1. நோய்கள் எப்படிப் பரவுகின்றது?
ஒரு நோயாளி வேதனைப்படுகின்றான்.
எந்த உறுப்பில் நோயானதோ, அது வேதனையானதோ அந்த உறுப்பிலிருந்து வெளிப்படும் உணர்வு சொல்லாக
வரப்படும் பொழுது, அதை நாம் கேட்டு நுகரப்படும் பொழுது, நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன்
கலக்கின்றது.
பின், நோயாளிக்கு
எந்த உறுப்பில் நோயானதோ, அதே உறுப்புகளில் நம் உறுப்புகளிலும் நோயாகும் உணர்வுகள் வந்துவிடுகின்றது.
நமக்கு ஏன் வந்தது?
எப்படி வந்தது?
என்று நம்மால் அறிய முடியாது.
காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த உறுப்பில்
உருவாகியதோ, அதே உறுப்பில் இணைந்து அவருக்கு வந்த நோயை நமக்குள் உருவாக்கும்.
இதைப் போன்று
ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை அதிகமாக நேசித்து, அதன்
உணர்வை நாம் அதிகமாக ஏங்கிவிட்டால், அந்தத் தற்கொலை செய்த மனிதனின் உயிரான்மா நம் உடலுக்குள்
வந்து அது உணர்ச்சிகளைத் தூண்டும்.
ஆகவே நம்மை அறியாதபடி,
அவன் எப்படி இக்கட்டான நிலையானோ, அவன் சிந்தனை இழந்து தற்கொலை செய்து கொண்டானோ, அதே
உணர்ச்சிகள் நம்மைத் தூண்டி, நாம் ஏன் இறக்கின்றோம் என்று தெரியாதபடி, நமக்குள்ளும்
அந்தத் தற்கொலை செய்யும் உணர்வுகளைத் தூண்டும்.
உதாரணமாக, ஒருவர்
HEART ATTACK வந்து உடலை விட்டுப் பிரிகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மேல்
ஒருவர் அதிகமான பாசம் வைத்துக் கொண்டிருந்தால், அதே உணர்வுகள் நுகரப்பட்டு, அவர் மேல்
பற்று கொண்ட உணர்வுகள் அதைப் பற்றிவிடுகின்றது.
பின், அதைத்
துடைக்கத் தவறினால்,
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
நுகர்ந்து தியானிக்கத்
தவறினால்,
அவர் உடலுக்குள்
இந்த உணர்ச்சிகளைத் தூண்டி, இவருக்கும் HEART ATTACK வரும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், நோயாளி
வெளிப்படுத்தும் உணர்வுகள் இந்தப் பூமியில் பரவுகின்றது. கண் கொண்டு அவர்களைப் பார்க்கும்
பொழுது, ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது. அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை
நம் கண்ணின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, நம்மை நுகரச் செய்கின்றது.
நுகர்ந்த உணர்வோ
நம் உயிரிலே படுகின்றது. அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. பரிவுடன் பண்புடன் உதவி செய்கின்றோம்.
ஆனால், அவர் உடலிலிருந்த நோயான உணர்வுகள் நாம் பண்பாகச் செய்தாலும், நமக்குள் அந்த
வேதனை உணர்ச்சிகளையே தூண்டிவிடுகின்றது.
நாம் தவறு செய்யவில்லை.
நாம் எல்லோரும் அன்புடன்தான் பழகுகின்றோம். இதைப் போல வேதனையான உணர்வுகள் வந்தால்,
அதைத் தடுப்பதற்கு வழி வேண்டுமல்லவா.
2. நோய்களைப் பற்றாது, துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன்
பற்றவேண்டும்
நாம் தங்கநகை
செய்ய, செம்பு, வெள்ளி, பித்தளை மற்ற பொருள்களை இணைத்துத்தான் செயல்படுத்துகின்றோம்.
ஆனால், அடுத்த
நகை செய்யப்படும் பொழுது,
எப்படி திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோமோ,
அதைப் போல நாம்
சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.
நமது குருநாதர்
காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்து,
நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கச் செய்து, நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம் நினைவைச்
செலுத்த வேனண்டும்.
அப்பொழுது, தங்கத்தில்
திரவகத்தை ஊற்றியவுடன், செம்பும், வெள்ளியும் எப்பபடி ஆவியாக மாறி தங்கம் பரிசுத்தமாகின்றதோ,
அதைப் போல
நாம் அறியாது
நுகர்ந்த தீய உணர்வுகளை
வேக வைத்துப்
பிரித்து விடுகின்றது.
நம் ஆன்மா சுத்தமாகின்றது.
நம் உடலிலுள்ள
நல்ல அணுக்களை இப்படிக் காத்துக்கொள்ள முடியும். ஆக, தீமைகள் வரும்பொழுதெல்லாம் அவைகளை
நீக்குவதற்கு இப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது, தீமைகளைப்
பற்றற்றதாக்கி, துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிடுகின்றது.
துருவ நட்சத்திரத்தின்
ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் நிலை பெறுகின்றோம். நாம் அனைவரும் ஏகாந்த நிலை அடைய
முடியும். எமது அருளாசிகள்.