1. நம் சகஜ வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சந்தர்ப்பங்கள்
வாழ்க்கையில் நாம்
ஒருவருடன் தொழிலுக்காகச் செல்கின்றோம்; அவருடன் ஆசாபாசத்துடன் பேசுகின்றோம்; தொழில் செய்தால்
லாபகரமாக இருக்கும் என்று எண்ணி, அவருடன் தொடர்பு கொள்கிறோம்.
அதே சமயத்தில்
நம்மிடம் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத் துடிப்பைத் தூண்டியவர், அவருக்கு
எதிர்பாராத வகையில் தடை ஏற்பட்டுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அதனால் அவர்
வேதனைப்பட்டு, “நாம் வாக்கு
கொடுத்தோமே, செயல்படுத்த
முடியவில்லையே, அந்த மனிதன்
என்ன சொல்வான்” என்று தன்
கௌரவத்தைக் காத்திடும் உணர்வுடன் இணைக்கப்படும்பொழுது, “நாளை
என்னைக் குறைவாக நினைத்துவிடக்கூடாதே”
என்று ஒவ்வொரு
நிலைகளிலும் எண்ணி வேதனைப்படுவார்.
இந்த வேதனை என்ற உணர்வு, அது நஞ்சு.
அதனுடன் சேர்த்துக் கொண்ட மனம், “இப்படிச் சொல்வார்களே, இப்படிச் செய்வோம் என்று எண்ணினோமே” என்ற உணர்வுகளை எடுத்தபின் இந்த உணர்வு கலந்த
வித்தாக, இந்த
நினைவின் அலைகள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
ஆனால் அவர் செய்த
நிலைகளில் இந்த சந்தர்ப்பம், அந்த நண்பனிடத்தில் சொன்ன நிலைகளை எண்ணும் பொழுது,
“நாளை நம்மை
அவமதித்துப் பேசுவானே,
மதிக்கமாட்டானே” என்ற இந்த
உணர்வுகள் கலந்து,
இந்த உணர்வின்
நிலைகள் ஓர் வித்தாக மாறி,
அவர் உடலுக்குள்
பதிவாகிவிடுகின்றது.
ஆக முதலில் சொன்ன
நண்பரோ, இவர்
வருவார் என்றும், “தன்னுடன் கூட்டாகத் தொழில் செய்ய வேண்டும் என்று
எண்ணினேன், அவர், நல்ல முறையில் வந்ததால் நல்ல பாதை கிடைத்தது” என்று இவரின்
மகிழ்ச்சி பலரிடம் சொல்லி வைப்பார்.
அப்பொழுது, உணர்வின் நிலைகள்
கொண்டு, அவருக்கு
ஆனந்தமும் சொல்லிய நிலைகளில் இருக்கும். ஆக, இனி தொழிலில் முன்னேறலாம் என்ற மகிழ்ச்சியான உணர்வை எடுத்து
வைத்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
2. நம்மையறியாமல் நமக்குள் வரும் தீமையான வினைகள்
ஆனால் முதலில்
சொன்னவரின் சந்தர்ப்பம், தன்னால் செயல்படுத்த முடியாத நிலைகளில், குறை ஏற்பட்டால் “அவரை ஏமாற்றிவிடுவோமோ” என்ற நிலைகள் வந்தவுடன்,
அச்ச உணர்வுகள்
உந்தப்பெற்று
அதனால் பய
உணர்வுகள் தனக்குள் கலந்தவுடனே,
சிந்திக்கும்
திறன் இழந்து,
தீயவித்துக்கள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
யாரை நினைத்து
யாருக்குச் சொல்லவேண்டும் என்று
எண்ணினாரோ, ஊழ்வினையாகப் பதிவாகி, அந்த நண்பனை எண்ணும்பொழுது, “அவன் முகத்தில்
எப்படி விழிக்கிறது” என்ற இந்த பய உணர்வுகள், அவரை
நினைக்கும்பொழுது பயந்து போகச் சொல்லும்.
