
“மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால் பலனில்லை
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல்
மூலாதாரத்தைத் தட்டியெழுப்பிச் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். ஆக்ஞை
இட்டு… பரவுலகத்தை
மேலே உச்சிக்குக் கொண்டு போய்… இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ…! என்று சொல்கின்றார்கள்.
ஆக… மூலாதாரம்,..! இந்த உடல் முழுவதற்கும் கீழே இழுக்கப்பட்டு,…இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு… இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து
பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். “மூலாதாரம் கீழே இருக்கின்றது” என்று கொண்டு போகின்றார்கள்.
ஆனால் மூலம் என்றால் என்ன…? என்றே தெரியாதபடி இருக்கின்றார்கள்.
1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத்
தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.
ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!
மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை
எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக்
கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது
செய்து விடுகின்றனர்.
“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு
செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது
ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சு வலித்தது என்பார்கள்.
நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்… ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப் பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள்
சொல்வார்கள்.
ஆனால் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத்
தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச்
செய்யும்,
குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART
WEAK… அந்த உணர்வின்
தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சில பேர்
குண்டலினி யோகா… அதற்காக இங்கே தொட்டுக் காட்டுகின்றேன் என்று புத்தகங்களைப் படித்துக் கொண்டு தெரியாத நிலையில்
செயல்படுத்துகின்றார்கள்.
அதன் விளைவு ஹார்ட் அட்டாக்… பிரமை பிடித்து ஞாபக சக்தி குறைந்து விட்டது… என்றெல்லாம் வரும்.
இந்தப் பயிற்சியை மேற் கொண்டோம்… அதனால் எங்களுக்கு இப்படி ஆனது என்று இது போன்று என்னிடம் ஒரு ஆறேழு பேர் வந்து சொன்னார்கள்.
இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையை… செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மையை உடலாக்குவது தான்…
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான்… இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம்
செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.
ஒரு தென்னை மரம் மற்ற மரங்களால்
வெயில் மறைக்கப்பட்டு அதனால் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன
செய்யும்…? வளைந்து
நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக்
கொள்ளும்.
அதைப் போல் தான் மனிதன் அந்த மெய் ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி
ஏங்கி எடுத்தல் வேண்டும்.
ஒரு ட்யூப் லைட்டில் (TUBE
LIGHT) அதற்குத்
தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது…
குறைந்தாலோ எரிவதில்லை.
இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி
இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.
2.”மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால்
பலனில்லை.
3.அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு
யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.
நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு
பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக்
கொள்ளுங்கள்.
1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு
போக வேண்டும்.
3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக்
கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க
வேண்டும்.
இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது
தான் “குண்டலினி
யோகா…”
அந்த உணர்வின்
தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது…
நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.