ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2020

கடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போல் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்

 
சூரியன் சுழற்சியாகும் பொழுது மற்ற உணர்வினைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றது. ஆனால்
1.உயிர் வழியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.உயிரின் துடிப்பின் நிலை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கொள்கிறது.
 
நஞ்சின் தாக்குதலால் தான் நெருப்பானது (வெப்பம்). நெருப்பாக உருவான பின் அந்த நஞ்சினை ஆவியாக மாற்றி விடுகின்றது.
 
இதைப் போன்று தான் நஞ்சின் தாக்குதலால் சூரியனாக மாறியது.
1.சூரியனாக உருவான பின் மற்றதைக் கவரும் பொழுது
2.தன் வெப்பத்தின் தணலால் நஞ்சினைப் பிரித்து விடுகின்றது.
3.பூமியில் அதனின் மோதலில் ஒளிக்கற்றைகளாகப் பரவச் செய்கிறது.
4.அனைத்து உணர்வுகளையும் அது இயக்கச் செய்கின்றது.
 
இதைப் போல் தான் மனிதனான நாம் தீமையினை அக்ற்றிடும் உணர்வினைச் சீராகப் பயன்படுத்தினால் நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வினை வளர்த்திடும் அருள் ஒளியாக நம் உடலிலிருந்து வெளிப்படும்.
 
அதன் வழி கொண்டு வாழ்ந்தால் அடுத்து பிறவியில்லா நிலை அடையலாம். எத்தகைய விஷத் தன்மை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.
 
1.வைரம் கடும் விஷத்தை எப்படித் தனக்குள் ஒளியாக மாறிக் கொண்டுள்ளதோ
2.இதே போல் நம் உயிரின் தன்மை ஒளியைப் பெருக்கும் அருள் சுடராக மாற்றி விடுகின்றது.
 
சூரியனால் வெப்பத்தை உருவாக்க முடிகின்றது. மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு கொண்டு வெப்பமில்லா ஒளிக் கற்றைகளை உருவாக்கிட முடியும்.
 
அதன் மூலம் மகிழ்ந்து வாழும்… மகிழச் செய்யும்… ஆனந்தப்படும்… என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வினை மாற்றிடும் தகுதி பெறுகின்றோம்.
 
ஏனென்றால் ஆறாவது அறிவினை உருவாக்கிய நிலைகள் கொண்டு இந்த உடலிலிருந்து “என்றும் ஏகாந்த நிலையை நமக்குள் உருவாக்குவதே…” நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் தியானிக்கும் இந்த உணர்வு.
 
ஆகவே இந்த உலகமே விஞ்ஞானத்தல் நஞ்சின் தன்மை அடையும் இந்தத் தருணத்தில்
1.நமக்குள் அந்த மகரிஷிகளின் அருளைப் பெருக்கி…
2.இந்த உடலுக்குப் பின் நஞ்சினை அகற்றிப் பேரருள் பேரொளி என்று அடையச் செய்யும் அத்தகைய தன்மையை
3.நாம் இப்பொழுதே பெறக் கற்றுக் கொள்தல் வேண்டும்.
4.அதை உருவாக்கும் வலிமையைப் பெறுதல் வேண்டும்.

அதைப் பெருக்குவதற்கே ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தைச் செயல்படுத்துகின்றோம்.