முதலில் சொல்லி ஆசையை ஊட்டிவிட்டுச் சென்றவர், சொன்ன கெடுவுக்கு வராவிட்டால், “என்ன காணோமே” என்ற நிலை வரப்படும்பொழுது, நாம் அவரைத்
தேடிச் செல்கின்றோம்.
இவரைக் கண்டவுடன், “என்ன பதில்
சொல்வது” என்று இந்த
அச்ச உணர்வு இவரைப் பார்க்கவிடாது அவர் ஒதுங்கிச் செல்வார்.
அப்படி ஒதுங்கிச் சென்றால், நாம் அவரைப்
பார்த்து, “நம்மை மோசடி
செய்ய வந்தவன் போல் இருக்கிறது, அதனால்தான் இப்படி விலகிச் செல்கின்றான்”, என்ற உணர்வுகள் நமக்குள் புது
வித்தாக விளைந்துவிடுகின்றது.
ஆனால், இந்தத் தொழில் செய்து முன்னேறுவேன் என்ற எண்ணத்தைக் கொண்டு ஏற்கனவே நாம் அடுத்த
நண்பர்களிடத்தில் ஒலிபரப்பு செய்திருப்போம்.
ஆக, இந்த வித்தின் தன்மை வரப்படும்பொழுது, இந்த எண்ணத்திற்கு
மாறாக வந்தவுடன் நாம் வேதனைப்படுவோம்.
அதே சமயத்தில், “அடுத்தவர்கள்
நம்மை இப்பொழுது மதிக்கமாட்டார்களே, இவர் வேலையே இதுதான்” என்று மனம்
சங்கடப்படும் நிலையில், தன்னுடன் சகோதரர்களோ, தாய் தந்தையரோ, தன்னுடைய
நண்பர்களோ,
“ஆசை
காட்டுகிறவன் கையிலே சிக்குகின்றாயே,
அவர்கள் சொல்லியது
போல் ஆகிவிட்டதே”
என்ற வேதனை வரும்.
“அன்று அவர்
சொன்னார், இன்று
நடக்கவில்லையே”
என்ற எண்ணங்கள்
இங்கு ஓங்கி வளர்ந்தவுடனே,
முதல் நண்பரின்
சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட நிலைகள்,
“செயல்படுத்தமுடியாது, அவரைக் கெடுத்துவிடக்கூடாது என்று
நாம் சொன்ன
நிலைகளுக்கு,
அடுத்து நம்மை
மதிப்பு குறைவாக எண்ணுவார்களே”
என்று தன்னைக்
காத்திடும் நிலைகள் கொண்டு,
உண்மையைச் சொல்லாமல் மறைத்து விடுவார்.
3. நமக்குள் எதிரியான உணர்வுகள் சேர்ந்துவிடுகின்றது
மறைத்தவுடனே, அடுத்து இவரின் நிலைகள், “இதெல்லாம்
வேண்டாம், பார்த்துச் செய் என்று சொன்னார்களே” என்ற உணர்வுகள்
அவருக்குள் வித்தாகி, இந்த உணர்வின் தன்மை வலுவாகின்றது.
அந்த எண்ணங்கள் இங்கே ஓங்கி வளரப்படும்பொழுது இங்கு
எதிரியான உணர்வுகள் சேர்க்கப்பட்டு, இப்படி உணர்வின் தன்மைகள் மாறுகின்றது.
நாம் குழம்பு
வைக்கும்பொழுது, அதிலே எல்லாப் பொருள்களும், கலவை சமமாக இருந்தால் சுவையாக இருக்கும். ஆனால், புது உணர்வுகள்
மாறப்படும்பொழுது, இந்த குழம்பின் சுவை மாறுவது போன்று, இவரின் உணர்வின்
நிலைகள் வித்தாக மாறுகின்றது.
ஆகவே நாம் எண்ணிய எண்ணங்கள், அது
வித்தாக (வினையாக) மாறி, அங்கே எதிரியாக உருவாகின்றது.
