியதா…? என்று கேட்கிறோம்
என்றால் அவர் வரவில்லையே என்பார்.
அந்தப் பையனை மீண்டும் கூப்பிட்டு… ஏண்டா உன்னை
எங்கே கொடுக்கச் சொன்னேன்…? எங்கேயடா கொடுத்தாய்..? என்று கேட்போம்.
1.ஏனென்றால் இந்த உணர்வுகள்
நாம் வெளிப்படுத்தியது தான் அந்தப் பையனுக்குள் சென்று இயக்குகிறது.
2.அதன் வழி அந்தப் பையன் வேலையைச்
சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.
குற்றம் யார் செய்தது…?
இது தான் ஓம் நமச் சிவாய…
சிவாய நம ஓம். நம் உணர்வுகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்ந்த
உணர்வுகளே அந்தந்த உணர்ச்சிகளை ஊட்டச் செய்கிறது.
அதே சமயத்தில் நாம் நுகர்ந்த
உணர்வுகள் நமக்குள் கருவாகி அந்த கார உணர்வின் அணுக்களின் தன்மை பெருகுகின்றது.
உதாரணமாக வீட்டிலே பெண்கள் கணவருக்குச்
சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப்
பார்த்ததுமே அந்த ஆவேசம் வரும்.
வைக்கும் பொழுது கொஞ்சம்
சும்மா நின்றால் போதும். போட்டு விட்டுப் போக வேண்டியது தானே… என்று அங்கேயும் இந்த
அளவுக்கு கோபம் பாய்ந்து வரும்… அடுத்து சண்டையும் வரும்.
ஆனால் உடலைப் பரிசோதித்தால்
இரத்தக் கொதிப்பு இருக்கும். எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான்
வரும்.
இந்த வேகம் எல்லாம் என்ன
செய்யும்..?
1.சிறு மூளையில் போய்
ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடத்தில் அதிர்வுகளை உருவாக்கும்
2.பலூன் மாதிரி உப்பிவிடும்…!
அது எந்த இடத்தில் இந்த
மாதிரி உருவானதோ அதன் மூலம் உடலில் இயக்கக்கூடிய எந்த பாகமோ உதாரணமாக நுரையீரல்
பாகமாக இருந்தால் அது விரிவடைந்து விடும். மூச்சுத் திணறல் அதிகமாகும்.
மூச்சுத் திணறல் அதிகமானால்
சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது போகும். இயக்கம் சீராக இல்லை என்கிற
பொழுது அது மனிதனை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
அதே போல் கையோ கால் பாகமோ
இருந்தால்.. ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியின் வேகம் வரும். அப்பொழுது
இதனின் அழுத்தமானால் அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.
கையோ காலோ இயக்கமில்லாது
போகும். டபக்.. என்று சுண்டி இழுத்துப் பிடித்துவிடும்.
ஏனென்றால் அந்தச் சிறு
மூளையிலிருந்து ஆணைகள் போகக் கூடிய உணர்ச்சிகளை (நரம்புகளுக்குள்)
தடைப்படுத்திவிடுகின்றது. இது எல்லாம் பலூன் மாதிரி உருவான நிலையால் ஏற்படும்
விளைவுகள்.
கைகளையோ கால்களையோ சுருக்கி விட்டால்
அபுறம் அதற்கு வேண்டிய மருத்துவங்களைப் பார்க்க வேண்டியதிருக்கும்.
அதே சமயத்தில் அங்கே பலூன்
மாதிரி இருக்கும் இடத்தில் அது வெடித்து விட்டால் மரணம் தான். இரத்தக் கொதிப்பாக
இருந்தது. ஆனால் திடீரென்று மரணம் அடைந்து விட்டார் என்று இத்தகைய நிலை வரும்.
இது எல்லாம் நாம் நுகர்ந்த கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்து அதிகமாகப் பெருகி விட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள்.