உடலை விட்டு உயிர்
பிரிந்து சென்ற பிற்பாடு எந்த நிலையில் ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது...?
1.நாம் எந்த நிலை
அடைகிறோம்...?
2.எங்கே எப்படி இருப்போம்..?
என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.
இதைப் பற்றி பலரும்
பல ரூபங்களிலும் பல விதக் கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகக் கேட்கப் பெறுகின்றோம்.
ஆனால் அறிந்த உண்மையை...
அறிந்த நிலையில் செப்புவதற்கு... இன்று யாருமில்லை...! அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து
செப்பினார்கள்.
நம் உடலை விட்டுச்
செல்லும் ஆத்மாவிற்குச் சுவாச நிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ
அந்த நிலையில் தான் சுற்றிக் கொண்டே இருக்கும்.
பூமியில் சுற்றிக்
கொண்டேயிருந்து மீண்டும் இங்கேயே இன்னொரு ஜீவ உடல் பெற்று ஜென்மம் எடுக்கிறதா…? அல்லது
இந்த நிலையிலிருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜென்மம் எடுப்பதில்லையா…? என்ற எண்ணம்
உள்ளது.
அச்சக்தியின் அருள்
பெற்ற அவ்வுயிரணு உருவம் பெற்ற நிலையில் எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன்
பெற்று உயிர் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்டே தான் அவ்வுயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளது.
1.உடலுடன் அஜ்ஜீவாத்மா
இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி
உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு
ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலை கொண்டும்
எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்வாத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான
எந்தச் சக்தி நிலை பெற்று அவ்வுயிரணுவிற்குச் சுவாச நிலை கிடைத்ததுவோ அதே நிலை பெற்றுத்தான்
6.மீண்டும் மீண்டும்
எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வுயிரணு
என்னும் ஆத்மா எல்லாமே..!
உடலுடன் இருக்கும்
பொழுது தான் உயிராத்மா தன் வலுவைக் கூட்ட முடியும். உடலை விட்டுப் பிரிந்தால் உயிராத்மாவில்
என்ன மணம் அதிகமாக உள்ளதோ அந்த மணங்களின் ஈர்ப்பிலே தான் சுழன்று கொண்டிருக்க முடியும்.
வளர்ச்சி இருக்காது...!
இதிலிருந்தெல்லாம்
விடுபட்டு மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாது
1.“பிறவியில்லா நிலை
அடைய வேண்டும்...!” என்ற முயற்சியை எடுத்து
2.அதன் வழி விண்ணுலக
ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து
3.விண்ணுலகில் அழியாது
வாழ்பவர்களே சப்தரிஷிகள்.
அந்த எல்லையைத்தான் நாமும் சென்றடைய வேண்டும்...!