அதே சமயத்தில்
நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள், ஊழ்வினையாகப் பதிவாகி, வினைக்கு நாயகனாக நமது உடலில் இருந்து
வரக்கூடிய மணம், அது உருவாகிவிடுகின்றது.
இந்த மணமே, நாம்
சிந்திக்கும்பொழுதெல்லாம் வேதனையும், நாம் சுவாசிக்கும்பொழுது உடல் உறுப்புகள் சீராக
இயங்காதபடி, நாம்
எடுத்துக் கொண்ட கலக்க உணர்வுகள், நம் உயிரின் நினைவலைகளுக்கு இயக்குகின்றது.
அது நாம்
சுவாசிக்கும் உணர்வின் நிலைகளுக்கு வரப்படும்பொழுது,
அது விரிவடைந்து இயக்கும் தன்மை குறைந்து,
அதற்குள் நாம் எடுத்துக்கொண்ட
நிலைகள்
சரியாக
விரிவடையும் பொழுது அதனுடைய அழுத்தத்தை,
வெளித்தள்ளும் நிலையை இழந்துவிடுகின்றது.
அப்படி இழந்துவிட்டால், உள்ளே சிறு
துகள்கள் நெருங்கி, அதே சமயத்தில் சுவாசப்பைக்குள் அதாவது
நுரையீரலுக்குள் இருக்கும் இந்த உணர்வுகள் பற்களைப்போன்று, அது அழுத்தி
சிறிதும் இல்லாதபடி, வெளி உந்தும் நிலையிலும், அதனை வழித்திடும்
நிலைகொண்ட நுரையீரலில் இவைகள் சிறுகச் சிறுக தேங்கிவிடுகின்றது.
அந்தத் தேங்கிய நிலைகள், ஒரு பசப்பு
உண்டான நிலைகள் மேலே பட்டால், நமக்குள் அரிப்பு ஏற்படுவதுபோல, உள்ளே அந்த
நுரையீரலில் அந்த உணர்ச்சிகள் தூண்ட, நீர் கோர்த்து, அந்த சுவாசப்பைகளில் இது நீராக வடியத் தொடங்கிவிடுகின்றது.
சலிப்பு என்ற
நிலைகளை எடுத்துக் கொண்டால், உப்பு அதிகமாகி விடுகின்றது, சலிப்பு
என்பது உப்பின் சத்து. நாம் நைப்பு என்று சொல்லுகின்றோமே, இதைப் போல
உணர்வுகள் மாறி, சலிப்பு என்ற நிலைகள் அடையப்படும்பொழுது,
இந்த உறுப்புகள்
நீர் கோர்த்து,
அந்த சுவாசப்பை
சரியாக இயங்காதபடி
ஆஸ்மா போன்ற நோய்கள் வரும்.
அடிக்கடி
சலிப்பின் தன்மையை அடைய நேர்ந்தால்,
உப்புச் சத்தின்
நிலைகள் இரத்தத்தில் சேர்க்கப்பட்டு,
சிறுநீரகம் சரியாக இயங்காத நிலைகள் அடைந்துவிடுகின்றது.
சிறுநீரகம் சரியாக இயங்கவில்லையென்றால், நாம் எடுக்கும் உணர்வுகள், ஆன்மாவில் சேர்ந்த சுவாசம், இதைப்பிரிக்கும்
நிலை இழந்து, நாம்
எடுக்கும் சலிப்பின் தன்மைகள் இரத்தத்துடன் கலந்துவிடுகின்றது.
அப்பொழுது, நாம் உணவாக
உட்கொள்ளும் அல்லது நமது எண்ணத்திற்குள் கலந்து செல்லும்
அந்தத் தீய
விஷத்தை,
இரத்தத்திற்குள் சேரவிடாமல் பிரிக்கும் செயலை
இந்தச் சிறுநீரகம்
இழந்து
விடுகின்றது.
