ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2020

உயிருக்கு டெலிஃபோன் செய்ய வேண்டும்...!

மனிதனான பின் இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்...? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை உருவாக்க வேண்டும்...? என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நம் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அந்த அருள் ஒளி பெறும் தன்மையே உணர்த்துவதற்கே ஆலயம்.
 
நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்...! எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது.
 
கோபமாக இருந்தால் காளி... சலிப்பும் சஞ்சலம் கொண்டால் வெறுப்பும் வேதனையும் கொண்டு இதைப் போல் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயரை வைத்து ஆலயத்தில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
 
நாம் நுகர்ந்த அந்தந்த உணர்வே உடலை இயக்கினாலும் அதில் தீமை என்று வந்தால் அதை நீக்க அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவதற்கு
1.நாம் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று
2.ஆலயத்திலே ஒவ்வொருவரையும் இப்படி எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.
 
ஏனென்றால் இந்த உடலுக்குள் (அதாவது) உடலான குடும்பத்திற்குள் எல்லோரும் ஒன்றியே வாழுகின்றனர். எல்லோர் உணர்வுகளும் இங்கே உண்டு.
 
ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் ஐயா... என்று கேட்கும் பொழுது அந்த உணர்வு உடலுக்குள் அது ஒன்றிவிடுகின்றது.
1.ஒருவனுக்குக் காசு கொடுத்தாலும் அடுத்து ஒருவன் மீண்டும் ஐயா... என்பான்.
2.அவனுக்கும் காசைக் கொடுப்போம்
3.இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவர்கள் உடலில் எந்தத் தரித்திரம் ஆனதோ
4.அது எல்லாம் உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
நான் எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன்... கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டியாக ஆக்கிவிட்டான்...! நான் இல்லை என்று யாருக்குமே சொல்லவில்லை... ஆனால் என்னை ஆண்டவன் இப்படிச் செய்துவிட்டானே...! என்று தான் வேதனைப்படுகின்றோம்.
 
எல்லா ஆலயங்களுக்குச் செல்வோரும்... எல்லா மதத்திலேயும்... இப்படித்தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்...!” என்று புலம்புகின்றனர்.
 
ஆகவே ஆண்டவன் யார்...?
 
1.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவது நம் உயிரே. அதை ஆள்பவனும் உயிரே.
2.எண்ணியதை இறையாக்குகின்றான்... உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
3.அந்த உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது அதே வழியிலே நம்மை நடத்துகின்றான் என்ற நிலைகளை மறந்து விட்டோம்.
 
ஆக... ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்து நாம் உதவி செய்தாலும் அவனின் வேதனை உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி...?
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று முந்தியே டெலிஃபோன் செய்துவிட வேண்டும்.
 
எப்படி...?
 
1.தீமை என்ற உணர்வு வராது...
2.அதை நுகர்ந்து விடாதே...! என்று நம் உயிரான ஈசனிடம் சொல்லி விட வேண்டும்.
 
பின் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த வேதனைப்பட்டோர் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டும் அந்த அருள் வழி அவர்கள் பெற வேண்டும் என்று இந்த மாதிரி எண்ணி விட்டு அதற்ப்புறம் காசைக் கொடுத்தோ அல்லது மற்ற உதவிகளைச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகிறது... அவர்கள் வேதனை நமக்குள்ளும் வராது தடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எண்ணச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்...!