ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 26, 2013

இன்று இருப்பது நாளை இல்லை... இயற்கையின் நியதி...!

1. இன்று இருப்பது நாளை இல்லை
இன்று நமது பூமியில், மனிதர்கள் உருவாகி பல நிலைகள் பெற்றாலும், பல நகரங்களை உருவாக்கினாலும், பூமியில் பூகம்பங்கள் ஏற்பட்டு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நகரங்கள் பூமிக்குள் புதைபட்டு விட்டன. இந்த நகரங்களுக்கு மேல், இரண்டடுக்கு, மூன்றடுக்கு கூட பூமிக்கு உள்ளே சென்றுவிட்டன.

பூகம்ப நிலைகளால், சிந்து நதியின் கரையின் ஓரங்களில் உருவான நகரங்களான, சிந்து மாகாணங்களில் ஒன்று, முதல் பூகம்பத்தில் உள்ளே சென்று விட்டது. இரண்டாவது பூகம்பத்தால், இன்னொரு நகரம் பூமியின் உள்ளே சென்றுவிட்டது. மூன்றாவது பூகம்பத்தால், மற்றொரு நகரமும் உள்ளே சென்றுள்ளது.

இதைப் போன்று, நகரங்கள் உள்ளே செல்லும் பொழுது, அழுத்தம் அதிகரித்து, கடல் நீர் பொங்கி நில அரிப்பு ஏற்பட்டு, அங்கே ஒரு மேடாகவும் மாறிவிட்டன.

நமது ஊர்களிலும் பூமிக்கடியில் சில நகரங்கள், சில ஊர்கள் புதைந்துள்ளன. கடல் அலைகள் பெருகப்படும் பொழுது, நகரங்கள் கடல் நீரால் மூடப்பட்டு விடுகின்றன.

இதைப் போன்று, கடலுக்கடியிலும் பல நகரங்கள் புதைந்துள்ளன. கடலுக்கடியில் பூமி கொதிக்கப்படும் பொழுது, கடல் அலைகள் ஓங்கி வளர்ந்து, மற்ற இடங்களை அடித்துச் சென்று, அமிழ்த்து விடுகின்றன. இதுவெல்லாம், இயற்கையின் சில மாற்றங்கள்.

இன்று இருப்பது நாளை இல்லை”, என்பதை நாம் அறிந்து கொள்தல் நல்லது.
2. உடல் பற்று வைத்துத்தான் நாம் வாழ்கின்றோம்
ஏனென்றால், நாம், நம் உடலில் பற்று வைத்துத்தான் வாழ்கின்றோம்  உயிர் பற்று யாரும் வைப்பதில்லை.

மனிதராக உள்ள நாம், பூகம்பத்தில் சிக்கி மரணமடையப்படும் பொழுது,  இதன் உனர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் அடைபட்டு கற்தேரைகளாக வளரும் சந்தர்ப்பம் வருகின்றது. 

கொதிகலனாகி ஏற்பட்ட பூகம்பத்தால் அமிழ்ந்த உயிர்கள், திலிருந்து மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், வெளியில் வந்தால்  எரிப்பூச்சிகளாக  மாறும் தன்மை வருகின்றது.

கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப, உயிரின் இயக்கம் எப்படி அமைகின்றது,  என்பதனை குருநாதர் தெளிவாக உணர்த்தியருளினார்.

பூமியில் பரிணாம வளர்ச்சியில், எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, மடிந்து, இன்று மனிதராகப் பிறந்துள்ள நாம், இப்பொழுது எப்படி வாழ்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

மனிதர் தாம் வாழ, செல்வத்தைத் தேடுகின்றோம். 
தேடிய செல்வத்தைப் பாதுகாக்க,
மனதைப் பறிகொடுக்கின்றோம்.
வேதனை என்ற உணர்வானால்,
உணர்வின் சோர்விற்குள் சிக்குகின்றோம். 

வேதனை என்ற நிலையாகி, நமக்குள் எத்தனையோ நோய்களை உருவாக்குகின்றோம். இப்படி இதன் உணர்வாகும் பொழுது, இதுவே நம்மை வழி நடத்திச் செல்லுகின்றது.

நமது பூமியே பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டு வருகின்றது. நமது பூமி மட்டுமல்ல, நமது பிரபஞ்சமும் மாறி வருகின்றது. பிரபஞ்சத்தில் உருவாகிய மனிதன், மின்னல் கடலில் தாக்கப்படும் பொழுது மணலாக மாறியதை பிரித்தெடுத்து, அதனைக் கதிரியக்கங்களாக மாற்றும் தன்மை பெற்றான்.

இப்படி எடுத்துக் கொண்டு, தான் வாழ, தன் நாட்டைக் காக்க, பிற உயிரினங்கள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று, மிருகங்கள் தன் இனத்தையே கொன்று புசிப்பது போன்று, மனிதர் தம் இனத்தையே கொல்லும் நிலை உள்ளது.

இன்று மனிதரிடையே விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்தாலும் கூட, மிருக உணர்விலிருந்து அவன் மாறவில்லை.
3. விஷத்தைப் பரவச் செய்து, மனிதரை மடியச் செய்யும் நிலைதான் இன்றைய உலகின் நிலை
ஆக, மனிதராகப் பிறந்தோம்,
தீமைகளை அகற்றும் வலிமை பெற்றோம்,
தீமையிலிருந்து விடுபடுவோம் என்ற உணர்வு
விஞ்ஞானத்திலும் சரி, அரசாங்க நிலைகளிலும் சரி, மனிதர்கள் உருவாக்கவே இல்லை.

பிறரைத் துன்பப்படுத்துவதும், துன்பப்படுவதும் என்ற உணர்ச்சிகளில் மனித நிலைகள் மாறி, மனித உடலுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வுகள், இன்று, காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது.

இது போன்ற உலகில்தான், நாம் வழுகின்றோம். இன்னும் சிறிது காலத்தில், பூமியின் சிதைவு எவ்வாறு ஆகும் என்று சொல்ல முடியாது.
விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்,
தனது நாட்டைக் காக்க,
உலகெங்கிலும் விஷத்தின் தன்மையை உருவாக்கி,
விஷத்தைப் பரப்பி, ஒரு நொடிக்குள்
மனிதரை மடியச் செய்திடும் நிலை உள்ளது.

இதனால் இன்று விஷத்தைத் தாங்கிய உயிரணுக்களாக வெளிவருவதும், உயிரணு வெளிவந்த பின், விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் உடலாக உருவாக்கும் தன்மை, விஞ்ஞான அறிவால் ஏற்பட்டுவிட்டது.

இன்று மனிதராக இருக்கின்றோம், விஷத்தை நுகரப்படும் பொழுது, மீண்டும் விஷ ஜந்தாக மாறும் நிலைகளே, உருவாகி வருகின்றது என்பதனை யாரும் மறந்திட வேண்டாம்.

ஆகவே, இந்தத் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில், நாம் அனைவரும் வாழ்வோம்.