நம் ஆன்மாவில் பிறர்
எண்ணும் உணர்வுகள் கவரப்பட்டு, அது ஊழ்வினையாகப் பதிந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்குள்
இந்த ஆன்மாவாக மாற்றியபின், இது சுவாசிக்கும் உணர்வுகள், நம் உணவுடன் கலந்து, அது இரத்தத்துடன்
கலந்து வந்தாலும், இது அதிகமாகச் சேர்ந்த நிலையில், வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால், நமக்குள்
இருக்கும் சிறுநீரகம் இந்த நஞ்சினைப் பிரிக்கும் செயல் இழந்துவிடும்
6. அசுத்த இரத்தம் உடலில் பரவுகின்றது, நாம் நஞ்சின்
தன்மை அடைகின்றோம்
அது செயலிழக்கப்படும் பொழுது, அறுசுவை உணவு
உட்கொண்டாலும், சுவை
அற்றதாக நம் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து,
யார் சமைத்துப் போட்டர்களோ,
அவருடன் சண்டையிடும் நிலையும்,
வெறுப்பும், வேதனையும்
அடைகின்ற தன்மை அதிகமாகும்.
அதிகமாகும்பொழுது, மனிதனின் பரிணாம
வளர்ச்சியின் நிலைகளில், நஞ்சினை நீக்கிடும் இந்த ஆறாவது அறிவின்
தன்மையை, முழுமையாக, நஞ்சின் தன்மையாக ஆக்கிவிடுகின்றது.
ஆக, நமக்குள் தீய வினைகளாகச் சேர்ந்து, நாம் எப்படி பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து
வந்தோமோ, மீண்டும் கீழான நிலைக்கே, உயிரின் தன்மை நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.
புழுவிலிருந்து
மனிதனாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சினை நீக்கி வந்தோம், மனிதனான பின்
இவ்வாறு நஞ்சினை நுகர்ந்து வளரும் நிலைகள் வந்தால், மீண்டும் நஞ்சு கொண்ட உயிரனங்களாக நம் உயிர்
நம்மை உருவாக்கிவிடும்.
இந்தத் தீயவினைகளை
(வித்துகளை) வளரவிடாமல் தடுக்கவேண்டுமா இல்லையா?
அதற்குத்தான், வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம்
தீமைகளைக் காணுகின்றோமோ, நுகர்கின்றோமோ அப்பொழுதே அதை வளரவிடாமல் சதுர்த்தி
செய்யவேண்டும். அதற்குத்தான் ஞானிகள் விநாயக சதுர்த்தியை உருவாக்கிக்
கொடுத்துள்ளனர்.
நாம்
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இயற்கையில் விளைந்தவற்றை உணவாகப் புசித்து
வந்துள்ளோம்.
ஆனால் மனிதனான பின்,
இயற்கையில் விளைந்த அனைத்தையும்
வேகவைத்து, சுவையாக்கி
உணவாக உட்கொள்கின்றோம்.
தாவர இனத்தில் விளைந்ததை “வேக வைத்துவிட்டால்” அது
மீண்டும் முளைக்காது.
இதைப் போன்று நாம்
நமது வாழ்க்கையில், வேகாநிலை அடைந்த துருவ நட்சத்திரம், சப்தரிஷி
மண்டலங்களில் இருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை
உயிர்வழி கவர்ந்து, “அதைச் சுவாசித்து”,
நமது இரத்தங்கள் முழுவதிலும்
செலுத்தி,
உடல் உள்ள எல்லா அணுக்களிலும் இணைக்கச் செய்யவேண்டும்.
அப்படி இணைக்கும் பொழுது, நம்மையறியாது
நுகர்ந்த, நுகரும் தீமைகளை, தீய வினைகளை துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் வேகவைத்து, நஞ்சை
நீக்கிவிடுகின்றது.
அதன்வழி கொண்டு, நமக்குள் ஒளியான
உணர்வுகளை வினைக்கு நாயகனாக்கி, ஒளியின் தன்மையாக, பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
அனைவரும் பெறவேண்டும் என்று
தவம் இருப்போம். மகரிஷிகளின்
அருள்வட்டத்தில் இணைவோம். மகிழ்ந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.