பாம்பு மிரட்டி நரி மிரட்டி
புலி மிரட்டி யானை மிரட்டி என்றெல்லாம் சில தாவர இனங்களைச் சொல்வார்கள். அதிலே ஒரு
பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேள் கொட்டாது.
உதாரணமாக ஈயம் பூசும் நமச்சாரத்தைச்
சுண்ணாம்புடன் கலந்தால் கேஸ் (GAS) உண்டாகும். தேள் கொட்டியது என்றால் அபப்டியே நசுக்கி
மோந்து பார்த்தால் விஷம் மேலே ஏறாதபடி கீழே இறக்கிவிடும்.
அதே சமயத்தில் கொடுக்கு
பட்ட நரம்பில் அந்த விஷம் இருந்தால் கடு கடு என்று இருக்கும். அதிலே சுண்ணாம்புடன்
சேர்த்த நமச்சாரத்தைப் போட்டு விட்டால் கடு கடுப்பு இருக்காது. சிறிது நேரம் தான் இருக்கும்.
இப்படி விஷத்தைத் தணியச்
செய்யும் பல பல பச்சிலைகள் உண்டு.
“சிரியா நங்கை” என்ற பச்சிலையை
வாயிலே போட்டு மென்றால் கசப்பாக இருக்கும். ஆனால் விஷம் இருந்தால் கசக்காது. அதை அதிகமாக
மென்று தின்று விட்டு கசக்கி நன்றாக மோந்து பார்த்தால் உடனே விஷம் குறையும்.
1.சுண்ணாம்பில் இதை நசுக்கி
கொஞ்ச நேரம் நுகர்ந்து பார்த்தால் மூளை பாகம் வரை இது சென்று
2.மேலே செல்லும் விஷத்தை
இது தடுத்து நிறுத்திக் கீழே இறக்கி விட்டு விடும்.
3.சிரியா நங்கைக்கு அந்தச்
சக்தி உண்டு.
இந்த மாதிரி ஒவ்வொரு பச்சிலைகளுக்கும்
ஒவ்வொரு விதமான விஷத் தன்மைகளைப் முறிக்கக்கூடிய சக்தி உண்டு.
பாம்பு ஒரு மனிதனைக் கடித்ததும்
ஐய்யய்யோ...! பாம்பு கடித்துவிட்டதே...! என்று பதறினால் அந்த விஷம் உடலில் ஏறி உயிர்
வெளியில் வந்த பின் பாம்பின் நினைவு கொண்டு பாம்பின் உடலுக்குள் சென்று அடுத்தாற்போல்
துரிதமாகப் பாம்பாகப் பிறக்கச் செய்யும்.
1.ஆனால் இது போன்ற விஷங்களை
எல்லாம் முறிக்கக்கூடிய வல்லமை
2.மனிதனின் ஆறாவது அறிவுக்கு
உண்டு என்று கண்டுணர்ந்த ஞானி இதைச் சொல்லியுள்ளான்
3.காலத்தால் அது மறைந்து
விட்டது.
விஷத் தன்மையிலிருந்து
மீள வேண்டும் என்ற உணர்வு கொண்டு இருப்பினும் அதைச் சீராகப் பயன்படுத்தாது வைத்திய
ரீதியிலும் தவறான ரீதியில் கொண்டு சென்று விட்டார்கள்.
1.எனக்குத் தெரிந்த உண்மை
அடுத்தவருக்குத் தெரியக் கூடாது என்று சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்
2.காலப் போக்கில் இன்று
முழுவதும் மறைந்து கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் “பாட்டி வைத்தியம்...”
என்று சொல்வார்கள்.
கைக் குழந்தைக்கு உடல்
நலம் சரியாக இல்லை என்றால் குழந்தை வெளிப்படுத்தும் மலத்தை வாயில் வைத்துப் பார்த்து...
அதனின் தன்மையை அறிந்து “அதற்குண்டான இன்ன மருந்தைக் கொடுத்தால் சரியாகும்...” என்று
முந்தைய காலத்தில் செய்வார்கள்.
ஏனென்றால் கைக் குழந்தையால்
ஒன்றும் சொல்ல முடியாது...
1.தன் உணர்வால் நுகர்ந்து
2.அந்த உடலில் வரக்கூடிய
மலத்தை வைத்து
3.எந்த வகையான மலமாக அது
இருக்கிறது (இன்று விஞ்ஞான முறையில் பரிசோதனை செய்வது போல்) என்று காண்பார்கள்.
4.கொடிய நோயாக இருந்தாலும்
அவர்கள் ஒரு பச்சிலையை அரைத்துக் கொடுப்பார்கள்... அந்த நோய் சரியாகிவிடும்.
காமாலை நோய் என்று இருந்தால்
அதற்கு என்று ஒரு பச்சிலையை அரைத்து மோந்து பார்க்கச் செய்வார்கள். அல்லது உள்ளங்கையில்
அதைத் தேய்த்து விடுவார்கள். அது வழியாக ஊடுருவிய பின் அந்த நோய் குறையும்.
அந்தக் காலத்தில் இது போன்ற
பச்சிலைகள் ஏராளம் உண்டு. குப்பை மேட்டில் எல்லாம் இருக்கும். இப்பொழுது அந்தப் பச்சிலைகளைக்
காணவே முடியவில்லை.
அக்காலத்தில் இருந்த பெரியோர்கள்
அதைச் சீராகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் விஞ்ஞான மருத்துவம்
வந்த பின் எல்லாம் மறந்து விட்டார்கள். என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்க ஆரம்பித்து
விட்டார்கள்.
பேதிக்கே போக வேண்டும்
என்றால் அதற்கு ஒரு பச்சிலை உண்டு. எடுத்து உள்ளங்கையில் தேய்த்துவிட்டார்கள் என்றால்
முகர்ந்தால் உடனே பேதியாகும். மருந்தே சாப்பிட வேண்டியதில்லை.
ஏனென்றால் பச்சிலைகளுக்கு
இவ்வளவு சக்திகள் உண்டு. காலத்தால் இவை எல்லாம் மறைந்தே போய்விட்டது.