
மகாபாரதத்தில் காட்டப்படுள்ள வியூகத்தின் தத்துவம்
ஒரு தவளை மற்ற வண்டுகளை உணவாக விழுங்குகின்றது.
வண்டுகளுக்குச் சிறகுகள் உண்டு.
தவளையின் வாயிலே சிக்கும் பொழுது ஒரு வண்டு தப்பித்துச் சென்று விட்டால்
1.அந்த வேதனையான உணர்வுகளை அந்த வண்டு சுவாசித்து
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு தாக்கிச் செல்லும்
உணர்வின் வேகங்கள் கூடி வண்டின் உயிரான்மாவிற்குள் இது விளைந்து
3.வேதனையினால் அதிகமான விஷத்தன்மை சுரக்கப்பட்டு அது
உயிராத்மாவில் சேர்ந்து
4.அடுத்து அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் “ஒரு தேளாக” அது ரூபம் பெறுகின்றது.
ஆனால் அதே சமயம் வண்டுகள் தவளையின்
வாயிலே சிக்கி அதை உணவாக உட்கொள்ளும் போது… வண்டுகளுக்கு எப்படிச் சிறகுகள்
முளைத்திருந்ததோ இதைப் போன்ற உணர்வின் பொறிகள் தவளையினுடைய தசைகளுக்குள் சேர்கின்றது.
வண்டின் உயிரான்மா தவளையின் ஈர்ப்புக்குள் செல்கின்றது. அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதனுடைய சக்தியை எடுத்து “வண்டு தவளையாகப் பிறக்கின்றது…”
இப்படிப் பல தவளைகளை விழுங்க எண்ணிய பாம்போ தன் விஷத்தின் தன்மையைக் கொட்டி அதைப் பலவீனப்படுத்தி அதற்குள் விஷத்தின் தன்மை சுரந்து
அதைத் தனது ஆகாரமாகச் சேர்த்து அதைத் தன் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.
எத்தனை விதமான வண்டுகளை அந்தத் தவளைகள் புசித்ததோ இதற்குள் சேர்த்துக் கொண்ட
அதனுடைய உயிராத்மாக்கள் அதனுடைய உணர்வின் நிலையில் கொண்டு பாம்பின் தசைகளுக்குள் போய்ச் சேருகின்றது.
1.தவளையின்
உயிரான்மா பாம்பாகப் பிறக்கின்றது.
2.பாம்பிற்குள் உணவாகச் சென்ற தவளையின் தசைகள் – வண்டின்
சிறகுகள் முளைத்து செல்களாக அது வளர்த்துக் கொண்ட
நிலைகள்
3.அந்தப் பாம்பு இறந்த பின் அடுத்து “பருந்தாகப் பிறக்கின்றது…”
பருந்தாக வரப்படும் பொழுது… முதலிலே பாம்பு
தவளைக்குள் தன் விஷத்தை எப்படிச் செலுத்தியதோ இதைப் போல
1.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு… பருந்திற்குள் இருக்கும் இந்த
விஷத்தினைக் கண்டாலே பாம்பு நடுங்குகின்றது..
2.ஏனென்றால்
அந்த விஷத்தின் நுண்ணிய அலைகளாக வந்த பின்
3.தன்னைப் பருந்து கொத்தி விடும்
என்று எதிர் நிலைகள் கொண்டு அதைக் கண்டாலே பாம்பு நகர்ந்து அப்பால் சென்றுவிடுகிறது.
இயற்கையின் நிலைகள்
கொண்டு இப்படிப் பல பல வேதனைகளை அனுபவித்து இந்த உயிருடன் ஒன்றியே நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.
எத்தனையோ போர் முறைகளைச் செய்து
மகாபாரதத்தில் வியூகத்தின் தத்துவத்தினைத் தனக்குள் அமைத்து… ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒன்றுக்குள் ஒன்று கலவைகள் மாறி மாறி… அதற்குத் தக்க உடலின் ரூபம்
பெறுகின்றது.
உதாரணமாக
புலி மானைத் தாக்குகிறது என்றால் மான் சாந்தமானது… புலியின் வேகமோ கடினமானது. மானை விழுங்க வேண்டும் என்று எண்ணி அதன் வலு கொண்டு புலி தாக்குகிறது. மானோ அதனிடமிருந்து விடுபட எண்ணுகின்றது.
இருந்தாலும்
புலி மானை அடித்துக் கொல்கிறது. அப்போது மானின் உயிரான்மா அந்தப் புலியின் உடலுக்குள் சென்ற பின் புலியின்
உடலைப் பெறும் தகுதி பெறுகின்றது.
1.ஏனென்றால் பெரும் வியூகத்திற்குள் ஊடுருவி…
2.“அதன் வலுவையே தான் கண்டான்…”
என்று மகாபாரதத்தில் தத்துவங்கள் உண்டு.
3.எந்த வியூகத்திற்குள் சென்றாலும் இந்த உணர்வின் வேகத் தொடர்கள் கவர்ந்து அதனின் உடலாகப் பெறுகின்றது.
மானின் சக்தியோ சாந்தம் புலியின் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அது பலவீனம் அடைகிறது வீரியத் தன்மையும்
குறைகின்றது. இப்படிப் பல மான்களை உணவாக உட்கொண்ட புலி அடுத்து… தாவர இன்ங்களை
உட்கொள்ளும் “காண்டாமிருகமாகப் பிறக்கின்றது..”
உதாரணமாக
மாவுடன் காரத்தைக் கலக்கின்றோம் என்றால் அதனுடைய செயலை இழந்து மாவுடன் சேர்த்து காரம் சுவை மிக்கதாக வருகின்றது. ஆக…
1.சுவையற்ற நிலைகள் இருப்பதைச்
சுவையான உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வு பெறும் நிலையாக
2.இப்படித்தான் உருமாறி உருமாறி “மனிதனாக வந்தோம்” என்பதை
மகாபாரதம்
தெளிவாக்குகின்றது.
இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எந்த வியூகத்திற்குள் செல்ல வேண்டும்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.