மெய்ஞானிகள்
காட்டிய அருள் வழியில்
நாம் எண்ணத்தால்
எண்ணிய உணர்வுகள்
இங்கே ஒரு அணுவாக
மாறுகின்றது.
உதாரணமாக, ஒருவன்
நம்மைத் திட்டினான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்,
“நமக்குத் துரோகம் செய்தான், நம்மை ஏமாற்றினான், அவன் உருப்படுவானா” என்று எண்ணினால்,
அவன் உணர்வு நமக்குள் உண்டு, நம் உணர்வு அவனுக்குள் உண்டு, ஆனால், காற்றிலும் இது உண்டு.
நாம் எண்ணியவுடனே
அங்கே பதிவாக்கிவிடுகின்றது. ஆனால், அங்கே அவன்
உணவு உட்கொள்ளும் பொழுது புரையோடுகின்றது.
வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் விபத்தாகின்றது.
இதைப் போன்று,
நம் குழந்தை மேல் பற்று கொண்டு அவனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
ஆனால், “இப்படி இருக்கின்றானே” என்று வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குத்
தாக்கப்பட்டு, சிந்தனை இழந்து, அவனுக்கு விபத்தாகும், அல்லது கல்வியில் சிறப்பை இழக்க
நேரும்.
ஆனால், சரியாகப்
படிக்கவில்லை என்று “இப்படி இருக்கின்றான்” என்று அடிக்கடி எண்ணினால், இந்த உணர்வுகள்
அவனை மாற்றியமைத்து நல்லவனாகக் கல்வி கற்கும் நிலையை மறந்து, அவனை மறந்திடும் இந்த
நிலையைச் செய்யும்.
ஆகவே, ஒருவருக்கொருவர்
தொடர்பு கொண்டு,
எதன் உணர்வோ
அவனை வைத்து
நமக்குள் இதை
வளர்த்து, நம்முடைய எண்ணங்கள்
அவனைக் குறை
கூறும் உணர்வுக்கே சென்றுவிடுகின்றது.
இதைப் போன்ற
நிலைகளில் இருந்து மாற்றுவதற்குத்தான் வாழ்க்கையே தியானம்.
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருமே உங்கள் வாழ்க்கையையே தியானமாக்குங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை
உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்,
உங்கள் உடலில் உள்ள
எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.
வெளியே போகும் பொழுதும், தொழிலுக்குப் போகும் பொழுதும்
தியானித்துவிட்டுச் செல்லுங்கள். அங்கே சென்ற
உடனே இதே மாதிரி தியானியுங்கள், இரண்டு நிமிடமோ அல்லது ஐந்து நிமிடத்திற்குள்ளோ, அங்கே
தியானத்தை முடித்துக் கொள்ளலாம்.
தொழிலிலிருந்து
வீட்டிற்கு வந்தாலும், இதைப் போன்று அமைதிப்படுத்தி தியானித்துவிட்டு மற்ற நல்ல பேச்சுகளைப்
பேசிப் பழக வேண்டும். இப்படி ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால், தீமைகள் நமக்குள் வராது.