ஒரு ஏழைத்
தொழிலாளி, வெறும்
சோற்றுக் கஞ்சியும், வெங்காயமும் சாப்பிட்டுவிட்டு, காலை முதல்
மாலை வரை கடப்பாரை, மண்வெட்டி சகிதமாக கடுமையாக உழைக்கின்றார்.
பாதாமும், பிஸ்தாவும் சாப்பிட்டு உடலை வளர்த்து, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடப்பாரையைக் கொடுத்து, வேலை செய் என்று கூறினால், அவரால்,
ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் வேலை
செய்ய முடியாது.
வேர்த்து விறுவிறுத்துப் போய்விடுவார்.
ஆக, ஏழை
தொழிலாளிக்கு, அன்று வேலை
பார்த்தால் தான் சம்பளம். சாப்பாடு எனும் பொழுது,
வேலை பார்த்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம்.
பணக்காரருக்கு, அப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்று அவசியமே இல்லை.
அதனால், அவரால்
சிறிது நேரத்திற்கு மேல் கடின வேலை செய்ய முடிவதில்லை.
ஆக, “உடலுக்கு வலு கொடுப்பது, நமது எண்ணங்களே” என்று நாம் உணர
வேண்டும்.
ஆக, எண்ணத்தின் வலு கொண்டுதான் அன்று மெய்ஞானி விண்ணின் ஆற்றலைப் பெற்றான். விண்ணிலே இன்று ஒளியின் சரீரமாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான்.
நாமும் அவர்களைப் போன்று, எண்ணத்தின் வலு கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று, அழியா ஒளிச் சரீரம பெறுவோம்.