1. புற்று நோய்
பண்டைய காலங்களில்
நோயினால் வேதனைப்பட்டவர்கள் உண்டு, கேன்சர் என்ற நோயும் உண்டு. அன்று புற்று நோய் என்றார்கள்.
புற்று எப்படி
தனக்குள் கண் வைத்து
வளருகின்றதோ,
அதைப் போல எடுத்துக்
கொண்ட அணுவின் தன்மைதான்
தொடர் வரிசையில் தன் இனத்தைப் பெருக்கி,
மற்ற உணர்வின்
தன்மையைக் கொன்று கொண்டேயிருக்கும்.
2. எலும்புருக்கி நோய்
இப்பொழுது மனிதனாக
இருக்கும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் ஆன்மாவாக ஆகும் பொழுது, எதிர் நிலையான தன்மைகள்
பட்டவுடன், நஞ்சு கொண்ட உணர்வின் அணுவாகின்றது.
நஞ்சான அணுவாக அது விளைந்து, நமக்குள் இருக்கும்
இரத்தத்தை அது தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
உணவாக உட்கொண்டு
அதன் மலத்தை
நமக்குள் இடும்போது,
தசைகள் கரைந்து,
எலும்பு வரை ஊடுருவுகின்றது.
எலும்புக்குள்
இருக்கும் ஊனுக்குள்ளும் அணுக்கள் இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால், வாழ்க்கையில் நாம்
எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதிர்நிலையாகப்படும் பொழுது, பாசத்தால் வேதனைப்பட்டு நமக்குள்
இணைத்து கொண்ட உணர்வுகள் நம் எலும்புக்குள் ஊழ்வினையாகச் சேர்க்கப்படுகின்றது.
அப்படிச் சேர்க்கப்படும்
பொழுது, உணர்வின் ஆற்றல் பெருகும் பொழுது, இதற்குள் நெகடிவ், பாசிடிவ் என்று
எலும்புக்குள் உயிர் அணுக்கள் உண்டாகி,
அது நம் ஊனை
உணவாகச் உட்கொண்டு,
தன் மலத்தை வெளிவிடும்
பொழுது
எலும்புகள் உருகி,
எலும்புருக்கி நோய் உருவாகிறது.
3, விஞ்ஞானிகள் செய்யும் கிருமிப் போர்
ஆனால், விஞ்ஞான
அறிவு கொண்டு இதனை நீக்குவதற்கு எதிர் கிருமிகளை உருவாக்குகின்றனர். அதற்குண்டான ஊட்டச்
சத்தினைக் கொடுத்து, விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த அணுக்கள் உணவாக உட்கொண்டு,
மலத்தை அது இடும் பொழுது, உடலிலே உருவான தீய அணுக்களைக் கொல்கின்றது.
கழிப்பறையிலே
விளையும் புழுவை, நல்ல நீருக்குள் போட்டால் அது மடிந்துவிடும், நல்ல நீருக்குள் விளையும்
புழுவைக் கழிப்பறையிலே போட்டால் அதுவும் மடிந்துவிடும்.
ஆக, இதைப் போல
விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிகளை உருவாக்கி, “கிருமிப் போர்” என்ற முறைகளில் இன்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.
4. நோய்களை நீக்க மெய்ஞானிகள் பாய்ச்சும் விண்வெளியின்
ஆற்றல்
அன்று மெய்ஞானிகளோ
விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து, எதிர்நிலையான உணர்வு உருவாகும் அந்த நட்சத்திரத்தின்
உணர்வைத் தனக்குள் சுவாசித்து, அந்த ஆற்றல் மிக்க நிலையைத் தன் கண் பார்வையில் செலுத்தி, வாக்கின் சொல்லால் நோயுற்றவருக்குள்
ஊடுருவச் செய்தனர்.
உனக்கு இந்த
நோய் இல்லை.
இது நீங்கிவிடும்
என்ற உணர்வினை உடலில் பாய்ச்சி,
அந்த உணர்வினை
ஊழ்வினையாக்கி,
தீய வினைகளை
மாய்த்து, அது வளரும் பொழுது
எலும்புருக்கி
நோயும் அங்கே மடிகின்றது.
இப்படிச் செய்தனர்
அன்றைய மெய்ஞானிகள்.
புற்று நோயையும்
தன் கண் பார்வையில் விண்வெளியின் ஆற்றலை நுகர்ந்து, உணர்வின் ஆற்றலை அங்கே பாய்ச்சி
அதனை நீக்கியவர்கள் மகாஞானிகள்.
விண்ணின் ஆற்றலைத்
தனக்குள் பெருக்கி, தன் உணர்வின் மூச்சலைகளைப் பாய்ச்சி, தீமை விளைவிக்கும் உணர்வின்
தன்மையைத் தடைப்படுத்தி, நிறுத்தினார்கள். அதுதான் சதுர்த்தி என்ற நிலைகள். தன் வாக்கினைப்
அங்கே பாய்ச்சி தீமைகளை நீக்கினார்கள் அந்த மகா ஞானிகள்.
5. விண்ணுலக ஆற்றலை நமக்குள் சேர்க்க குருநாதர்
காட்டும் வழி
இதே போன்றுதான்,
நான் என்னையறியாது பல தீய செயல்களைச் செய்தாலும், தீய செயல்களாக எனக்குள் ஊழ்வினையாகப்
பதிவானாலும், அந்த உணர்வின்
தன்மைகள் எனக்குள் வளராது தடைப்படுத்தும் வழியை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
எமக்குக் காட்டினார்.
அவர் காட்டிய அருள் வழியில், விண்ணுலகை
எட்டிப்பார்த்து, அந்த உணர்வின் தன்மையை
எப்படிப் பெருக்க வேண்டும் என்றும், அந்த உணர்வின் நினைவலைகளை அங்கே பாய்ச்சி, அந்த
நினைவலைகளை எனக்குள் சுவாசிக்கச் செய்தார்.
இந்த உணர்வின்
ஆற்றலை எனக்குள் வினையாகச் சேர்த்து, இந்த உணர்வுகளை எமக்குள் பெருக்கும் பொழுது, முந்தைய
நிலைகள் ஊழ்வினையாக இருந்தாலும், அதன் செயலாக்கத்தை, தசைகளாக மாற்றும்,
தசைகளை உருவாக்கும் அணுக்களுக்குள்
நீ விண்ணின் ஆற்றலைச் சேர்த்து
இந்த வினையின்
தன்மையை உனக்குள் சேர்த்து
அந்த மெய்ஞானியின்
உணர்வலையை ஊழ்வினையாக இணைத்து
இதனை நீ சேர்த்துக்
கொள்
உணர்வின் நிலையை
வளர்த்துக் கொள் என்று
நமது குருநாதர்
கூறினார்.