1.பரமசிவம்
ஆதியின் வான்வீதியில் ரூபங்கள்
இல்லாத நிலையில் ரூபமாக, திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்றும்,
ரூபங்கள் உருவாகக் காரணமாக இருந்த கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்றும்,
அது ஒன்றாக இணைந்து திடப்பொருளாகும் பொழுது “பரமசிவம்” என்றனர் ஞானிகள்.
பரம் என்பது எல்லை. பரம்பொருளாவதை பரமசிவம் என்றும் சக்தி சிவமாகின்ற நிலையை நாம்
தெரிந்து கொள்வதற்காக பரமசிவம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
பரம்பொருள் தன் அருகில் காந்தப்
புலன் மோதும் பொழுது சுழற்சியின் தன்மை அடைகின்றது.
தன் ஓடு பாதையில் சுழற்சியால்
ஈர்ப்பாவதும் தனது துருவப் பகுதியில் தனக்கு எதிர் முனையில் வருவதைக் கவர்வதும் கவர்ந்து
கொண்ட உனர்வை “வெப்பம்” தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.
2. சீவலிங்கம்
இத்தகைய நிலை பெறுவதைத்தான்
சீவலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.
“ஜீவனுள்ளதாக...,” ஒரு பொருள் உருவாகின்றது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக சீவலிங்கம்
என்று காரணப்பெயரை வைத்தார்கள்.
நாம் இன்று “சிவலிங்கம்” என்று சொல்லுகின்றோம். ஆனால், மெய்ஞானிகள் வைத்த
பெயரோ சீவலிங்கம். “ஜீவிக்கும் திறன் பெற்று.., தனக்குள் வளர்க்கும்
திறன் பெற்றது”.
பரம்பொருள் தனது சுழற்சியின்
பொழுது தன் துருவப் பகுதியில் எதிரில் வரும் தனது உணர்வினைக் கவர்ந்து தனக்குள் உள்
இழுப்பதும் இதற்குள் ஏற்படும் வெப்பத்தின் தன்மை கொண்டு பரம்பொருளுக்குள் வெப்பம் நடுமையம்
அடைகின்றது.
நடுமையைத்தில் வெப்பம் அடைந்து
தன் அருகிலே இருக்கும் நிலைகள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தன் அருகிலே இருப்பது அனைத்தையும்
அது அமிலமாக மாற்றுகின்றது.
பின் அதில் உள்ளது ஆவியாக
மாறி உறைந்து ஒரு திடப்பொருளாகின்றது. மேற்பரப்பில் கவரப்படும் அனைத்து சத்தும் கொதிகலனாகும் பொழுது கீழே இறங்குகின்றது.
உதாரணமாக, ஒரு இரும்பை உருக்கினோம்
என்றால் கீழ்பரப்பு உருகி கீழே இருக்கும் பாகம் அமிலமாக மாறுகின்றது. கீழ்பாகம் உருக மேல்பாகம் கீழே இறங்குகின்றது.
இதைப் போன்றுதான் பரம்பொருள்
தன் சுழற்சியாகும் பொழுது மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை அது நடுப்பாகத்தில்
வெப்பத்தின் தன்மை கூடி தன் அருகிலே இருப்பதை உருகச் செய்கின்றது.
உருகுவதால் அதன் உணர்வுகள்
கீழே இறங்குவதும் பரம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும் தான் கவர்ந்து
கொண்ட சக்தி இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும் உலோகத் தன்மைகளாக மாறுவதும் கல் மண்
பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஆவதினால்தான் “சீவலிங்கம்” என்ற காரணப்பெயரைச் சூட்டினார்கள்.
இவ்வாறு தனது வளர்ச்சியில்
கவர்ந்து கொண்ட நிலைகள் சிறு பொருளாக இருந்தது “பெரிய
பொருளாக..,” மாறுகின்றது. அப்படி உருப்பெற்ற
பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது.
பெரும் பொருளாக மாறும் பொழுது
அதனின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றது. தன் சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால் வெப்பத்தின் தன்மையும்.., ஈர்ப்பின் தன்மையும்..,
“அதிகரிக்கின்றது”.
3.ஈஸ்வரன் – “வெப்பமாக” உள் நின்று இயக்கும் நிலை
– கடவுள்
சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தைத் தன் ஓடு பாதையில் சேர்த்துக் கொள்கிறது. இதனால் வெப்பத்தின் “தணல்” அதிகமாகின்றது.
தன் அருகிலே இருக்கக்கூடிய
பொருள்களின் கலவைகளைச் சீக்கிரமாக மாற்றுகின்றது. இந்த
உணர்வின் தன்மை பாறைகளாகவும் உலோகங்களாகவும் மாறுபடுகின்றது.
உதாரணமாக, ஒரு இரும்பு திடப்பொருளாக
இருப்பதை நெருப்பில் போட்டால் அது அமிலமாக மாறுகின்றது. இதைப் போன்று பரம்பொருள் “மையத்தில் அமிலநிலை” உருவாகின்றது.
முதலில் நீராக இருந்தது. அதனில்
ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி ஒன்றாக இணைந்த அணுக்கள்
இரண்டறக் கலந்து ஒரு பொருளாக மாறியது.
அதே சமயம் அதனின் சுழற்சி
வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள்
உருகும் தன்மை அடைந்து அதனில் “உருமாற்றங்கள்” ஏற்படும் நிலைகள் பெற்றது.
இந்த நிலைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால்
உருவான நிலைகள். “கடவுள்.., என்ற தனித்தன்மை” இல்லை.
இயற்கையில் சந்தர்ப்பத்தால்
இணைந்த சக்தியின் நிலைகள் “எதிர்மறை.., கொண்டு இயக்கும் நிலைகளால்தான்..,
ஒன்றுடன் ஒன்று மோதி.., ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை.., உருவானது”.
கடவுள் என்பது வெப்பமாக உள்
நின்று தனது இயக்கத்தின் தொடர் கொண்டு தனக்குள் வருவதை “உருமாற்றி.., உணர்வை மாற்றி..,” பல நிலைகளை உருவாக்கின்றது.
உள் நின்று.., இயக்கும் வெப்பத்திற்குத்தான்..,
“கடவுள்” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
பிரபஞ்சம் உருவாகும் நிலையைச் “சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில்” ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.